இந்தியாவில் ரூ.23 லட்சம்-னா.! அமெரிக்காவில் ரூ.79 லட்சம்.! வாழ்க்கைச் செலவு ஒப்பீடு!

வாங்கும் திறன் சமநிலை (Purchasing Power Parity - PPP) என்பது உலகின் பொருளாதார வளர்ச்சியை உணர உதவும் முக்கியமான அளவுகோல். இது ஒவ்வொரு நாட்டிலும் பொருட்கள் மற்றும் சேவைகள் எவ்வளவு செலவாகின்றன என்பதை கணக்கிடுகிறது. சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் உலக வங்கி போன்ற அமைப்புகள் இது போன்ற அளவீடுகளை பொருளாதார வளர்ச்சியை ஒப்பிட பயன்படுத்துகின்றன.

வாங்கும் திறன் சமநிலை என்பது ஒரு நாட்டில் ஒரு நபரின் பணத்தால் அவர் எவ்வளவு பொருட்கள் மற்றும் சேவைகளை வாங்க முடியும் என்பதைக் குறிப்பிடுகிறது. இது வெறும் பரிமாற்ற விகிதங்களை விட உண்மையான வாழ்க்கைச் செலவை காட்டும். உதாரணமாக, இந்தியாவில் ஒரு பர்கர் ரூ.100 என்றால், அதே பர்கர் அமெரிக்காவில் $20 ஆக இருக்கலாம். இதன் மூலம், PPP விகிதம் 5 (100/20) ஆக இருக்கும். அதாவது, அமெரிக்காவில் ஒருவர் செலவிடும் ஒரு டாலருக்கு, இந்தியாவில் ரூ.5 செலவிட வேண்டும்.

இந்தியாவில் ரூ.23 லட்சம்-னா.! அமெரிக்காவில் ரூ.79 லட்சம்.! வாழ்க்கைச் செலவு ஒப்பீடு!

IMF தரவுகளின்படி, இந்தியாவின் PPP அடிப்படையில் உள்ள மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) உலகில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் ஒரு நபர் ரூ.23 லட்சம் சம்பாதிக்கும்போது, அவர் வாழும் வாழ்க்கைத் தரத்துக்கு, அமெரிக்காவில் இருப்பவருக்கு ரூ.79 லட்சம் தேவைப்படலாம். இதன் காரணம் இந்தியாவின் குறைந்த வாழ்க்கைச் செலவாகும்.

இந்தியாவில் ஒரு உணவகத்தில் உணவு சாப்பிட சுமார் ₹300 செலவாகும், ஆனால் அமெரிக்காவில் அதே உணவு ₹1,700 வரை இருக்கும். அதேபோல், ஒப்பிடக்கூடிய ஒரு அபார்ட்மெண்ட் வாடகை இந்தியாவில் ₹50,000 ஆக இருந்தால், அமெரிக்காவில் அது ₹1.6 லட்சம் வரை உயரலாம்.

இன்டர்நெட் சேவை இந்தியாவில் குறைந்த விலையில் கிடைக்கின்றது ரூபாய் 700 க்கு, ஆனால் அமெரிக்காவில் இதற்கான செலவு ரூபாய் 6,000 வரை இருக்கும். மேலும், இந்தியாவில் ஓட்டுநர் அல்லது வீட்டு வேலைக்காரரை வைத்திருப்பது சாதாரணமானது, ஆனால் அமெரிக்காவில் அதிக தொழிலாளர் செலவினால் இது ஒரு வித்யாசமான விசயமாக பார்க்கப்படுகிறது. இந்த கணக்கீடுகள் ஒவ்வொரு நாட்டின் வாழ்க்கைச் செலவை தெளிவாக காட்டுகின்றன. இந்தியாவில் குறைந்த செலவுடன் வசதியாக வாழ முடியும், அதே நேரத்தில் அமெரிக்காவில் இதே வசதிகளுக்கு அதிக செலவு தேவை.

1980களில் பொருளாதார நிபுணர்கள் "Big Mac Index" எனும் அளவுகோலை உருவாக்கினர். இது ஒவ்வொரு நாட்டிலும் McDonald's Big Mac பர்கர் எவ்வளவு விலை என்பதைக் கணக்கிட்டு, வாழ்க்கைச் செலவை ஒப்பிட உதவுகிறது. புதிய தரவுகளின்படி, இந்தியாவில் Big Mac விலை: ரூ.299. அமெரிக்காவில் Big Mac விலை: USD 5.58 (சுமார் ரூ.475).

உணவுச் செலவில் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே உள்ள விலை வேறுபாடு குறைவாகவே உள்ளது. ஆனால் வாடகை, போக்குவரத்து, கல்வி, மற்றும் இணையதள சேவைகள் போன்றவை 10:1 விகிதத்தில் விலை வேறுபடுகின்றன. இதனால், PPP அடிப்படையில், அமெரிக்கா மற்றும் இந்தியா இடையே 3:1 விகிதத்தில் வாழ்க்கைச் செலவு வேறுபடுகிறது.

IMF தரவுகளின்படி, கடந்த ஆண்டுகளில் இந்தியாவின் PPP அடிப்படையிலான வளர்ச்சி வேகம் அதிகரித்துள்ளது.
இந்தியாவின் பரிமாற்ற விகித அடிப்படையிலான ஒருவரின் சராசரி ஆண்டு வருமானம் $3,000. ஆனால், PPP அடிப்படையில் இது $9,000 ஆக உயர்கிறது. புதிய கணக்கீடுகளின்படி, இந்தியாவின் PPP அடிப்படையிலான வருமானம் $11,000 ஆக அதிகரித்துள்ளது. சீனாவின் பரிமாற்ற விகித அடிப்படையிலான வருமானம் $12,604, ஆனால் PPP அடிப்படையில் இது $24,380 ஆக உயர்கிறது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வேகம் அமெரிக்காவை விட அதிகமாக இருந்தாலும், இன்னும் தனிநபர் வருமானத்தில் பெரிதாக வளர வேண்டிய நிலை உள்ளது.

இந்தியாவில், ஒரு உயர்தரக் கல்வி நிறுவனத்தில் படிப்பது குறைந்த செலவாக இருக்கும். அமெரிக்காவில், Ivy League போன்ற பல்கலைக்கழகங்கள் ஆண்டு ஒன்றுக்கு ரூ.30-40 லட்சம் வரை வசூலிக்கலாம். இந்தியாவில் மருத்துவரை பார்ப்பதற்க்கு குறைந்த செலவாக இருக்கும். அமெரிக்காவில் மருத்துவச் செலவுகள் மிக அதிகமாக உள்ளன, காப்பீட்டின்றி மருத்துவ சேவை பெறுவது கடினமாகும்.

இந்தியாவில் ஓட்டுநருடன் தனியார் வாகனம் வைத்திருக்கலாம். அமெரிக்காவில் பொதுப் போக்குவரத்துக்கு அதிக முக்கியத்துவம் உள்ளது, மேலும் தனியார் வாகனம் பராமரிக்க அதிக செலவு தேவைப்படும். இந்தியாவின் வாங்கும் திறன் சமநிலை மேலும் உயரும் என IMF கணிக்கிறது. இந்தியர்கள் வாழும் தரம் உயர்ந்தாலும், அமெரிக்காவுடன் ஒப்பிடும்போது இன்னும் பணவருமானத்தில் அதிக வளர்ச்சி தேவை. உலகளவில் பொருளாதார வளர்ச்சியை மதிப்பீடு செய்யும் போது PPP முக்கியமான அளவுகோலாக அமைகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+