ஒரு தொழில்நுட்ப நிறுவனம் சமீபத்தில் ஒரு ஜூனியர் டெவலப்பர் பதவிக்கு ஒரு விண்ணப்பதாரரை கூட தேர்வு செய்யாதது குறித்து ரெடிட் தளத்தில் தனது ஏமாற்றத்தை அந்நிறுவனம் பதிவு செய்துள்ளது. அந்த பதிவில், "சுமார் 12,000 பேர் வேலைக்கு விண்ணப்பித்ததாகவும், அதில் 450 பேர் நேர்காணல் செய்யப்பட்டதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இருப்பினும், அதிக எண்ணிக்கையிலான விண்ணப்பதாரர்கள் அடிப்படை தர்க்கத்தை உண்மையிலேயே புரிந்து கொள்ளாமல் குறியீட்டுக்கு செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகளை பெரிதும் நம்பியிருப்பதாகக் கூறி, இறுதியில் யாரையும் பணியமர்த்தவில்லை.
அந்நிறுவனம் வெளியிட்டுள்ள பதிவில், "சமீபத்தில் நாங்கள் LinkedIn இல் ஜூனியர் ஃபிரான்டென்ட்/பேக்கெண்ட் டெவலப்பர்கள் மற்றும் QA பணிகளுக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தோம். இந்தப் பணிக்கு ரூ.20 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும் என தெரிவித்தோம். இதையடுத்து, இப்பணிக்கு 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். அதில் போதுமான திறன், பணிக்கு பொருந்தாத விண்ணப்பங்கள் என 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. இது கடுமையாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக அல்ல. முன்னதாகவே ரெஸியூமை திருத்துவது என்பது எங்களின் நேரத்தை மிச்சப்படுத்தும். அவர்களை நேர்காணலுக்கு அனுப்பி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.

மேலும், மூன்று விகிதத் திறன்கள் வரை GPT பயன்படுத்த அனுமதித்தோம். ஆனால், விண்ணப்பதாரர்கள் தாங்கள் எழுதிய கோடுக்கு பதிலளிக்க முடியவில்லை. குறிப்பாக Time/Space Complexity பற்றி கேட்கும்போது யாருமே பதில் தரவில்லை. மேலும், பல விண்ணப்பதாரர்கள் AI-இல் இருந்து ஒரு வரியை கூட புரிந்து கொள்ளாமல் அப்படியே நகல் எடுத்து ஒட்டுகிறார்கள். ஒருவராவது, தாங்கள் எழுதியதை உண்மையிலேயே புரிந்து கொண்டுள்ளார்களா..? என்பது சந்தேகமாக இருக்கிறது. நாங்களே நம்முடைய வேலைவாய்ப்பு செயல்முறையில் தவறு செய்கிறோமா என்ற கேள்வி எழுகிறது.
இந்நிறுவனத்தின் பதிவு தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. அதில் ஒரு பயனர், "உங்களுடைய வேலைவாய்ப்பு முறையைத் (interview process) சீராய்வு செய்ய வேண்டும். 450 மணி நேரம் செலவழித்து ஒரே ஒரு Developer-ஐ தேர்வு செய்வது நேரத்தை வீணடிக்கிறது. பணிக்குழுவின் செயல்முறை மிகவும் செயலற்றதாக உள்ளது. விண்ணப்பதாரர்களைத் குறை கூற வேண்டாம். உங்கள் எதிர்பார்ப்பு மற்றும் பணிக்கு இடையே மிகப்பெரிய இடைவெளி உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளித்த அந்நிறுவனம், "பணியில் சேர்ந்த பிறகு எப்படியும் AI-ஐ தான், பயன்படுத்தப் போகிறார்கள். அதனால், அவர்கள் இண்டர்வியூவில் AI பயன்படுத்தக் கூடாது என்று கூறுவதற்கும் அர்த்தமில்லை. ஆனால், ஒவ்வொரு வரியிலும் உள்ள தார்மீகத் தளத்தையும், தீர்வையும் புரிந்து கொண்டிருக்க வேண்டும். அதுதான் எங்களுடைய ஒரே கவலை" என தெரிவித்துள்ளது.
இந்நிறுவனத்தின் விளக்கத்திற்கு கருத்து தெரிவித்துள்ள பயனர் ஒருவர், "முழுமையாக ஒத்துக்கொள்கிறேன். இன்றைய விண்ணப்பதாரர்கள் அடிப்படை அம்சங்களை தவறவிட்டு இருக்கிறார்கள். உங்களுடைய HR குழு ஒரு ரெஸ்யூம் ஷார்ட்லிஸ்டர் மற்றும் ஒரு தொழில்நுட்ப அசைன்மெண்ட் சுற்றத்தை F2F-க்கு முன் கொண்டு வரலாம்" என தெரிவித்துள்ளார். மற்றொருவர், "இதை விண்ணப்பதாரர்களால் மறுக்க முடியாது. மேலும், அவர்கள் இதனை ஒப்புக்கொள்ளவும் தயாராக இல்லை. AI முழுவதுமாக நம்புகிறார்கள் என்றும். எல்லோரும் வேலைவாய்ப்பு செயல்முறை அல்லது சம்பளத்தையே குறை கூறுகிறார்கள்.
AI உதவியுடன் கற்றுக்கொள்வது சரி தான். ஆனால், அதைப் புரிந்து கொள்ளாமலே பயன்படுத்துவது நீண்ட காலத்தில் செயலற்ற முடிவுகளை தரும்.நிறுவனங்களுக்கு தற்போது தேவை, உண்மையில் புரிந்துகொள்ளும் நிபுணர்கள் மட்டும் தான். வெறும் Copy - Paste செய்யும் பணியாளர்கள் அல்ல என்பதை இந்நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications