பெங்களூருவில் ஒரு வசதியான இடத்தில் வீடு வாடகைக்கு கிடைப்பது என்பது பெரும்பாலான வெளிநாட்டு பணியாளர்களுக்கும், நகரம் சார்ந்துள்ள டிஜிட்டல் தொழில்நுட்பர்களுக்கும் ஒரு சவாலாகவே இருக்கிறது.
இந்நிலையில், பெங்களூருவில் உயர்ந்த வீட்டு வாடகையை பல வாரங்களாக சந்தித்து வந்த கனடாவைச் சேர்ந்த டிஜிட்டல் கிரியேட்டர் கேலப் ஃப்ரீசன் (Caleb Friesen), தற்போது தன்னுடைய வாழ்க்கைக்கு ஒரு வசதியான இடத்தை கண்டுபிடித்துள்ளார். அவர் தனது எக்ஸ் தளத்தில், பல வாரங்களாக தேடிய பிறகு, இந்திரா நகரில் ஒரு வீடு கிடைத்துவிட்டது. முழுமையாக அமைத்து வைக்கப்பட்ட வீடு, அதுவும் என் பட்ஜெட்டுக்குள் வாழ்க்கை இனிமையாக உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

மேலும், அந்த வீட்டு உரிமையாளர் மிகவும் அன்பான, உள்ளூர் குடும்பமாக இருக்கின்றனர். அவர்கள் வீட்டுக்காக மூன்று மாத வாடகையை மட்டுமே டெபாசிட்டாக கேட்டதாக அவர் கூறியுள்ளார். பெங்களூருவில் சில இடங்களில் 6 மாதம் முதல் ஓராண்டு வரை டெபாசிட் கேட்கும் நிலையில், இது அவருக்கு மிகப் பெரிய நன்மை என உற்சாகமாக பகிர்ந்துள்ளார்.
பெங்களூரு வீட்டு உரிமையாளர்கள் எதிர்பார்க்கும் டெபாசிட் தொகைகள் மிகவும் அதிகமாக உள்ளதாக கேலப் ஃப்ரீசன் முன்னதாக விமர்சித்திருந்தார். பென்னிகானஹல்லி பகுதியில் உள்ள ஒரு 4-BHK வீட்டிற்கு ரூ.23 லட்சம் டெபாசிட் கேட்டதாகவும், அது ஒரு ஆண்டுக்கான வாடகையை முன்னதாகவே முழுமையாக பெற்றுக் கொள்வதாகவும் கூறினார்.
மேலும், பெங்களூரு வீட்டு உரிமையாளர்கள் உலகிலேயே மிகவும் பேராசைக்காரர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் கூறுகையில், நியூயார்க், டொரோண்டோ போன்ற உலக நகரங்களில் ஒரு மாத வாடகை மட்டுமே டெபாசிட்டாக கேட்கப்படுகிறது. சான் பிரான்சிஸ்கோவில் இரண்டு மாத வாடகை, துபாயில் ஆண்டுத் தொகையின் 5-10%, லண்டனில் 5-6 வாரங்களுக்குள் பாதுகாப்புத் தொகை நிர்ணயிக்கப்படுகிறது.
ஆனால் பெங்களூருவில், பார்த்த ஒரு 4-BHK வீடு 4,500 சதுரஅடி பரப்பளவுடன், முழுமையாக அமைக்கப்பட்ட தனித்தனி வீடு, பென்னிகானஹல்லி பகுதியில் அமைந்துள்ளது. அதன் உரிமையாளர் ரூ.23 லட்சம் டெபாசிட் கேட்டதாகவும், அதுவே 12 மாத வாடகைக்கு சமமான தொகையாக இருப்பதாகவும் கேலப் முன்னதாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.
இந்த காலத்தில் வீட்டு உரிமையாளர்கள் எதிர்பார்க்கும் தொகைகள் முற்றிலும் பைத்தியம். இந்த டிப்பாசிட்டை விட குறைவாகவே ஒரு புதிய மஹீந்திரா தார் காரை வாங்கிவிடலாம். 8 ஆண்டுகளுக்கு முன் "passive growth" நோக்கில் பெங்களூருவுக்கு வந்த கேலப், அண்மையில் ஒரு சில மாதங்கள் மிசோரம் மாநிலத்தில் தங்கிய பிறகு மீண்டும் பெங்களூருவுக்கு திரும்பியுள்ளார்.
இந்திரா நகரில் அமைந்த ஒரு வீடு, ஒரு அற்புதமான உள்ளூர் குடும்பத்தால் வழங்கப்பட்டது. அதில் முக்கியமாக டெபாசிட் கேட்கப்பட்டிருப்பது மூன்று மாதங்கள் மட்டுமே. மேலும், எவ்வித பேச்சுவார்த்தையும் இல்லாமல் நேரடியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த அனுபவம், உயர்ந்த வீட்டு வாடகை மற்றும் டெபாசிட் தொகைகளால் அவதிப்படும் பலர் சந்திக்கும் சிரமங்களுக்கு இடையில், ஒரு அரிய வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications