இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியை பின்னுக்குத்தள்ளி இந்தியா மற்றும் ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் ஆன கௌதம் அதானி-யின் சொத்து மதிப்பு கடந்த 3 வருடத்தில் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது.
முகேஷ் அம்பானிக்கு இணையாகக் கௌதம் அதானி-யும் தனது சொத்து மதிப்புக்கு ஏற்ப மிகவும் ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.
பலாடியல் பங்களா
இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் அதானி குழுமத்தின் தலைவரான கௌதம் அதானி இந்தியாவில் பல இடங்களில் ஆடம்பர வீடுகளை வைத்துள்ள நிலையில் குர்கான் சர்கேஜில் உள்ள பலாடியல் பங்களா-வில் தான் நிரந்தரமாக வசித்து வருகிறார்.
400 கோடி ரூபாய் புதிய வீடு
சமீபத்தில் கௌதம் அதானி டெல்லி லுடியன்ஸ் பகுதியில் 400 கோடி ரூபாய்க்கு ஆடம்பர வீட்டை வாங்கியுள்ளார், அதைத் தொடர்ந்து ஆதித்யா எஸ்டேட்ஸ் நிறுவனத்திடம் இருந்து 3.4 ஏக்கர் வீட்டையும் சமீபத்தில் வாங்கியது குறிப்பிடத்தக்கது.
கார்
முகேஷ் அம்பானியை போல் கௌதம் அதானியும் மிகப்பெரிய கார் பிரியராக இருந்தாலும் அவரிடம் எந்தக் கார்கள் இருக்கிறது என்பது பற்றி முழுமையாகத் தெரியாது. இதுவரை வெளியான தகவல்கள் படி BMW 7 சீரியஸ், ரோல்ஸ் ராய்ஸ், பெராரி ஆகிய கார்களை வைத்துள்ளார்.
3 பிரைவேட் ஜெட்
பிற இந்திய கோடீஸ்வரர்களை விடக் கௌதம் அதானி அதிக எண்ணிக்கையிலான பிரைவேட் ஜெட் வைத்துள்ளார். ஒரு பாம்பார்டியர், ஒரு பீச்கிராஃப்ட் மற்றும் ஒரு ஹாக்கர் உட்பட 3 பிரைவேட் ஜெட் விமானங்கள் வைத்துள்ளார். இவை 8, 37 மற்றும் 50 இருக்கைகள் கொண்ட விமானங்களாகும்.
ஹெலிகாப்டர்கள்
அதானி எண்டர்பிரைசஸ் என்னும் மாபெரும் சாம்ராஜ்ஜியத்தின் தலைவராக இருப்பதால், கௌதம் அதானி தொடர்ந்து இந்தியா முழுக்கப் பயணம் செய்து கொண்டே இருப்பதால் பிரைவேட் ஜெட்க்கு இணையாக 3 ஹெலிகாப்டர்களையும் வைத்துள்ளார்.
இதில் 2011 ஆம் ஆண்டில் கௌதம் அதானி மிகவும் விரும்பி அகஸ்டாவெஸ்ட்லேண்ட் AW139, இரட்டை எஞ்சின் கூடிய 15 இருக்கைகள் கொண்ட ஹெலிகாப்டரை ரூ.12 கோடி விலையில் வாங்கினார்
ஏர்போர்ட்
செப்டம்பர் 2020 இல் இந்தியாவின் இரண்டாவது பரபரப்பான மும்பை சர்வதேச விமான நிலையத்தில் 74% பங்குகளை வாங்கி நாட்டின் முக்கியமான விமான நிலையத்தைத் தனதாக்கி கொண்டார் கௌதம் அதானி.
துறைமுகம்
விமான நிலையத்தைப் போல் இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறைமுகமான குஜராத்தில் உள்ள முந்த்ரா துறைமுகத்தின் பெரும் பகுதி பங்குகளைக் கைப்பற்றித் தனதாக்கிக் கொண்டார் கௌதம் அதானி.
உரிமையாளர்
கௌதம் அதானி அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட், அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட், அதானி போர்ட்ஸ் & எஸ்இஇசட் லிமிடெட், அதானி வில்மர், அதானி பவர் லிமிடெட், அதானி டோட்டல் கேஸ் லிமிடெட், அதானி டிரான்ஸ்மிஷன் லிமிடெட் ஆகிய நிறுவனங்களின் தாய் நிறுவனத்தின் உரிமையாளர் ஆவார்.
இதை விட எப்படி ஒருவர் ராஜ வாழ்க்கை வாழ முடியும்..


Click it and Unblock the Notifications