இந்திய ரூபாய் நோட்டுகள் காகிதத்தில் தயாரிக்கப்படுகிறது. இதனால் நாளடைவில் அவை கிழிந்து சேதம் அடையும் வாய்ப்புகள் இருக்கிறது. சில சமயம் ஏடிஎம்களிலிருந்து வரும் பணம் கூட கிழிந்து நம் கைக்கு வரும். ஆனால் அந்த கிழிந்த நோட்டை நீங்கள் CDM மெஷினில் டெபாசிட் செய்தால் உங்களால் செய்ய முடியாது. வங்கியைத் தவிர வேறு எங்கு கொடுத்தாலும் கிழிந்த ரூபாய் நோட்டுகளை யாரும் வாங்க மாட்டார்கள்.
அதுவும் 500 ரூபாய் நோட்டு கிழிந்து விட்டால் மனதிற்குள் ஒரு வகையான பதற்றமே ஏற்பட்டு விடும். உங்களிடமும் கிழிந்த 500 ரூபாய் இருந்தால் கவலைப்படத் தேவையில்லை. இதை மாற்றிக் கொள்வதற்கு இந்திய ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது.

500 ரூபாய் நோட்டை மாற்ற முடியுமா?: ரிசர்வ் வங்கியின் விதிகளின் கீழ் கிழிந்த 500 ரூபாய் நோட்டை எளிதாக மாற்றிக் கொள்ளலாம். ஆனால் கிழிந்த பகுதி அனைத்தையும் பத்திரமாக சேர்த்து வைத்திருக்க வேண்டும்.
80 சதவீத நோட்டு உங்களிடம் இருக்கும் பட்சத்தில் அதற்கு முழுமையாக 500 ரூபாயை அப்படியே திரும்பப் பெறலாம். அதுவே ஓரங்கள் மட்டும் சேதம் அடைந்திருக்கிறது மீதி பகுதி அப்படியே இருக்கிறது என்றாலும் முழுத் தொகையையும் திரும்பப் பெற முடியும்.
ஒரு வேளை உங்களிடம் இரண்டாக கிழிந்த பாதி நோட்டு மட்டும் இருக்கிறது என்றால் 40 முதல் 80 சதவீதம் வரையிலான தொகையை திரும்பப் பெறலாம். 500 ரூபாய் நோட்டுக்கு 250 ரூபாய் கிடைக்கும். பாதியாக கிழிந்த பகுதி 40 சதவீதத்திற்கும் குறைவாக இருந்தால் எந்தத் தொகையும் கிடைக்காது. இருந்தாலும் நீங்களே ஒரு முடிவுக்கு வராமல் அருகில் இருக்கும் வங்கிக்கு நேரில் சென்று பார்க்கலாம்.
ரூபாய் நோட்டு 2 துண்டாக கிழிந்திருந்தால் என்ன செய்ய வேண்டும்?: எந்த ரூபாய் நோட்டாக இருந்தாலும் சரி அது 2 துண்டாக கிழிந்திருந்தால் 2 துண்டையும் பத்திரமாக எடுத்து வையுங்கள். அதை மேலும் கிழிக்கவோ அல்லது வெட்டவோ கூடாது. சீரியல் நம்பர் மட்டும் இருந்தால் போதாது. நோட்டின் மொத்த நீளமும் முக்கியம்.
கிழிந்த நோட்டை மாற்றுவதற்கு வங்கி கணக்கு தேவையா?: அப்படி எந்த அவசியமும் இல்லை. நோட்டை மாற்றும் வசதி எந்தெந்த அங்கீகரிக்கப்பட்ட வங்கியில் இருக்கிறதோ? அந்த வங்கியின் கிளைக்கு சென்று நீங்கள் மாற்றிக் கொள்ளலாம். இதற்கு பேங்க் அக்கவுண்ட் தேவை இல்லை.
கட்டணம் உண்டா?: கிழிந்த நோட்டை மாற்றிக் கொள்ளும் வசதி ரிசர்வ் வங்கியின் மூலம் நிர்வகிக்கப்படுகிறது. எனவே இதை பரிசோதிக்கவோ அல்லது மாற்றிக் கொள்ளவோ எந்த ஒரு கட்டணமும் செலுத்த வேண்டாம்.


Click it and Unblock the Notifications

