தனது சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு பெயர் பெற்ற முதலீட்டாளரான சவுரவ் தத்தா என்ற நபர், தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்த புதிய கருத்து ஒன்று பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அதில், ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு ரூ.25 லட்சம் சம்பளம் போதுமானதாக இருக்காது என்று அவர் கூறியுள்ளார். அவரின் இந்தக் கருத்துக்கு கமெண்ட் செக்ஷனில் பலரும் தங்களுடைய மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதன் முழு விவரங்கள் குறித்து விவரிக்கிறது இந்தப் பதிவு.
தனது பதிவில், சவுரவ் தத்தா ஒரு குடும்பத்தின் மாதச் செலவுகளைப் பற்றிய தனது கருத்தை பகிர்ந்துள்ளார். அதில் அவர் "3 பேர் கொண்ட குடும்பம் அத்தியாவசிய செலவுகள், வீட்டு வாடகை, கடன் தவணை ஆகியவற்றுக்கு ரூ.1 லட்சம் செலவு செய்யும். உணவு, திரைப்படம், ஓடிடி, சுற்றுலா போன்றவற்றுக்கு ரூ.25,000. அவசர செலவுகள் மற்றும் மருத்துவ செலவுக்கு ரூ.25,000. பிறகு முதலீடு செய்ய எதுவும் மிச்சம் இருக்காது" என்று கூறி பதிவிட்டுள்ளார்.

தத்தாவின் இந்த கருத்துக்கு பல விமர்சனங்கள் எழுந்துள்ளன. சிலர் அவருடைய கணக்கீடுகளை ஏற்றுக் கொண்டாலும் பலர் அதற்கு மறுப்பு தெரிவித்து கமெண்ட் செய்துள்ளனர். அதில் ஒரு X பயனர் "ஒரு குடும்பம் மாதத்திற்கு மருத்துவத்திற்காக 25,000 மற்றும் வெளியில் சாப்பிடுவது, பயணங்கள் போன்ற பிற செலவுக்களுக்காக 25,000 என ஒருபோதும் செலவிடாது. தயவு செய்து அபத்தமான கணக்கீடுகளால் மக்களை தவறாக வழிநடத்தாதீர்கள்" என்று கூறியுள்ளார்.
இன்னொரு X பயனர் ரூ.25 லட்சத்தை வருடத்திற்கு சம்பளமாக பெறுபவர்கள் தங்களுடைய பணத்தை எப்படி நிர்வகிப்பது என்பதைப் பற்றி தெரிந்திருப்பார் என்று கூறியுள்ளார்.

மற்றொரு X பயனர் மொத்தம் 3 உறுப்பினர்களுடன் ஆண்டுக்கு 25 லட்சம் சம்பளமாக பெறும் ஒருவருக்கு வாடகை செலவு, அத்தியாவசிய பொருட்கள் மற்றும் பொழுதுபோக்கு ஆகியவற்றுக்கு எவ்வளவு செலவு செய்வது என்பது நன்றாக தெரிந்திருக்கும். மேலும் அவசர செலவுகளும், மருத்துவச் செலவுகளும் மாதாந்திர பில் கிடையாது என்று கமெண்ட் செய்துள்ளார்.
இதுபோன்ற சம்பளம் தொடர்பான கருத்துகளை முன்வைத்து சர்ச்சையை ஏற்படுத்துவது சவுரவ் தத்தாவிற்கு புதிதல்ல. ஏற்கனவே, ஆண்டுக்கு ரூ.25 லட்சம் சம்பளம் இன்றைய சூழலில் போதுமானதாக இல்லை என்றும், குறிப்பாக IT தொழில்நுட்பத் துறையில் இந்த தொகை குறைவு என்றும் அவர் கூறியிருந்தார். ஆனால், பல ஆண்டுகள் அனுபவமுள்ள IT ஊழியர்களும் இவருடைய கருத்துக்கு உடன்படவில்லை. ஒருவரின் சம்பளம் போதுமானதா என்பது அவர்கள் வாழும் இடம், தொழில், அனுபவம் மற்றும் வாழ்க்கை முறை ஆகியவற்றைப் பொறுத்தது என்று பலரும் அவருடைய பதிவுக்கு கருத்து தெரிவித்தனர்.
தற்போது பல IT நிறுவனங்களிலும் வேலை இழப்பு ஏற்பட்டு கொண்டிருக்கும் நேரத்தில் சவுரவ் தத்தாவின் இது போன்ற கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications