டி.சி.எஸ்., இன்போசிஸ் மற்றும் விப்ரோ போன்ற ஐ.டி. நிறுவனங்கள் அளவுக்கு சாமானிய மக்கள் மத்தியில் அதிகம் பிரபலம் இல்லாத ஆனால் பல நூறு கோடியில் வருமானம் பெறும் நிறுவனம் தான் வேல்யூபாயிண்ட் சிஸ்டம்ஸ்.
இந்த நிறுவனத்தின் நிறுவனர் கர்நாடகத்தின் சிறிய நகரில் பிறந்து வளர்ந்தவரான ஷான்பாக். இவரது ஊரில் உயர்நிலை பள்ளியோ அல்லது பெரிய கல்வி நிறுவனங்களோ கிடையாது. ஆகையால் அவர் கல்விக்காக அருகில் உள்ள நகருக்கு பயணம் செய்ய வேண்டியிருந்தது. படிப்பை முடித்தவுடன் பஞ்சாபில் மொஹாலியில் அரசு பணியில் சேர்ந்தார்.

சுமார் ஒன்றரை ஆண்டுகள் அந்த பணியில் இருந்த ஷான்பாக்குக்கு உள்ளூர்வாசிகளை முன்னேற்ற வேண்டும் என்ற எண்ணத்தை மறக்க முடியவில்லை. ஆகையால் தனது எண்ணத்தை செயல்படுத்துவோம் என்று அரசாங்க வேலையை ராஜினாமா செய்தார்.
பின்பு ஷான்பாக் 1991ம் ஆண்டில் பெங்களூருவில் ஷான்பாக் வெறும் ரூ.10 ஆயிரம் முதலீட்டில் தொடக்கநிலை நிறுவனங்களுக்கு சிஸ்டம் மேம்பாட்டு சேவைகள் வழங்கும் வேல்யூபாயிண்ட் சிஸ்டம்ஸ் நிறுவனத்தை தொடங்கினார்.
அந்த ஆண்டில்தான் நம் நாட்டின் பொருளாதாரம் மிகப்பெரிய பொருளாதார மாற்றத்தை சந்திக்க தொடங்கியது. ஷான்பாக் முதலில் தனது நிறுவனத்தை சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்களில் நடத்தினார்.
பட்டப்படிப்பு படித்தவர்களை பணியமர்த்தி அவர்களுக்கு தொழில்நுட்பம் மற்றும் சேவை பயிற்சிகளை வழங்கினார். வேல்யூபாயிண்ட் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் பணியாளர்களில் சுமார் 90 சதவீதம் பேர் கிராமப்புற பின்னணியில் இருந்து வந்தவர்கள், அவர்களில் 85 சதவீதம் பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கிராமப்புறங்களை சேர்ந்தவர்களுக்கு வேலை வழங்குவதில் ஷான்பாக் உறுதியாக இருந்தார். சிறிய முதலீட்டில் தொடக்கநிலை நிறுவனங்களுக்கு சிஸ்டம் மேம்பாட்டு சேவைகள் வழங்கும் நிறுவனமாக தொடங்கிய வேல்யூபாயிண்ட் சிஸ்டம்ஸ் இன்று தெற்காசியாவின் ஐ.டி. உள்கட்டமைப்பு சேவைகளை வழங்கும் முன்னணி நிறுவனமாக உருவெடுத்துள்ளது.
ஷான்பாக் இதனை அவ்வளவு எளிதாக சாதித்து விடவில்லை. கடந்த 30 ஆண்டுகளில் உலகத்தையே ஆட்டம் காணவைத்த 3 பொருளாதார மந்த நிலைகளை ஷான்பாக் சமாளித்து தனது நிறுவனத்தை திறம்பட நடத்தினார்.
வேல்யூபாயிண்ட் சிஸ்டம்ஸ் நிறுவனம் தற்போது 73 பார்ச்சூன் மற்றும் 500 நிறுவனங்களுக்கு ஐ.டி. உள்கட்டமைப்பு சேவைகளை வழங்குகிறது. 2020ம் ஆண்டில் வேல்யூபாயிண்ட் சிஸ்டம்ஸ் நிறுவனம் சுமார் ரூ.600 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
More From GoodReturns

மாதம் ரூ.4 லட்சம் சம்பளம் தரும் வேலையை விட்டு ரோட்டு கடை போட்ட டெக்கி..!! சாதித்தாரா? சறுக்கினாரா?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!



Click it and Unblock the Notifications