இந்தியாவின் தனியார் வங்கிகளில் ஒன்றான கோட்டக் மஹிந்திரா வங்கி, 65 மில்லியன் (6.5 கோடி) பங்குகளை, qualified institutional placement (QIP) கம்பெனிக்ளுக்கு விற்று, 7,442.5 கோடி ரூபாயைத் திரட்டி இருக்கிறார்களாம்.

ஒரு பங்கு விலை 1,145 ரூபாய் என விற்று இருக்கிறார்களாம். இது சந்தை விலையான 1,223 ரூபாயை விட சுமாராக 6.4 சதவிகிதம் விலை குறைவு என்பது கவனிக்கத்தக்கது.
செபியின் விதிகள் படி, qualified institutional placement (QIP) கம்பெனிகளிடம் பங்குகளை விற்று பணத்தை திரட்டி விரும்புபவர்கள், அதிகபட்சமாக 5 % வரை விலை தள்ளுபடி கொடுக்கலாமாம். அதன் படி தள்ளுபடி விலையில் தான் அறிவித்து இருக்கிறார்களாம். ஆனால் கடந்த வாரத்தில் கோட்டக் மஹிந்திரா பங்குகள் மெல்ல விலை ஏற்றம் காணத் தொடங்கிவிட்டதாம்.
இந்த பங்கு வெளியீட்டை
Invesco Oppenheimer Developing markets Fund,
Canada Pension Plan Investment Board,
ICICI Prudential Asset Management போன்ற கம்பெனிகள் வாங்கி இருக்கிறார்களாம்.
ஐசிஐசிஐ மியூச்சுவல் ஃபண்ட் கம்பெனி, தன்னுடைய 18 மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் வழியாக, கோட்டக் மஹிந்திரா கம்பெனியின் பங்குகளை வாங்கி இருக்கிறார்களாம்.
சரி இந்த 7,442.5 கோடி ரூபாயை என்ன செய்யப் போகிறார்கள்..? எனக் கேட்டால்... இந்த பணத்தை வைத்து, கோட்டக் மஹிந்திரா வங்கி, தன் பேலன்ஸ் ஷீட்டை வலுப்படுத்தப் போகிறார்களாம். அதோடு முதலீடுகளையும் வலுப்படுத்தப் போகிறார்களாம்.
கோட்டக் மஹிந்திரா வங்கியின் பங்கு விலை கடந்த வெள்ளிக் கிழமை அன்று 1,222 ரூபாயைத் தொட்டு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. இதன் 52 வார குறைந்த விலை 1,001 ரூபாய். இந்த பங்கின் 52 வார அதிக விலை 1,740 ரூபாய். இந்த பங்கின் தற்போதைய சந்தை மதிப்பு (Market Capitalization) 2.34 லட்சம் கோடி ரூபாய்.
இந்தியாவின் டாப் 10 சந்தை மதிப்பு கொண்ட கம்பெனிகள் பட்டியலில் கோட்டக் மஹிந்திராவுக்கு 9-வது இடம் என்பது கவனிக்கத்தக்கது.
இந்தியாவின் டாப் 10 சந்தை மதிப்பு கொண்ட பங்குகளில், இடம் பிடித்து இருக்கும் 3 தனியார் வங்கிகளில் ( ஹெச் டி எஃப் சி பேங்க், கோட்டக் மஹிந்திரா மற்றும் ஐசிஐசிஐ பேங்க்) இதுவும் ஒன்று.


Click it and Unblock the Notifications