யோகா குரு பாபா ராம்தேவ்-ன் பதஞ்சலி ஆயுர்வேத் நிறுவன கட்டுப்பாட்டில் இயக்கும் ருச்சி சோயா பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் பெரிய அளவிலான வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், தொடர்ந்து வர்த்தகத்தை விரிவாக்கம் செய்து வருகிறது.
இதன் படி பதஞ்சலி நேச்சுரல் பிஸ்கட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை மொத்தமாகக் கைப்பற்ற உள்ளதாக ருச்சி சோயா இண்டஸ்ட்ரீஸ் பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையத்திற்குச் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ருச்சி சோயா இண்டஸ்ட்ரீஸ்
ருச்சி சோயா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தைப் பதஞ்சலி ஆயுர்வேத் கைப்பற்றிய நாளில் இருந்து பல்வேறு நிர்வாக மாற்றங்களைச் செய்து வரும் நிலையில், தற்போது புதிதாக ஒரு நிறுவனத்தைக் கைப்பற்றித் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்துள்ளது.
யோகா குரு பாபா ராம்தேவ்
பதஞ்சலி ஆயுர்வேத், ருச்சி சோயா, பதஞ்சலி நேச்சுரல் பிஸ்கட் ஆகிய அனைத்து நிறுவனங்களும் பாபா ராம்தேவ் நிர்வாகத்தின் கீழ் இருந்தாலும் ருச்சி சோயா மற்றும் பதஞ்சலி ஆகியவை தனித்தனி நிறுவனமாகவே இயங்கி வருகிறது.
பிஸ்கட் வர்த்தகம்
இதன் வாயிலாகவே தற்போது ருச்சி சோயா இண்டஸ்ட்ரீஸ், சுமார் 60.20 கோடி ரூபாய்க்கு பதஞ்சலி நேச்சுரல் பிஸ்கட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தைப் பிஸ்னஸ் டிரான்ஸ்பர் ஒப்பந்தத்தின் கீழ் வாங்க உள்ளதாகவும், இதற்கு நிர்வாகத் தலைவர்களும் ஒப்புதல் அளித்துள்ளதாகப் பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையத்திற்குச் சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
60 கோடி ரூபாய் பரிமாற்றம்
இந்த வர்த்தகப் பரிமாற்றத்தை அடுத்த 2 மாதத்திற்குள் செய்யவும், குறிப்பிட்டு உள்ள 600.2 கோடி ரூபாய் தொகையை இரண்டு கட்டமாகச் செலுத்தவும் திட்டமிட்டு உள்ளது ருச்சி சோயா. முதல் கட்டமாக ஒப்பந்தம் செய்யப்பட்டு வர்த்தகம் மாற்றம் துவங்கிய நாளில் 15 கோடி ரூபாயும், மீதமுள்ள தொகையை அடுத்த 90 நாட்களுக்குள் செலுத்த உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
பிஸ்னஸ் டிரான்ஸ்பர் ஒப்பந்தம்
இந்தப் பிஸ்னஸ் டிரான்ஸ்பர் ஒப்பந்தத்தின் மூலம் பதஞ்சலி நேச்சுரல் பிஸ்கட்-ன் அனைத்துச் சொத்துக்கள், ஊழியர்கள், உரிமங்கள், சப்ளையர்கள் உடனான ஒப்பந்தம் அனைத்தும் அப்படியே கைமாற உள்ளது. இந்தக் கைப்பற்றல் மூலம் ருச்சி சோயா-வின் வர்த்தகம் விரிவாக்கம் அடையும்.
ரீபிராண்டு செய்யுமா
மேலும் ருச்சி சோயா பதஞ்சலி நேச்சுரல் பிஸ்கட்-ஐ முற்றிலுமான ரீபிராண்டு செய்து விற்பனை செய்ய உள்ளதா அல்லது இதே பிராண்ட் கீழ் விற்பனை செய்ய உள்ளதா என்று தெரியவில்லை.
ருச்சி சோயா பங்குகள் விலை
இன்றைய வர்த்தக முடிவில் ருச்சி சோயா இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 3.71 சதவீதம் அதிகரித்து 763.05 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் லாக்டவுன் அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில் FMCG நிறுவன அதிகளவிலான வர்த்தகத்தை அடையும் என்பதால் இத்துறை நிறுவன பங்குகளில் அதிகளவில் முதலீடு குவிந்து பங்கு விலை அதிகரித்து வருகிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications