மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்றத்தில் புதிய வருமான வரி மசோதா, 2025 பற்றிய விவரங்களை சமீபத்தில் விளக்கியுள்ளார். இந்த மசோதா இந்தியாவின் வருமான வரி சட்டங்களை மேம்படுத்தும் நோக்கத்துடன் தயாரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கிரிப்டோ சொத்துகள், மெய்நிகர் பண பரிவர்த்தனைகள், மற்றும் கணக்கில் வராத பணமுதலீடுகளை கண்காணிக்க புதிய விதிகள் கொண்டுவரப்பட்டுள்ளன.

இந்த மசோதாவின் முக்கிய அம்சமாக, வரி மோசடி மற்றும் நிதி மோசடிகளை வெளிக்கொண்டு வர, வாட்ஸ்அப் தகவல்கள், கூகுள் மேப்ஸ் வரலாறு, இன்ஸ்டாகிராம் கணக்குகள் மற்றும் டிஜிட்டல் ஆதாரங்கள் எவ்வாறு உதவுகின்றன என்பதைக் குறித்து நிதியமைச்சர் எடுத்துரைத்தார். மேலும், ரூ.250 கோடி வரி மோசடியை கண்டுபிடிக்க வாட்ஸ்அப் மெசேஜ்கள் மற்றும் கூகுள் மேப்ஸ் எப்படி பயன்பட்டன என்பதற்கான தகவல்களையும் அவர் பகிர்ந்துகொண்டார்.
நிதியமைச்சர் கூறியதாவது, "நீங்கள் இன்று பணமோ, சொத்தோ எங்கே வைத்திருந்தாலும், நவீன டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் அதை கண்டுபிடிக்க முடியும். நாம் கண்காணிக்க கூடிய அனைத்து தரவுகளையும் நவீன வழிகளில் பயன்படுத்த முடியும்." அவரது உரையில், வருமான வரி துறையின் கிரிப்டோ சொத்துகள் மற்றும் மெய்நிகர் பரிவர்த்தனைகளை கண்காணிக்கும் முயற்சிகள் பற்றி முக்கியமாக பேசப்பட்டது. இதற்காக, வரி அதிகாரிகள் வாட்ஸ்அப், கூகுள் மேப்ஸ், மற்றும் டிஜிட்டல் ஆதாரங்களை அணுகும் உரிமை பெறுவார்கள்.
ஒரு முக்கிய வழக்கில், கிரிப்டோ சொத்துகளுடன் தொடர்புடைய ரூ.250 கோடி மதிப்புள்ள கணக்கில் வராத பணம் கண்டுபிடிக்கப்பட்டது. அதிகாரிகள் தனியார் வாட்ஸ்அப் குழுக்களில் பரவும் செய்திகளை ஆய்வு செய்தனர். சில சந்தேகத்திற்கு இடமான வார்த்தைகள் மற்றும் இலாப வாக்குறுதிகள் அடங்கிய சந்தேகத்திற்கு இடமான வாட்ஸ்அப் செய்திகளை அடையாளம் கண்டனர். மேற்கொண்டு, அந்த செய்திகளை பரப்பிய நபர்கள் யார், எந்த இடங்களில் பண பரிவர்த்தனை செய்துள்ளனர் என்பதைக் கண்டுபிடிக்க முடிந்தது.
கூகுள் மேப்ஸ் சேவையின் "Location History" மூலம், சந்தேகத்திற்கு இடமான நபர்கள் அடிக்கடி செல்கின்ற இடங்கள் கண்டறியப்பட்டன. அதிகாரிகள் "பண மறைவிடங்கள்", அதாவது கணக்கில் வராத பணத்தை பாதுகாக்கும் இடங்களை அடையாளம் கண்டனர். சந்தேகத்திற்கு இடமான நபர்கள் எந்த இடங்களில் அதிகம் சென்று வந்துள்ளனர், எந்த நேரங்களில் பண பரிவர்த்தனைகள் நடந்துள்ளன என்பதைக் கூகுள் மேப்ஸ் தகவல்கள் மூலம் கண்காணிக்க முடிந்தது. இதனால், 'பினாமி' சொத்து உரிமையாளர்கள் (மற்றொருவரின் பெயரில் சொத்தை வைத்திருப்பவர்கள்) எவரென்று கண்டுபிடிக்க முடிந்தது.
கிரிப்டோ சொத்துகள் மற்றும் பணமோசடி தொடர்பான சில இன்ஸ்டாகிராம் கணக்குகள் அலசப்பட்டன. பண பரிவர்த்தனை தொடர்பான "விளம்பர பதிவுகள்", மற்றும் சந்தேகத்திற்கு இடமான 'luxury lifestyle' (அதிக செலவுமிகுந்த வாழ்க்கை முறையை காட்டும் பதிவுகள்) கண்காணிக்கப்பட்டன. பிற நாட்டு மக்களுடன் தொடர்பு வைத்திருந்த இந்தியக் கணக்குகளை அதிகாரிகள் அடையாளம் கண்டனர்.
புதிய வருமான வரி மசோதா 2025, 1961 ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டத்தை மாற்றும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இது நவீன தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்துக் கொண்டு, சமூக மற்றும் பொருளாதார மாற்றங்களை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மசோதாவின் முக்கிய நோக்கம், தனிநபர்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு வரி கணக்கீட்டு முறைகளை எளிதாக்கி, அதனை மேலும் தொடர்ச்சியாக மேம்படுத்துவது ஆகும். புதிய தொழில்நுட்பங்களை வரி கணக்கீட்டில் கொண்டு சேர்ப்பதன் மூலம், கணக்கில் வராத பணப்பரிவர்த்தனைகளை தடுக்கும் நடவடிக்கைகள் வலுப்படுத்தப்படும்.
கிரிப்டோ சொத்துகள், டிஜிட்டல் பரிவர்த்தனைகள், மற்றும் சர்வதேச பண பரிவர்த்தனைகளை கண்காணிக்க புதிய விதிகள் வரவுள்ளது. வாட்ஸ்அப், டெலிகிராம், மற்றும் மின்னஞ்சல் கணக்குகளை வரி அதிகாரிகள் சட்டப்பூர்வமாக அணுகலாம். வணிக மென்பொருட்கள் மற்றும் சேவையகங்களை (servers) அணுகும் அதிகாரம் வழங்கப்படும். கணக்கில் வராத பணத்தை மறைத்து வைத்திருந்தால், அதிகபட்ச அபராதமும், சிறைத்தண்டனையும் விதிக்க வாய்ப்பு உள்ளது. வெளிநாட்டு வங்கிக் கணக்குகள், நிறுவனங்கள், மற்றும் பினாமி சொத்துகளுக்கு எதிராக புதிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இந்த மசோதா நவீன பொருளாதார சூழலுக்கு ஏற்ப, வரி விதிகளை எளிமைப்படுத்தி, சக்திவாய்ந்த கண்காணிப்பு முறைகளை கொண்டு வர உதவும். டிஜிட்டல் ஆதாரங்களை பயன்படுத்தி வரி கண்காணிப்பு முறையை அரசு எவ்வாறு மேம்படுத்துகிறது என்பதைப் பார்க்கும்போது, வருங்காலத்தில் முடிவுசெய்யப்படாத கணக்குகளில் இருப்பது மிகவும் சிக்கலானதாக இருக்கும்
More From GoodReturns

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications