தீபாவளி என்றாலே அனைவருக்கும் முதலில் ஞாபகத்திற்கு வருவது பட்டாசு வெடிக்க வேண்டியது தான் என்பது அனைவரும் அறிந்ததே.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தீபாவளி அன்று பட்டாசு வெடித்து மகிழ்வதை நாம் பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் சிவகாசியிலிருந்து தயாராகிவரும் பட்டாசுகள் தான் இந்தியாவில் 80% விற்பனையாகி வருகிறது. இந்த நிலையில் சிவகாசி தற்போது உலக அளவில் தனது ஆதிக்கத்தை செலுத்த முயற்சி செய்து வருகிறது.
பட்டாசு சந்தை
உலக அளவில் பட்டாசு சந்தையை பொறுத்தவரை தற்போது சீனா மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஆண்டுக்கு இந்திய மதிப்பில் ரூ.26,000 கோடி வருமானத்தை சீனா பட்டாசு விற்பனையில் மட்டுமே பெற்று வருகிறது என்பதும் உலக அளவில் பட்டாசு ஏற்றுமதி சந்தையில் சீனா முதலிடத்தில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
சிவகாசி பட்டாசு
இந்த நிலையில் தற்போது ரூ.6000 கோடி பட்டாசுகளை இந்திய அளவில் விற்பனை செய்து சிவகாசி உலக அளவில் தனது ஏற்றுமதியை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. அதற்கு முக்கிய காரணம் மத்திய அரசு அமைத்த பசுமை பட்டாசு கொள்கைகளை சிவகாசி பட்டாசு தொழில் அதிபர்கள் ஏற்றுக்கொண்டதால் என்பது குறிப்பிடத்தக்கது.
பசுமை பட்டாசு
சிவகாசி பட்டாசு தொழிலில் ஒவ்வொரு ஆண்டும் வளர்ச்சி அடைந்ததற்கு முக்கிய காரணம் பசுமை விதிகளை முழுமையாக ஏற்றுக் கொண்டதுதான் என சிவகாசி பட்டாசு தொழில் அதிபர் ஒருவர் தெரிவித்துள்ளார். அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை அமைத்த பசுமை பட்டாசு அலகுக்கு சிவகாசி பட்டாசு தொழிலாளர்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பட்டாசு ஏற்றுமதி
சிவகாசி பட்டாசுகள் மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டதில் சுற்றுச்சூழல் தரத்தை கடைபிடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளன. இதனை அடுத்து சிவகாசி பட்டாசு தயாரிப்பாளர்கள் தற்போது உள்நாட்டில் மட்டுமன்றி வெளிநாட்டிலும் ஏற்றுமதியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளனர். வழக்கமான பட்டாசுகளை விட தற்போது 30% மாசு குறைவான பட்டாசுகளை உற்பத்தி செய்வதாகவும் இதனால் ஏற்றுமதியில் அதிக கவனம் செலுத்த உள்ளதாகவும் பட்டாசு தொழில் அதிபர்கள் தெரிவித்துள்ளனர்.
சீனாவுக்கு சவால்
தற்போது 6,000 கோடி பட்டாசுகளை தயாரித்து விற்பனை செய்து வரும் சிவகாசி பட்டாசு தொழிற்சாலைகள் வரும் காலத்தில் சீனாவுக்கு சவால் விடும் வகையில் உலக அளவில் ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளது என்றும் இதற்கு அரசும் ஒத்துழைப்பு தருவதாக உறுதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது உலகளாவிய சந்தைக்கு மாறுவதற்கு வழி வகுக்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு பட்டாசு மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் கணேசன் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications