மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி ரசிகர்களால் தல என செல்லமாக அழைக்கப்படுகிறார். தற்போது ஐபிஎல் போட்டியில் சென்னை அணியில் அவர் தொடர்ந்து விளையாடி வருகிறார்.
தல தோனியை கௌரவிக்கும் விதமாக 7 ரூபாய் நாணயத்தை வெளியிட ரிசர்வ் வங்கி திட்டமிட்டு இருப்பதாக கடந்த சில நாட்களாகவே சமூகவலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் தலைமைத்துவத்தை கௌரவித்து அவருடைய ஜெர்சி எண்ணாண 7ஐ குறிப்பிட்டு இந்திய ரிசர்வ் வங்கி 7 ரூபாய் நாணயத்தை வெளியிடுகிறது என அந்த தகவலில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்திய கிரிக்கெட்டில் தோனியின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் படத்துடன் கூடிய நாணயம் வெளியிடப்பட உள்ளதாக அதில் கூறப்பட்டிருந்தது.
தல தோனியின் ரசிகர்கள் இதனை உற்சாகத்துடன் பகிர்ந்தனர். இதனிடையே இந்த தகவல் தவறானது என பிரஸ் இன்ஃபர்மேஷன் பியூரோ (Press Information Bureau ) தெரிவித்துள்ளது. எக்ஸ் சமூக வலைதளத்தில் வைரலான அந்த படத்தைப் பகிர்ந்துள்ள பிரஸ் இன்ஃபர்மேஷன் பியூரோ, தோனியை கௌரவிக்கும் வகையில் ரிசர்வ் வங்கி 7 ரூபாய் நாணயத்தை வெளியிட உள்ளதாக பரவிய தகவல் போலியானது என்றும், பொருளாதார விவகாரங்கள் துறை இதுபோன்ற எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்றும் கூறியுள்ளது.
இதனால் தல ரசிகர்கள் சோகமடைந்துள்ளனர். மக்கள் இவ்வாறு சமூகவலைதளங்களில் வரும் தகவல்கள் அனைத்தையும் கண்மூடித்தனமாக நம்பக் கூடாது என்பது இதன் மூலம் தெளிவாகியுள்ளது. பல்வேறு இணையதளங்களும் இந்த படத்தை உண்மை சரிபார்ப்புக்கு உட்படுத்தி படங்கள் போலியானது என உறுதிப்படுத்தியுள்ளன.
முன்னதாக மகேந்திர சிங் தோனி படத்தை பயன்படுத்தி பணம் பறிக்கும் முயற்சிகள் இன்ஸ்டாவில் நடைபெற்றன. பேருந்துக்கு செல்ல பணமின்றி தோனி தவிப்பதாக கூறி போலியான படங்கள் இன்ஸ்டாவில் பகிரப்பட்டு பணம் பறிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே மகேந்திர சிங் தோனி தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலேயே தக்க வைக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. தோனியை பொறுத்தவரை இந்திய கிரிக்கெட் அணியின் புகழ்பெற்ற கேப்டனாக இருக்கிறார். இவர் தலைமையில் இந்திய அணி டி20 உலக கோப்பை மற்றும் ஒரு நாள் உலக கோப்பையையும் கைப்பற்றியுள்ளது. அதே போல சாம்பியன்ஸ் டிராபியும் வாங்கி இருக்கிறது. எனவே தான் இன்றளவும் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் தோனியை கொண்டாடுகின்றனர்.
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார் தோனி. இவர் தலைமையில் சிஎஸ்கே அணி 5 முறை சாம்பியன் பட்டம் பெற்றிருக்கிறது. கடந்த சீசனுடன் தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகிவிட்டார். தொடர்ந்து அணிக்காக அவர் விளையாடினார். இந்த முறையும் அவர் சிஎஸ்கே அணியில் தக்க வைக்கப்படுகிறார். வரும் 24ஆம் தேதி ஐபிஎல் அணி வீரர்களுக்கான ஏலம் நடைபெற உள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications