வருமான வரி துறையில் பணியாற்றிய கீர்த்தி வர்மா, நடிப்பின் மீது கொண்டிருந்த ஈடுபாடு காரணமாக, தனது பணியினை விடுத்து நடிப்பதற்கான முயற்சியினை மேற்கோண்டு வந்தார்.
அதன் பலனாக பிக்பாஸ் 12 உள்ளிட்ட ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்றார். இதன் மூலம் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர். இதற்கிடையில் தான் கீர்த்தி வர்மா மீது பண மோசடி புகார் எழுந்துள்ளது.
வரி விலக்கில் மோசடி
மும்பை வருமான வரித்துறையில் கணக்குகளை தாக்கல் செய்து வரி விலக்கு பெறுவதில், 263.95 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடந்துள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு புகார் கிடைத்தது. இதனை வைத்து நடத்தப்பட்ட ரகசிய ஆய்வில் கீர்த்தி வர்மா பணிபுரிந்த போது போலி ஆவணங்கள் மூலம் வரி விலக்கு பெற்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
மோசடியாக பணப் பரிமாற்றம்
இது 2007 - 08 முதல் 2008 - 2009 வரையிலான நிதியாண்டுகளில் தான் இந்த மோசடி நடந்துள்ளது அம்பலமாகியுள்ளது. இவ்வாறு மோசடி செய்யப்பட்ட நிதியானது ஷெல் நிறுவனங்கள் மற்றும் பூஷன் ஆனந்த் பாட்டீல் மற்றும் பலரின் வங்கி கணக்குகளுக்கு பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பூசன் பாட்டீல் கணக்கிற்கு பணம்
இதில் அமலாக்கத்துறையினரின் சந்தேகத்தினை அதிகப்படுத்தும் விதமாக மும்பை தொழிலதிபரான பூசன் பாட்டீல் வங்கிக் கணக்கில் இருந்து, 1 கோடி ரூபாய் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில் தான் கீர்த்தி வர்மா நேரில் ஆஜராகியும் விளக்கம் கொடுத்துள்ளார்.
கீர்த்தி வர்மா விளக்கம்
இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக கீர்த்தி வர்மா, பணமோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள தொழில் அதிபர் பூசன் பாட்டீலுடன் ஆரம்பத்தில் தொடர்பில் இருந்தேன். அவர் நான் பங்கேற்ற நடன நிகழ்ச்சிக்காகவே எனக்கு பணம் கொடுத்தார். ஆனால் பூசன் பாட்டில் பண மோசடி புகாரில் சிக்கி இருப்பது தெரிய வந்ததும், அவருடனான தொடர்பை விட்டு விட்டேன் என விளக்கம் கொடுத்துள்ளார்.
நிலம் விற்பனை
கீர்த்தி வர்மா ஹரியான மாநிலத்தில் குருகிராமில் உள்ள ஒரு சொத்தை மோசடியாக விற்பனை செய்து, அதற்கான பணத்தினை வங்கிக் கணக்கில் பெற்றுள்ளார். இதன் மூலம் கிடைத்த 1.18 கோடி ரூபாய் தொகையானது முடக்கப்பட்டுள்ளது.
ஆடம்பர பொருட்கள்
லோனாவாலா, கண்டாலா, கர்ஜத், புனே மற்றும் உடுப்பி பகுதிகளில் நிலம், பன்வெல் மற்றும் மும்பை பகுதிகளில் அடுக்குமாடி வீடுகள், பிஎம்டபள்யூ எக்ஸ் 7, மெர்சிடிஸ் ஜிஎல்எஸ் 400டி, ஆடி Q7 உள்ளிட்ட பலவும் வாங்குவதற்கு மோசடியாக பெற்ற தொகையானது பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications