ரூ. 30,000 முதலீட்டில் ரூ. 5 கோடி உருவாக்குவது எப்படி? இந்த ட்ரிக் மட்டும் தெரிஞ்சா நீங்க மாஸ்!

சீக்கிரம் நிதி சுதந்திரம் அடைய வேண்டும் என்பது அனைவருக்கும் தோன்றும் எண்ணம் தான். ஓய்வு காலத்தில், கவலை இல்லாமல் வாழ்வதற்கு இளம் வயதிலிருந்து சேமிப்பது அவசியம். ஆனால் ரூ.1 கோடி, ரூ.5 கோடி எனப் பெரிய தொகையை கணக்கில் கொள்ளும் போது, அவை சேமிப்பதற்கு கடினமாகத் தோன்றலாம். ஆனால் இன்று நாம் பார்க்க இருக்கும் கூட்டு வட்டி முறையில் இது சாத்தியமே. நீங்கள் நினைப்பதை விட எளிதில் உங்களால் ரூ.5 கோடி என்ற இலக்கை எட்ட முடியும்.

FundsIndia ஆராய்ச்சி அறிக்கையின்படி, நீங்கள் மாதம் ரூ. 30,000 தொகையை SIP திட்டத்தில் முதலீடு செய்து, ஒவ்வொரு ஆண்டும் 10 சதவீதம் முதலீட்டுத் தொகையை அதிகரித்து வந்தால், 12 சதவீத ஆண்டு வருமானத்தில், 7 ஆண்டுகளில் ரூ.50 லட்சத்தை எட்ட முடியும். ஆனால், இரண்டாவது ரூ.50 லட்சத்திற்கு வெறும் 3 ஆண்டுகளே ஆகும், மூன்றாவது ரூ.50 லட்சத்திற்கு வெறும் 2 ஆண்டுகளே ஆகும்.

 ரூ. 30,000 முதலீட்டில் ரூ. 5 கோடி உருவாக்குவது எப்படி? இந்த ட்ரிக் மட்டும் தெரிஞ்சா நீங்க மாஸ்!


கூட்டு வட்டி முறையைப் பயன்படுத்துவதால் 7 ஆண்டுகளில் ரூ. 50 லட்சம் ரூபாயாக ஆன பணம், மீண்டும் 3 ஆண்டுகளில் இன்னொரு ரூ. 50 லட்சத்தை உருவாக்குகிறது. முதல் ரூ.1 கோடியை அடைய 10 ஆண்டுகள் ஆகும். கூட்டு வட்டி முறையினால் மட்டுமே இந்த வருமானம் சாத்தியம். கூட்டு வட்டி என்பது உங்களுடைய வட்டிக்கும் வட்டி அளிக்கிறது. எப்படி 7 ஆண்டுகளில் ரூ. 1 கோடி சேர்க்கப்பட்டதோ அதேபோல அடுத்த 4 ஆண்டுகளில் இன்னொரு ரூ. 1 கோடியை திரட்ட முடியும்.

ஒவ்வொரு ஆண்டும் முதலீட்டை அதிகரிப்பதன் மூலம், கூட்டு வட்டியின் அபார சக்தியை பெற முடியும். இதே போல தொடர்ந்து முதலீடு செய்வதால் , 19வது ஆண்டில், நீங்கள் ரூ.5 கோடி கார்பஸ்-ஐ எட்ட முடியும்.

மேற்கண்டவற்றிலிருந்து, 19 ஆண்டுகளில் ரூ.5 கோடி என்ற இலக்கை அடைய மூன்று விஷயங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பது தெளிவாகிறது. அவை தொடர் முதலீடு, ஆண்டுக்கு குறிப்பிட்ட சதவிகிதம் அதிகரித்த முதலீடு மற்றும் கூட்டு வட்டியின் சக்தி.

மேற்கண்ட முதலீட்டு பற்றிய விவரங்கள், எப்படி ரூ.5 கோடியை எட்ட வேண்டும் என்ற விவரங்களே. இதன் மூலம் நாங்கள் உங்களை முதலீட்டு முடிவுகளை எடுக்க சொல்லவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+