வரும் டிசம்பர் மாதம் முதல் வங்கிகளில் பெரிய அளவில் பணம் அனுப்ப பயன்படுத்தப்படும், RTGS சேவையானது 24 மணி நேரமும் செயல்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
வங்கிகளில் தற்போது ஆர்டிஜிஎஸ் சேவையானது வங்கியின் வேலை நாட்களில் மட்டுமே செய்யப்படுகிறது.
அதோடு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே இந்த சேவை வழங்கப்பட்டு வருகிறது.
RTGS சேவை சலுகை
ஆனால் வார விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் இந்த சேவையானது கிடையாது. ஆனால் அடுத்து வரும் டிசம்பர் மாதம் முதல் இந்த சேவையானது 24*7*365 மணி நேரமும் கிடைக்கும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இது உண்மையில் ஒரு நல்ல அறிவிப்பு தான்.
நெஃப்ட் சலுகை
ஏற்கனவே கடந்த ஆண்டு டிசம்பர் 16, 2019 முதல் நெஃப்ட் சேவையினை, 24 மணி நேர சேவையாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. ஆக இந்த முறை ஆர்டிஜிஎஸ் சேவையினை 24 மணி நேரமாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. இந்த சேவையினை சில நாடுகள் மட்டுமே வழங்கி வரும் நிலையில், தற்போது அந்த பட்டியலில் இந்தியாவும் விரைவில் இணைய உள்ளது.
மிகப்பெரிய தொகை பரிமாற்றம்
அதெல்லாம் சரி முதலில் ஆர்டிஜிஎஸ் (RTGS) சேவை என்றால் என்ன? மிகப்பெரிய ஒரு தொகையினை, ஒரு வங்கியின் கிளையில் இருந்து, அதே வங்கியின் மற்றொரு கிளைக்கும், மற்ற வங்கிகளுக்கும் பணம் அனுப்ப பயன்படும் ஒரு வங்கி சேவையாகும். இதன் மூலம் மிகப்பெரிய தொகையையும் பரிமாற்றம் செய்ய முடியும்.
ஆர்டிஜிஎஸ் சேவையில் என்ன சிறப்பு?
உதாரணத்திற்கு NEFT சேவையில் ஒரு வாடிக்கையாளர் அதிகபட்சமாக 2 லட்சம் ரூபாய் வரையில் பணம் அனுப்ப முடியும். ஆனால் அதற்கு மேல் அனுப்ப வேண்டும் எனில் ஆர்டிஜிஎஸ் சேவையினை தான் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதில் உள்ள நல்ல விஷயம் என்னவெனில் தாமதம் இல்லாமல் உடனடியாக பணத்தினை பெற்றுக் கொள்ள முடியும் என்பது தான்.
எவ்வளவு கட்டணம்?
இதில் கவனிக்கதக்க நல்ல விஷயம் என்னவெனில் ரிசர்வ் வங்கி டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் நோக்கில், நெஃப்ட் உள்ளிட்ட இணைய பரிவர்த்தணைகளுக்கு கட்டணங்களை ரத்து செய்தது. ஆனால் ஆர்டிஜிஎஸ் சேவைக்கு கட்டணம் உண்டு. இந்திய நிதிச் சந்தைகளின் உலகளாவிய ஒருங்கிணைப்பு, இந்தியாவின் சர்வதேச நிதி மையங்களை அபிவிருத்தி செய்வதற்கான முயற்சிகள் மற்றும் உள்நாட்டு கார்ப்பரேட்டுகள், நிறுவனங்களுக்கு பெரிய அளவிலான கட்டண நெகிழ்வுத்தன்மையை வழங்குவதற்கான பணிகளை ஆதரிக்க முடிவு செய்துள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications