ரூ.4 டூ ரூ.75.. ஒரு வருடத்தில் 1,705% வருமானம்.. முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட் தான்..!

பிரைட்காம் குழுமத்தின் பங்கு விலையானது ஒரு ஆண்டில் 1,705% அதிகரித்துள்ளது. இது முதலீட்டாளர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய சான்ஸ் எனலாம்.

கடந்த நவம்பர் 4, 2020 அன்று 4.18 ரூபாயாக முடிவடைந்திருந்த பங்கின் விலையானது, இந்தாண்டு நவம்பர் 4 அன்று 75.40 ரூபாயாக முடிவுற்றுள்ளது.

ஒரு ஆண்டிற்கு முன்பு முதலீட்டாளார்கள் இந்த பங்கில் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தால், இன்று அதன் மதிப்பு 18 லட்சத்திற்கு மேல். இதே காலகட்டத்தில் சென்செக்ஸ் 47.89% தான் ஏற்றம் கண்டுள்ளது.

52 வார உச்சம்

52 வார உச்சம்

இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது கடந்த அக்டோபர் 13 அன்று அதன் 52 வார உச்சமான 90.55 ரூபாயினை தொட்டது. இந்த நிலையில் தற்போது முதலீட்டாளர்கள் புராபிட் புக்கிங் செய்து வரும் நிலையில், அதன் பங்கு விலையானது சற்று குறைந்துள்ளது. குறிப்பாக கடந்த நவம்பர் 4 தீபாவளியன்று, மூகூர்த் டிரேடிங் தினத்தன்று 2.78 லட்சம் பங்குகள் கைமாறின.

பிரைட்காமின் சந்தை மதிப்பு

பிரைட்காமின் சந்தை மதிப்பு

பிஎஸ்இ-யில் மட்டும் 2.10 கோடி பங்குகள் பரிமாற்றம் நடைபெற்றுள்ளது. இதற்கிடையில் இந்த ஐடி நிறுவன பங்கின் விலையானது 7,853.91 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

பிரைட்காம் குழும பங்கின் விலையானது நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து மட்டும் 1,002% ஏற்றம் கண்டுள்ளது.

டெக்னிக்கல் பேட்டர்ன்

டெக்னிக்கல் பேட்டர்ன்

இதற்கிடையில் இந்த ஒரு மாதத்தில் மட்டும் இந்த பங்கின் விலையானது 17% அதிகரித்துள்ளது.

டெக்னிக்கலாக பார்க்கும்போது இந்த பங்கின் விலையானது 5 நாள், 20 நாள், 50 நாள் மற்றும் 100 நாள், 200 நாள் மூவிங் ஆவரேஜ்ஜூக்கு மேலாக காணப்படுகின்றது.

பெரிய இழப்பு இருக்காது?

பெரிய இழப்பு இருக்காது?

எப்படியிருப்பினும் இந்த மிட் கேப் பங்கானது 1.5% சரிவினை கடந்த வாரம் கண்டுள்ளது.

இந்த பங்கில் அதிகபட்ச ஏற்ற இறக்கம் என்பது 5% வரையில் இருக்கும். இந்த திடீர் விலை ஏற்ற இறக்கம் என்பது பங்குதாரர்களுக்கு ஏற்படும் இழப்பினையும் தடுக்கும்.

பங்கு இருப்பு விகிதம்

பங்கு இருப்பு விகிதம்

இந்த நிறுவனத்தில் புரோமோட்டர்கள் 22.40% பங்குகளை வைத்துள்ளனர். இதே செப்டம்பர் காலாண்டின் இறுதியில் பொது பங்குதாரர்கள் 77.60% பங்குகளை வைத்திருந்தனர்.

80.83 கோடி பங்குகளை 1.07 லட்சம் பங்குதாரர்களை வைத்துள்ளனர். இதில் 1.05 லட்சம் பங்குதாரர்கள் 2 லட்சம் வரை மூலதனத்துடன் பங்குகளை வைத்துள்ளனர்.

லாபத்தில் சரிவு

லாபத்தில் சரிவு

எப்படியிருப்பினும் கடந்த ஜூன் காலாண்டில் அதன் நிகரலாபம் 24.62% அதிகரித்து, 140 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இதே விற்பனையானது 6.48% குறைந்து, 699.36 கோடி ரூபாய் குறைந்துள்ளது. பிரைட்காம் தற்போது உலகளாவிய அளவி அதன் ட்ஜிட்டல் வணிகத்தினை மேம்படுத்தி வருகின்றது. இதன் எதிர்காலம் வரும் காலத்திலும் அதிகரிக்கலாம் என்றாலும், அதன் செப்டம்பர் காலாண்டு முடிவுகள் தற்போதைக்கு இதன் பங்கு விலையில் முக்கிய பங்கு வகிக்கலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+