இந்தியாவில் கார் என்பது ஆடம்பரமான பொருள், பணக்காரர்களுக்கானது மட்டுமே என்ற கதையெல்லாம் மாரி ரொம்ப வருஷமாச்சு. இன்று கார் என்பது அத்தியாவசியமான வாகனமாக மாறியிருக்கும் வேளையில் அனைத்துத் தரப்பு மக்களும் அவரவர் விருப்பத்திற்கும் வசதிக்கும் ஏற்றவாறு கார்களை வாங்கி வருகின்றனர்.
இதைவிட முக்கியமாக ஒரு காலத்தில் எஸ்யூவி காரை சிலர் மட்டுமே வாங்கும் நிலை இருந்தது, ஆனால் இப்போது எஸ்யூவி கார் மட்டுமே தயாரிக்கப்பட்டு வெளியிடும் அளவுக்கு இந்திய வர்த்தகச் சந்தையும், மக்களின் விருப்பமும் மாறியுள்ளது.

இதனால் வீட்டுக்கு ஒரு கார் என்ற நிலை விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படும் வேளையில் பல கொள்கைகள் மாற்றப்பட வேண்டிய கட்டாயம் தற்போது மத்திய மாநில அரசுக்கு உருவாகியுள்ளது.
இதற்குத் துவக்கமாக டெல்லி அரசு, மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பழைய காரை ஸ்கிராப் செய்தால், புதிய கார் வாங்கும் போது சாலை வரியில் 50000 ரூபாய் வரையில் தள்ளுபடி அளிக்கும் வகையில் விதிகளை மாற்றியுள்ளது.
இந்தியாவில் முதல் மாநிலமாக டெல்லி அரசு எலக்ட்ரிக் கார்களுக்கு அதிகப்படியான ஊக்கம் கொடுத்து, தனிக் கொள்கை வெளியிட்டது. இதன் தொடர்ச்சியாகத் தற்போது டெல்லி அரசு அம்மாநிலத்தில் பழைய வாகனங்களைப் பயன்பாட்டில் இருந்து நீக்கும் முயற்சியாக இப்புதிய திருத்தை கொண்டு வந்துள்ளது.
பழைய டீசல் மற்றும் பெட்ரோல் கார்களை ஸ்கிராப் கொள்கை கீழ் அளிக்கப்பட்டால், காரின் உரிமையாளர் புதிய கார் வாங்கும் போது 50000 ரூபாய் சாலை வரியில் தள்ளுபடி வழங்கப்படும். இத்திட்ட விதிகள் திருத்தப்பட்டு டெல்லி போக்குவரத்துத் துறை அமலாக்கம் செய்துள்ள நிலையில் நிதியமைச்சகம் இதற்கு ஒப்புதல் அளிக்கக் காத்துக்கிடக்கிறது.
டெல்லி NCR பகுதியில் 15 வருடமான பெட்ரோல் வாகனமும், 10 வருடமான டீசல் வாகனமும் பயன்படுத்த முடியாது. இந்த விதிகள் அமலாக்கம் செய்யப்பட்டு இருக்கும் வேளையில் பழைய வாகனங்களின் எண்ணிக்கை பெரிய அளவில் அதிகரித்திருக்கும் வேளையில் டெல்லி அரசு ஸ்கிராப் திட்ட சலுகையைக் கொண்டு வந்துள்ளது.
கார்களின் வயதை பொருத்த வரையில் 2021-22 முதல் 2022-23 வரையிலான காலகட்டத்தில் மட்டும் டெல்லியில் மொத்த 55 லட்சம் கார்களின் ரிஜிஸ்ட்ரேஷன் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதில் 1.4 லட்சம் கார்கள் மட்டுமே ஸ்கிராப் செய்யப்பட்டு உள்ளது, 6.3 கார்களுக்கு noc கொடுக்கப்பட்டு வேறு மாநிலத்தில் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டு உள்ளது.
பழைய காரை ஸ்கிராப் செய்துவிட்டு புதிய காருக்கான சாலை வரியில் 50000 ரூபாய் தள்ளுபடி கொடுப்பது காரின் உரிமையாளருக்கு லாபகரமானதா..? உங்கள கருத்தை கமெண்ட் பண்ணுங்க.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications