நம் நாட்டில் சில காலமாக கல்விச் செலவுகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டுமே ஊதியம் பெறுபவராக இருந்தால் தங்கள் குழந்தைகளை படிக்க வைப்பதற்கு பெரும் சிக்கலுக்கு ஆளாகின்றனர். இந்நிலையில் ஒரு கல்வி நிறுவனம் 1-ஆம் வகுப்புக்கு ரூ.4 லட்ச ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற நோட்டீசை வழங்கியுள்ளது. அந்த நோட்டீசை ஒருவர் தனது அதிகாரபூர்வ X தளத்தில் பகிர்ந்துள்ளார். இவருடைய பதிவு இந்தியாவில் உயரும் கல்விச் செலவு குறித்த பெரும் விவாதத்தை தூண்டியுள்ளது.
ரிஷாப் ஜெயின் என்ற நபர் ஜெய்ப்பூரில் உள்ள ஜெயஸ்ரீ பெருவால் இன்டர்நேஷனல் ஸ்கூலில் 1 வருட பள்ளிக் கட்டணமாக ரூ.4 லட்சம் கட்டச் சொல்லி பள்ளி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியதை தனது அதிகாரப்பூர்வ X தளத்தில் பகிர்ந்திருக்கிறார். இதில் ஜாயினிங் கட்டணங்கள், பேருந்து கட்டணம், புத்தகங்களுக்கான கட்டணம், சீருடைகளுக்கான கட்டணம் ஆகியவை அடங்கும்.

ஜெயின் அப்லோட் செய்த போஸ்ட் பல பெற்றோர்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்த உதவியது. இவருடைய கமெண்ட்ஸ் செக்ஷனில் அதிகரித்து வரும் கல்விச் செலவுகள் குறித்து சில பெற்றோர்கள் தங்கள் விரக்தியை வெளிப்படுத்தினார். இந்த பதிவு குறிப்பாக நடுத்தர குடும்பங்களுக்கு கல்விச் செலவுகள் அதிகரிப்பதனால் ஏற்படும் தாக்கத்தை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.
ரிஷப் ஜெயின் தனது அதிகாரப்பூர்வ X பதிவில் நல்ல கல்வி என்பது ஆடம்பரம் ஆகிவிட்டது. இதை நடுத்தர வர்க்கத்தினரால் வாங்க முடியாது. என் மகளை அடுத்த ஆண்டு 1-ஆம் வகுப்பில் சேர்க்க இருக்கிறோம். எங்கள் மகளை சேர்க்க நாங்கள் பரிசீலிக்கும் பள்ளிகளில் இந்த பள்ளியும் ஒன்று. மற்ற பள்ளிகளில் பார்க்கலாம் என்றாலும் இதே போன்ற கட்டணம் தான் அங்கும் உள்ளது.

பதிவு கட்டணம் - ரூ.2,000
அட்மிஷன் கட்டணம் - ரூ.40,000
திருப்பி தரக்கூடிய செக்யூரிட்டி டெபாசிட் - ரூ.5,000
வருடாந்திர பள்ளிக் கட்டணம் - ரூ.2,52,000
பஸ் கட்டணம் - ரூ.1,08,000
புத்தகங்கள் மற்றும் சீருடைகள் - ரூ.20,000
மொத்தமாக வருடத்திற்கு ரூ.4,27,000
இதுதான் இந்தியாவில் தரமான கல்விக்கு வழங்கப்படும் விலை. ஆண்டுக்கு ரூ.20 லட்சம் சம்பாதித்தாலும் இதை வாங்க முடியுமா? முடியாது.. ஏனெனில் உங்களுடைய 20,000 டாலர் வருமானத்தில் 50 சதவீதம் வருமான வரி, ஜிஎஸ்டி, பெட்ரோல் மீதான வேட், சுங்கவரி நிலப்பதிவு கட்டணங்கள் போன்ற பலவற்றின் காரணமாக அரசாங்கம் பணம் பிடித்தம் செய்கிறது, அதோடு டேர்ம் இன்சூரன்ஸ் ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியங்கள் மற்றும் முதியோர் ஓய்வுதியத்திற்கான PF ஆகியவற்றையும் செலுத்த வேண்டும்.
ரூ.20 லட்சம் வருமானம் பெறுவதற்கு அதிகபட்சமாக 30% செஸ் விதிக்கப்படுகிறது. மீதமுள்ள ரூ.10 லட்சத்தில் உணவுக்காக செலவு செய்வதா?, இஎம்ஐ வாடகை செலுத்துவதா? இரண்டு குழந்தைகளுக்கு பள்ளி கட்டணத்தை செலுத்துவதா? நீங்களே முடிவு செய்யுங்கள்.. என்று பதிவிட்டு இருந்தார். இவருடைய பதிவுக்கு இந்த கட்டணத்தோடு படித்தால் 12 வருடங்களுக்கு ரூ.1 முதல் ரூ.1.5 கோடி வரை செலவாகும் என்று ஒரு பயனர் பதிவிட்டிருந்தார்.
தரமான கல்வி ஒருபோதும் ஆடம்பரமாக இருக்கக் கூடாது. இது அடிப்படை உரிமையாக தான் இருக்க வேண்டும் என்று மற்றொரு நபர் பதிவிட்டு இருந்தார். இங்கு பலரும் ஸ்டேட்டஸை பார்க்கின்றனர். 1 சதவீத பள்ளிகள் மட்டுமே இந்த அளவு கட்டணம் வசூலிக்கின்றன. அதற்காக இந்த 1 சதவீத பள்ளிகள் மட்டும் தான் சிறந்த கல்வியை தரும் என்றெல்லாம் கிடையாது என்று கூறியிருந்தார்.
More From GoodReturns

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!



Click it and Unblock the Notifications