எத்தனை AI வந்தாலும் இந்த வேலையை மனுஷங்க தான் செய்ய முடியும்!! ஒரு மணி நேரத்துக்கு ரூ.900 சம்பளம்!!

செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ தொழில்நுட்பத்தின் வருகை ஒயிட் காலர் எனப்படும் அலுவலகத்தில் அமர்ந்து பார்க்கக்கூடிய பல்வேறு வேலைகளுக்கும் ஆபத்தாக அமைந்திருக்கிறது. ஹெச் ஆர் வேலைகள், பிபிஓ, கஸ்டமர் சப்போர்ட், ஐடி உள்ளிட் அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக மனிதர்களிடமிருந்து ஏஐ வசம் சென்ற வண்ணம் இருக்கிறது.

உலகம் முழுவதும் கோடிகணக்கான மக்கள் எப்போது வேண்டுமானாலும் நம்முடைய வேலை பறிபோகலாம் என குழப்பத்திலும் அச்சத்திலும் ஆழ்ந்திருக்கின்றனர். தற்போது நல்ல சம்பளத்தில் வேலையில் இருப்பவர்களுக்கு கூட எப்போது வேண்டுமானாலும் வேலை பறிபோகலாம் என்பது தான் நிலைமை. ஆனால் எத்தனை ஏஐ வந்தாலும் மனிதர்களால் மட்டுமே செய்யக்கூடிய குறிப்பிட்ட சில வேலைகள் இருக்கின்றன. இப்போதும் அந்த வேலைகளுக்கு நிறைய டிமாண்ட் இருக்கிறது.

எத்தனை AI வந்தாலும் இந்த வேலையை மனுஷங்க தான் செய்ய முடியும்!! ஒரு மணி நேரத்துக்கு ரூ.900 சம்பளம்!!

கார்பெண்டிங், பிளம்பிங், எலக்ட்ரீசியன் போன்ற வேலைகளை ப்ளூ காலர் வேலை என அழைக்கிறோம். குறிப்பிட்ட திறன் சார்ந்த இத்தகைய வேலைகளை ஏஐ தொழில்நுட்பத்தால் செய்யவே முடியாது, மனிதர்களால் தான் செய்ய முடியும். அப்படி பந்தாரி கா வியாங்கா என்பவர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு இருக்கக்கூடிய பதிவில் ப்ளூ காலர் வேலைகள் தான் எதிர்காலமாக இருக்கப்போகிறது இனி வரக்கூடிய இளைஞர்கள் இது போன்ற ப்ளூ காலர் வேலைகளை தான் இனி செய்ய வேண்டும் இந்த வேலைகளுக்கு எப்போதுமே ஆபத்து இல்லை எனக் கூறியிருக்கிறார்.

அவர் குறிப்பிடக் கூடிய வேலை கார்பெண்டர் . எங்கள் வீட்டில் கார்பென்டர் ஒரு வேலைக்காக வந்தார், 45 நிமிடங்கள் மட்டுமே வேலை பார்த்தார் அதற்கு 900 ரூபாய் அவருக்கு வருமானமாக கிடைத்தது என கூறியிருக்கிறார். எனவே எத்தனை ஏஐ வந்தாலும் இது போன்ற ப்ளூ காலர் வேலைகளுக்கு தான் ஆபத்து இல்லை எனவே அந்த வேலைகளை இளைஞர்கள் கற்றுக் கொள்வது எதிர்காலத்திற்கு நல்லது என அவர் பதிவு செய்து இருக்கிறார்.

அவரது பதிவு பலரது கவனத்தையும் ஈர்த்து இருக்கிறது. ஏராளமானவர்கள் எலக்ட்ரீசியன் , பிளம்பிங் போன்ற வேலைகளுக்கும் ஐடி ஊழியர்களை விட அதிகமாக சம்பாதிக்கிறார்கள் இந்த வேலைகளுக்கு டிமாண்ட் அதிகமாக இருக்கிறது என கருத்து பதிவிட்டு வருகின்றனர். ஐரோப்பாவில் இருந்து கமெண்ட் செய்துள்ள ஒருவர் எங்கள் வீட்டில் கார்பெண்டர் வந்திருந்தார் 30 நிமிடங்கள் வேலை செய்ததற்கு 200 யூரோக்களை நான் கொடுத்தேன் என தெரிவித்திருக்கிறார். டெஸ்லா காரில் அவர் வந்தது தான் ஆச்சர்யம் என பதிவிட்டுள்ளார்.

அதேவேளையில் மற்றொரு நபர் எனக்கு தெரிந்த ஒரு எலக்ட்ரிஷன் மாதம் 2 லட்சம் ரூபாய் சம்பாதிக்கிறார் என கூறியிருக்கிறார். எதிர்காலத்தில் இந்த வேலைகளுக்கு நல்ல வருமானம் உண்டு என பலரும் கூறியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+