மற்ற உலகப் பணக்காரர்களை ஓரங்கட்டி.. ரூ. 9,49,50,50,00,00,000 சொத்து மதிப்பைக் குவித்த எலான் மஸ்க்!

வெகு விரைவில் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு ட்ரில்லியனை எட்டி பெரும் கோடீஸ்வரராக மாற இருக்கிறார் எலான் மஸ்க். பணக்காரர்கள் குறித்த கருத்துக்கணிப்புகள் அவ்வப்போது வெளியிடப்படும். அதன் படி அவருடைய சொத்து மதிப்பு சீக்கிரம் 1 ட்ரில்லியன் டாலரை எட்டக் கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதை இந்திய ரூபாயில் மதிப்பிட்டு பார்த்தால் ரூ. 9,49,50,50,00,00,000. தோராயமாக சுமார் 95 லட்சம் கோடி ரூபாய்.

இதில் சுவாரசியம் என்னவென்றால் உலகில் உள்ள சில முன்னணி நாடுகளின் ஜிடிபி-யை விட மஸ்கின் சொத்து மதிப்பு அதிகமாக இருக்கிறதாம். உதாரணமாக தைவான் நாட்டின் மொத்த ஜிடிபி 977 பில்லியன் டாலர்கள். அயர்லாந்து நாட்டின் மொத்த ஜிடிபி 779 பில்லியன் டாலர்கள். ஸ்வீடன் மற்றும் சிங்கப்பூர் ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இவை முறையே 760 பில்லியன் டாலர் மற்றும் 660 பில்லியன் டாலர் மொத்த ஜிடிபியைக் கொண்டுள்ளன. இப்படி வளர்ந்த நாடுகளின் பட்டியலையே மிஞ்சும் அளவிற்கு சொத்தை குவித்துள்ளார்.

மென்ஹாட்டனின் பொருளாதாரத்தை மிஞ்சும் சொத்து மதிப்பு: வால் ஸ்ட்ரீட் மற்றும் பிற முக்கிய நிறுவனங்கள் அமைந்திருக்கும் பகுதியான மென்ஹாட்டன் நகரத்தின் பொருளாதாரத்திற்கு இணையான சொத்து மதிப்பை எலான் மஸ்க் கொண்டிருக்கிறார். 2024-ஆம் ஆண்டில் இந்நகரத்தின் பொருளாதார மதிப்பு குறித்த தகவல்கள் வெளியானது. அந்தத் தரவுகளின் அடிப்படையில் இந்தப் பகுதி 1 ட்ரில்லியன் டாலருக்கு சற்றே அதிகம் என கணக்கிடப்பட்டிருந்தது. தற்போது இந்த இலக்கையே எலான் மஸ்க்கும் எட்டியிருக்கிறார்.

பல முன்னணி பணக்காரர்களின் சொத்து மதிப்பை மிஞ்சிய எலான் மஸ்க்: அமேசான் நிறுவனத்தின் நிறுவனரான ஜெஃப் பெசோஸ், ஆரக்கிள் நிறுவனத்தின் நிறுவனரான லாரி எலிசன் மற்றும் கூகுள் நிறுவனத்தின் இணை நிறுவனர்களான லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் ஆகிய முன்னணி பணக்காரர்களின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பே 1.09 ட்ரில்லியன் டாலர் தான். இதை மொத்தமாக தனிநபராக சாதித்து காட்டியுள்ளார் மஸ்க்.

மற்ற உலகப் பணக்காரர்களை ஓரங்கட்டி.. ரூ. 9,49,50,50,00,00,000 சொத்து மதிப்பைக் குவித்த எலான் மஸ்க்!

ஏலான் மஸ்கின் செல்வத்தில் பெரும் பகுதியானது டெஸ்லா நிறுவனத்தின் மூலமாகவே கிடைக்கிறது. அங்கு மஸ்க் வைத்திருக்கும் பங்குகள் மற்றும் ஆப்ஷன்களின் மதிப்பு மட்டுமே 273 பில்லியன் டாலர்கள். சமீபத்தில் CNN வெளியிட்ட மற்றொரு முக்கிய தகவலும் கிடைத்துள்ளது. ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் பங்குச்சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டால் எலான் மஸ்கின் சொத்து மதிப்பு இன்னும் 841 பில்லியன் டாலர்கள் அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

ஹூஸ்டன் நகரத்தின் சொத்து மதிப்பை விட அதிகம் வைத்திருக்கும் எலான் மஸ்க்: அமெரிக்காவிலேயே ஒரு சில நகரங்கள் குறிப்பாக சொத்து மதிப்பின் அடிப்படையில் முன்னணி வகிக்கின்றன. அந்த வகையில் அமெரிக்காவின் மூன்றாவது முக்கிய பெருநகரமாக இருக்கும் ஹூஸ்டன் நகரத்தில் உள்ள அனைத்து வீடுகள் மற்றும் வணிக கட்டிடங்களின் சொத்து மதிப்பு வெறும் 879 பில்லியன் டாலர் மட்டுமே. ஆனால் மஸ்கின் சொத்து மதிப்பு இந்த ஒட்டுமொத்த நகரத்தை விலைக்கு வாங்கும் அளவுக்கு மிகப்பெரியது.

ஃபோர்ப்ஸ் நிறுவனம் உலகளவில் இருக்கும் பணக்காரர்களின் சொத்து மதிப்பை அறிக்கைகளாக வெளியிடும். அதில் முன்னணியில் இருக்கும் 50 ஸ்போர்ட்ஸ் டீம்களின் மொத்த சொத்து மதிப்பு 353 பில்லியன் டாலர்கள் என கூறியிருந்தது. அதாவது மஸ்க் வைத்திருக்கும் சொத்தில் மூன்றில் ஒரு பங்கு. ஆனால் மஸ்க் தன் கைவசம் அதைவிட இரண்டு மடங்கு அதிக சொத்து மதிப்பை வைத்திருக்கிறார். இந்த செல்வத்தைக் கொண்டு அனைத்து முக்கிய விளையாட்டு அணிகளையும் விலைக்கு வாங்கி விட முடியுமாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+