இன்றைய நவீன காலத்திற்கு ஏற்ப பணவீக்கம் சமூகத்தில் ஒவ்வொரு தரத்தினரையும் தாக்கியுள்ளது, மேலும் ஒவ்வொரு குடும்பமும் அதன் தாக்கத்தை உணர்கின்றன. சம்பளம் பெரும்பாலும் அதே அளவில் இருந்தாலும், கூடுதல் செலவுகள் வாழ்க்கையை மேலும் சிரமமாக்குகிறது. அதிகமான செலவுகளை கட்டுப்படுத்த முயற்சிக்கிறோம், ஆனால் முக்கிய தேவைகள் கூட அதிக விலையாக மாறி வருகின்றன.

ஆனால், பணவீக்கம் குறித்து அதிகம் பேசப்படாத ஒரு முக்கியத் துறை கல்வித் துறை ஆகும், இருப்பினும், இதிலும் பணவீக்கம் அனுமதி அளவைக் கடந்து விட்டது. அந்தவகையில் பெங்களூரில் எல்கேஜி மாணவர்களின் கல்விக் கட்டணம் குறித்த விவாதம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் LKG பள்ளி கட்டணங்கள் வெகுவாக உயர்ந்திருப்பதை குறித்து நெட்டிசன்கள் கவலை தெரிவித்து கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
அதாவது, Indian Tech & Infra என்ற எக்ஸ் தளத்தில் பெங்களூரு பள்ளிகளில் எல்கேஜி மாணவர்களின் ஆண்டு கட்டணம் குறித்த தகவல் பகிரப்பட்டுள்ளது. அதில், பெங்களூருவில் ஒரு LKG மாணவருக்கான ஆண்டு பள்ளி கட்டணம் வெகுவாக உயர்ந்துள்ளது. பெங்களூர் எம்.ஜி.ரோடு அருகேயுள்ள செயின்ட் மார்க்ஸ் சாலையில் உள்ளது பிஷப் காட்டன் ஆண்கள் பள்ளி. அதாவது, இந்த பள்ளியில், 2017-18 தரவுகளை ஒப்பிடும் போது, சில பள்ளிகளில் ரூ.1-1.5 லட்சம் இருந்தது. ஆனால் தற்போது, ரூ.3.7 லட்சம் வரை சென்றுவிட்டது.
அதாவது, அந்த தரவுகளில், டியூசன் கட்டணம் - ரூ.39, 830, extra-curricular activities-ரூ8,375, ஸ்போர்ட்ஸ், கேம்ஸ்க்கு - ரூ2,890, மெயிண்டனன்ஸ் கட்டணம் ரூ. 10,000, இதேபோல, எச்சரிக்கை டெபாசிட், ஸ்மார்ட் கிளாஸ், கிறிஸ்துமஸ் ஃபெல்லோஷிப் மதிய உணவு, கட்டிட நிதி என இப்படி ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனி கட்டணம் வசூலிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் கட்டணம் ரூ.202,000 வசூலிக்கப்படுகிறது. பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்கே இவ்வளவு செலவு என்றால், உயர்கல்விக்கு என்ன ஆகும்? என்று பெற்றோர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு சமூக வலைதளங்களில் பலர் விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர். தற்போதைய நிலைமையைப் பார்க்கும்போது, கல்வியும் பங்குச்சந்தை & ரியல் எஸ்டேட்டுடன் ஒப்பிடப்படுகிறது. எதிர்காலத்தில் பள்ளியில் சேர்ப்பதற்கே முதலீடு (Invest) செய்ய வேண்டிய நிலை வரும் போல! இது நாட்டின் எதிர்காலத்தைக் குறிக்கும் ஒரு ஆபத்தான எச்சரிக்கை மணி. அரசின் கடுமையான கட்டுப்பாடுகள் இல்லையென்றால், கல்வி வெறும் பணக்காரர்களுக்கான சொகுசாகி விடும் என்பது உள்ளிட்ட கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். மேலும், பணவீக்கம் இப்படி இருந்தால் 2030-ல் LKG கட்டணம் ரூ10 லட்சத்தை எட்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என்றும் பெற்றோர்கள் தங்களது வேதனைகளை குறிப்பிட்டுள்ளனர்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications