90% வரை குறைந்த புற்றுநோய் மருந்துகள்! கேன்சர் நோயாளிகளுக்கு செம ரிலீஃப்! ஆண்டுக்கு ரூ.3,500 கோடி மிச்சம்!

புற்றுநோயால் பாதிக்கப்படும் நபர்களுக்கு.. நோய் ஒருபுறம் பிரச்சனையைக் கொடுத்தாலும், சிகிச்சைக்காக வாங்கும் மருந்து செலவு பெரும் சுமையாக மாறிவிடுகிறது. பல குடும்பங்கள் மருத்துவச் செலவுகளை எதிர்கொள்ள முடியாமல் நிதி நெருக்கடியில் சிக்கிக் கொள்கின்றன. இந்த ஒரு விஷயத்தால் நோயாளிகள் படும் மன உளைச்சலுக்கு அளவே இல்லை. அனால் இனி அந்த பிரச்சனை சற்று குறையும்.

புற்றுநோயாளிகளின் பணப் பிரச்சனையை குறைக்கும் விதமாக அரசு ஒரு முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளது. இந்தியாவில் புற்றுநோய்க்கு பயன்படுத்தப்படும் மருந்துகளின் MRP விலையை தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் குறைத்துள்ளது. சுமார் 543 புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளின் எம்ஆர்பி விலை குறைக்கப்பட்டுள்ளதாக வேதியியல் மற்றும் உர அமைச்சகத் துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த விலை குறைப்பு வருகின்ற நவம்பர் 9-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

90% வரை குறைந்த புற்றுநோய் மருந்துகள்! கேன்சர் நோயாளிகளுக்கு செம ரிலீஃப்! ஆண்டுக்கு ரூ.3,500 கோடி மிச்சம்!

அக்டோபர் 27-ஆம் தேதி வரை புற்றுநோய் மருந்துகளை தயாரிக்கும் நிறுவனங்கள் எந்தெந்த மருந்துகளின் விலை மாற்றப்பட்டுள்ளது என்பதை அரசுக்கு தெரிவித்தது. அதன் அடிப்படையில் சுமார் 543 பிராண்டட் புற்றுநோய் மருந்துகளின் விலை குறைக்கப்பட்டுள்ளது. விலை குறைக்கப்பட்ட மருந்துகளின் பட்டியலும் வெளியாகியுள்ளது.

விலை குறைப்பினால் ரூ. 3,500 கோடி வரை சேமிப்பு: இந்தியாவில் புற்றுநோய்க்காக நோயாளிகள் செலவழிக்கும் தொகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. புற்றுநோய் மருந்து சந்தையின் மதிப்பு ஒவ்வொரு ஆண்டும் ரூ. 12,500 கோடியாக உள்ளது. ஆனால் இந்த விலை குறைப்பு நடவடிக்கையின் காரணமாக பொதுமக்கள் ஆண்டுதோறும் ரூ.2,500 முதல் ரூ.3,500 கோடி வரை சேமிக்க முடியும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

Also Read

137 புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளில் 20-க்கும் மேற்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள், மார்பக மற்றும் ப்ரோஸ்டேட் புற்றுநோய் மருந்துகள் ஆகியவற்றின் விலை குறைக்கப்பட்டுள்ளது. டெனோசுமாப், நியூட்ரோபீனியா, பெக்ஃபில்கிராஸ்டிம், பெவாசிரிசுமாப் போன்ற முக்கியமான மருந்துகள் இதில் அடங்கும்.

விலை குறைக்கப்பட்ட மருந்துகளின் பட்டியல்: ஸ்டெம் செல் அறுவை சிகிச்சை மற்றும் சிறுநீர்ப்பை புற்றுநோய்க்கு பயன்படுத்தப்படும் தியோடெபா ஊசி மருந்தின் விலையில் மிகப்பெரிய குறைப்பு செய்யப்பட்டுள்ளது. சாம்டெபா மருந்தின் 100 மில்லி கிராம் விலை ரூ.80,071.86-லிருந்து.. ரூ.7,150.33-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 91.1% மருந்தின் விலை குறைந்துள்ளது.

மார்பகப் புற்றுநோய்க்கான பால்போசிக்லிப் மருந்தின் விலை 93.3% குறைந்துள்ளது. 21 பால்போப்ரோ 125 மி.கி கேப்சூல்கள் கொண்ட பேக்கின் விலை, ரூ.40,421.33-லிருந்து ரூ,2,720-ஆகக் குறைந்துள்ளது. HER2-பாசிட்டிவ் மார்பகப் புற்றுநோய்க்கு வழங்கப்படும் பெர்டுசுமாப் என்ற மருந்தின் விலை, ஹெர்டுமாப் பிராண்டில் ரூ.94,951-லிருந்து ரூ.30,593-ஆகக் குறைந்துள்ளது. அதே புற்றுநோய்க்கு வழங்கப்படும் பெர்டுசுமாப் மருந்தின் மற்றொரு பிராண்டான லுபிஹெர் விலை ரூ.83,520-லிருந்து ரூ.37,358.35 ஆகக் குறைந்துள்ளது.

மெட்டாஸ்டேடிக் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், கருப்பை வாய் புற்றுநோய் மற்றும் கருப்பை கட்டிகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் Ivzumab 400 மி.கி ஊசி மருந்தின் விலை ரூ.69,852.12-லிருந்து ரூ.13,512 ஆகக் குறைந்துள்ளது. Bevacizab 400 மி.கி ஊசி மருந்தின் விலை ரூ.65,205.09-லிருந்து ரூ.8,956.75 ஆகக் குறைந்துள்ளது. Cizumab 400 மி.கி மருந்தின் விலை ரூ.57,816-லிருந்து ரூ.10,211 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

கருப்பை, மார்பகம் மற்றும் கணைய புற்றுநோய்க்குப் பயன்படுத்தப்படும் ஓலாபாரிப் மாத்திரைகளில், Brcaone 150 மி.கி பேக்கின் விலை ரூ.11,573.68 ஆகவும், லிம்போபிளாஸ்டிக் லுகேமியா சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் Peg L-Aparagin ஊசி மருந்தின் விலை, ரூ.7,766.85 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+