6 ஆண்டுகளில் ரூ.53 லட்சம் வீட்டுக் கடன் செட்டில்.. டெக்கியின் ஸ்மார்ட் கால்குலேஷன்.!!

ஒரு இந்திய தொழில்நுட்ப வல்லுநர் தனது ரூ.53 லட்சம் வீட்டுக் கடனை ஆறு ஆண்டுகளுக்குள் செலுத்தி முடித்த அனுபவத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார். நவம்பர் மாதம் ஏற்பட்ட இந்த தனிப்பட்ட மைல்கல், சமூக வலைத்தளங்களில் வைரலாகி, பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

"ரூ.53 லட்சம் வீட்டுக் கடனை 6 ஆண்டுகளில் அடைத்தேன்" என்ற தலைப்பில் அவர் வெளியிட்ட பதிவில், மாதந்திர EMI-கள் தனது மனநலனை எவ்வாறு பாதித்தன என்பதையும், இந்த அனுபவத்திலிருந்து கற்றுக்கொண்ட பாடங்களையும் விரிவாகப் பகிர்ந்துகொண்டுள்ளார்.

6 ஆண்டுகளில் ரூ.53 லட்சம் வீட்டுக் கடன் செட்டில்.. டெக்கியின் ஸ்மார்ட் கால்குலேஷன்.!!

r/delhi சப்ரெடிட்டில் அவர், ஒரு தனிப்பட்ட மைல்கல்லையும், மற்றவர்களுக்கு உதவக்கூடிய சில பாடங்களையும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். செப்டம்பர் 2019-ல் ரூ.53 லட்சம் வீட்டுக் கடன் எடுத்தேன், அதை நவம்பர் 2025-ல் முழுமையாகச் செலுத்திவிட்டேன். இதற்கு எனக்கு 6 ஆண்டுகள் ஆனது" என்று குறிப்பிட்டுள்ளார்.

அதிகமாக யோசிப்பவர்கள் அல்லது பதட்டம் உள்ளவர்கள் வீட்டுக் கடன் எடுக்க வேண்டாம் என்று அவர் சக ரெடிட்டர்ஸ்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். ஏனெனில், அதன் மன அழுத்தம் உண்மையானது என்று அவர் சுட்டிக்காட்டினார். ஜெர்மனியில் ஒரு வாகன நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராகப் பணிபுரியும் இவர், ரூ.14 லட்சம் வட்டியைச் சேர்த்து மொத்தம் ரூ.67 லட்சம் செலுத்தியதாகக் கூறினார். வெளிநாட்டிற்குச் சென்றது கடனை விரைவாக முடிக்க உதவியதாக அவர் குறிப்பிட்டார்.

"முதலில் வீடு வாங்குவது உணர்வுபூர்வமானது, ஆனால் பராமரிப்புச் சிக்கல்கள் குவியத் தொடங்கும் போது அந்த உணர்வு மறைந்துவிடும். ஒரு வீட்டை வைத்திருப்பது அதன் சிக்கல்களையும் வைத்திருப்பதாகும். தாள்களில் எனது வீட்டின் மதிப்பு இப்போது ரூ.1 கோடி, ஆனால் எனது வங்கிக் கணக்கில் பணம் கிட்டத்தட்ட இல்லை. எனவே, நிகர மதிப்பு பணப்புழக்கத்திற்குச் சமம் அல்ல என்று அந்த தொழில்நுட்ப வல்லுநர் மேலும் தெரிவித்தார்.

வீட்டுக் கடன் எடுப்பதன் சில நன்மைகளாக, இது தனிநபர்களை கடினமாக உழைக்கவும், போனஸ்களைப் பெறவும், பணத்தை சிறப்பாக நிர்வகிக்கவும் தூண்டும் என்று அவர் கூறினார்.

இந்த இடுகை பிரபலமடைந்தவுடன், சமூக ஊடகப் பயனர்கள் அவரது சாதனையைப் பாராட்டி, இது ஒரு பெரிய விஷயம் என்றும், இப்போது அவர் உண்மையான சுதந்திரத்தை அனுபவிப்பார் என்றும் கருத்துத் தெரிவித்தனர்.

ஒரு பயனர், வாழ்த்துக்கள் நண்பரே. நீங்கள் அடைந்தது சாதாரணமானதல்ல, ஒரு பெரிய விஷயம். EMI பற்றிய எண்ணம் உங்கள் தூக்கத்தை விட்டு அகல்வதை கொண்டாட வேண்டும்" என்றார். மற்றொருவர், இந்த மைல்கல்லுக்கு வாழ்த்துக்கள் சகோதரா, நான் தற்போது ஒரு EMI கட்டி வருகிறேன். ஆம் இது ஒரு போராட்டம் என்று கூறினார்.

மூன்றாவது நபர், ஒரு பெரிய சாதனை. 2011 முதல் 2017 வரை இதேபோன்ற ஒன்றைச் செய்துள்ளதால், அது எவ்வளவு பெரிய நிம்மதியையும் உணர்ச்சிபூர்வமான பாதுகாப்பையும் தருகிறது என்று எனக்குத் தெரியும்" என்று கருத்துத் தெரிவித்தார்.

நான்காவது நபர், இப்போது நீங்கள் மதிப்பீட்டுக் கூட்டங்களில் உட்காரும்போதோ அல்லது உங்கள் முதலாளி வார இறுதி நாட்களில் வேலை செய்யச் சொல்லும்போதோ ஒரு வேறுபட்ட உடல்மொழியைக் கொண்டிருப்பீர்கள். சுதந்திரத்திற்கு வரவேற்கிறோம் என்று கூறினார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+