பாரத் ரசாயன் நிறுவனம் பூச்சி கொல்லிகள் மற்றும் வேளாண் சார்ந்த இராசயனங்கள் துறையில் உள்ள நிறுவனம். பொதுவாக பங்கு சந்தையில் நீண்டகால நோக்கில் முதலீடு செய்தால் அது நல்ல லாபகரமானதாக இருக்கும்.
அதற்கு சிறந்த உதாரணம் தான் பாரத் ரசாயன் நிறுவனம். கடந்த 20 ஆண்டுகளில் இந்த பங்கின் விலையானது 20 ரூபாயில் இருந்து 9,895 ரூபாயாக அதிகரித்துள்ளது.
இந்த காலகட்டத்தில் சுமார் 500 மடங்கு அதிகரித்துள்ளது. இந்த பங்கின் விலையானது கடந்த 6 மாதங்களில் இந்த பங்கின் விலையானது சுமார் 12,682 ரூபாயில் இருந்து, 9,985 ரூபாயாக குறைந்துள்ளது. இந்த காலகட்டத்தில் 20% சரிவினைக் கண்டுள்ளது.
ஓராண்டில் லாபம்
கடந்த ஒரு ஆண்டில் இந்த மல்டி பேக்கர் பங்கு விலையானது 8,710 ரூபாயில் இருந்து, 9,985 ரூபாயாக அதிகரித்துள்ளது. அதன் பங்குதாரர்களுக்கு சுமார் 15% லாபத்தினை கொடுத்துள்ளது. இதே கடந்த 5 ஆண்டுகளில் 1910 ரூபாயில் இருந்து, 9985 ரூபாயாக அதிகரித்துள்ளது. இந்த காலகட்டத்தில் 425% அதிகரித்துள்ளது.
10 ஆண்டுகளில் லாபம்
கடந்த 10 ஆண்டுகளில் இந்த பங்கின் விலையானது 110 ரூபாயில் இருந்து, 9,985 ருபாயாக அதிகரித்துள்ளது. இந்த காலகட்டத்தில் 8,975% லாபத்தினை கொடுத்துள்ளது. அதே போல கடந்த 20 ஆண்டுகளில் 20 ரூபாயில் இருந்து 9,985 ரூபாயாக அதிகரித்துள்ளது. இந்த காலகட்டத்தில் கிட்டதட்ட 500 மடங்கு அதிகரித்துள்ளது.
5 ஆண்டுகளுக்கு முன்பு முதலீடு
5 ஆண்டுகளுக்கு முன்பு இந்த இரசாயன பங்கில் 20,000 ரூபாய் முதலீடு செய்திருந்தால், இன்று அது 1 லட்சம் ரூபாயாக மாறியிருக்கும். இதே 10 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கியிருந்தால், இன்று அதன் மதிப்பு 18 லட்சத்திற்கு மேல். இதே 20 ஆண்டுகளுக்கு முன்பு முதலிடு செய்திருந்தால், இன்று அதன் மதிப்பு கோடிக்கும் மேல்.
கடந்த அமர்வில் என்ன நிலவரம்?
கடந்த அமர்வில் பாரத் இரசாயன் நிறுவனத்தின் பங்கு விலை சற்று குறைந்து, என்.எஸ்.இ-ல் 9,965.15 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதே பி.எஸ்.இ-ல் 9,998 ரூபாயாகவும் முடிவடைந்துள்ளது. இதன் 52 வார உச்சம் 15,100 ரூபாயாகும். இதன் குறைந்த பட்ச விலை 8,602 ரூபாயாகும்.


Click it and Unblock the Notifications