கோவை, தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமாகும், தையல் மற்றும் துணி தொழிற்துறையில் கோவை மாவட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது. கோவை, ஆண்டுதோறும் பல கோடி வருமானத்தை உருவாக்குகிறது. இதன் காரணமாக, கோவை பல தொழிற்சாலைகள் மற்றும் தொழில்நுட்ப பூங்காக்களுக்கு இல்லமாகிறது. மேலும், விவசாயமும், விவசாய உற்பத்திகளின் வணிகமும் இங்கு வளர்ச்சியடைந்து வருகிறது.
கோவை கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தில் வளமான நகரமாக விளங்குகிறது. இங்கு பல்வேறு விழாக்கள் மற்றும் கலாச்சார நிகழ்வுகள் நடைபெறுகின்றன. நகரத்தின் போக்குவரத்து மற்றும் அடிப்படைக் கட்டுமான வளர்ச்சியும், தொழில் வளர்ச்சிக்கு முக்கிய ஆதாரமாக உள்ளது. இந்நிலையில், கோவை மாவட்டத்தில் வலிமையான MSME நிறுவனங்கள் இருந்தாலும், பல துறைகளில் தொழில்துறை செயல்பாடுகள் பல சவால்களை எதிர்கொண்டு மந்தமாக நடந்து வருகிறது.

இதுகுறித்து கோவை மாவட்ட சிறுதொழில்கள் சங்கத் தலைவர் எம். கார்த்திகேயன் கூறுகையில், "கடந்த நிதியாண்டில் இருந்து குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை (MSME) கடன் பெறுவது குறைந்து வருகிறது. 2025-2026 நிதியாண்டுக்கான இலக்கு சுமார் ₹39,000 கோடி எனும் நிலையில், முதல் காலாண்டில் மூலதன முதலீடுகளுக்கு எந்தவொரு நிதி திரட்டலும் இல்லை. இதனால் முதலீடுகளை ஈர்க்க வங்கிகள் கடன் மேளாக்களை நடத்தி வருகின்றன" என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும், "புதிய கடன்களை எடுக்க விரும்பாமல், பெரும்பாலானவை தங்களது நிறுவனத்தை குடும்ப வணிகமாகவே வைத்திருக்க ஆசைப்படுகின்றன. மேலும் தொழில்நுட்ப நன்மைகள் பற்றிய விழிப்புணர்வும் குறைவாக உள்ளது. இதுபோன்ற நிலையை மாற்ற வேண்டிய அவசியம் உள்ளதாக" அவர் தெரிவித்தார்.
தமிழ்நாடு குடிசை மற்றும் சிறிய நிறுவனங்கள் சங்கத் தலைவர் ஜே. ஜேம்ஸ் கூறுகையில், பம்ப்செட் நிறுவனங்களின் 60% ஆர்டர்கள் குஜராத்துக்கு செல்கின்றன. ஆட்டோமொபைல் துறையின் ஆர்டர்கள் ஓசூர் மற்றும் சென்னை உள்ளிட்ட பல மையங்களுக்கு விரைவில் வழங்கப்படுகின்றன. ஜவுளி துறையில் ஆர்டர்கள் குறைந்துவிட்டன. தொழில்நுட்பத்தில் முதலீடு செய்த MSME நிறுவனங்கள் எதிர்பார்த்த வருமானத்தை அடைய முடியவில்லை. உயர் ரக இயந்திரங்கள் உற்பத்தித்திறனை அதிகரித்துள்ளன. செயல்பாடுகளை நிலைநாட்ட அதிக ஆர்டர்களைப் பெற வேண்டும்" என அவர் தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் மிதுன் ராம்தாஸ் கூறியதாவது, "ஏப்ரல் முதல் ஜூன் வரை பம்ப்செட் விற்பனை உச்சக்கட்டத்தில் இருக்கும் எனும் எதிர்பார்ப்பு இருந்தாலும், இந்த ஆண்டு கோயம்புத்தூர் தொழில்கள் 20% முதல் 30% வரை வணிகத்தில் சரிவை எதிர்கொண்டுள்ளன அவர் தெரிவித்தார். கடந்த ஜூலை மாதத்தில் இருந்து விற்பனை குறைந்து வருகிறது. அதேபோல், கடந்த மூன்று மாதங்கள் மிக மோசமானதாக இருந்தன. இதனால் தொழிலாளர் இழப்பு மற்றும் வாராந்திர வேலை நாட்களின் எண்ணிக்கை குறைவு போன்ற பல சிக்கல்கள் ஏற்பட்டு உள்ளன" என்று தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியதாவது, ஆர்டர்களில் ஏற்பட்ட மந்தநிலை காரணமாக ஃபவுண்டரி துறையும் பாதிக்கப்பட்டுள்ளது. MSME-களில் வேலை செய்ய ஆர்வமுள்ள தொழிலாளர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளதாக திரு ஜேம்ஸ் தெரிவித்தார். மாறிவரும் சூழ்நிலை காரணமாக தொழிலாளர்களை நியமிக்க முடியாமல் போராடுகிறோம் என்றார். MSME-களை மீட்டெடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகளால் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரினார்.
More From GoodReturns

தங்கம் விலை அதிரடி சரிவால் கோயம்புத்தூர் மக்கள் செம குஷி.. நகை வாங்குவோருக்கு பொன்னான வாய்ப்பு..!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!



Click it and Unblock the Notifications