என்னைக்குமே நாம விரும்பும் தொழிலை செய்தால் அதில் வேகமான முன்னேற்றத்தை காணலாம். மும்பையை செய்த தொழில்முனைவோரான ருச்சியேதா பாட்டியா வாழ்க்கை அதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கும்.
மகாராஷ்டிராவை சேர்ந்தவர் ருச்சியேதா பாட்டியா. இவர் மும்பையில் உள்ள ஜெய் ஹிந்த் கல்லூரியில் இளங்கலை பொருளாதாரம் பட்டம் பெற்றவர். தொழில்முனைவோர் ஆக வேண்டும் என்ற ஆர்வத்தில் தனது 22வது வயதில் தி பெயிண்ட்பால் கிளப் என்ற நிறுவனத்தை தொடங்கினார் வெற்றிகரமான முயற்சியாக இருந்தது.

இருப்பினும், அதன் எதிர்கால வளர்ச்சி குறித்து அவருக்கு சந்தேகம் எழுந்தது. இதனையடுத்து 2012ல் தி பெயிண்ட்பால் கிளப் நிறுவனத்தை விற்று விட்டார். இதனையடுத்து பாட்டியாவுக்கு உணவு மற்றும் குளிர்பான துறை மீது ஆர்வம் ஏற்பட்டது. இந்த துறையில் ஒரு நிறுவனத்தை தொடங்க தனக்கு ஒரு சான்றிதழ் என்பதை அவர் உணர்ந்தார்.
இதனையடுத்து அமெரிக்க சமையல் கல்வி நிறுவனத்திற்கு விண்ணப்பித்தார். அந்த கல்வி நிறுவனமும் எந்தவித நிபந்தனையின்றி ஏற்றுக் கொண்டது. ஆனால் அதற்கு 6 மாத வணிக அனுபவம் தேவைப்பட்டது. இதனையடுத்து மும்பையின் மேரியட் ஹோட்டலில் இன்டர்ன்ஷிப்பிற்கு விண்ணப்பித்தார். அந்த ஹோட்டலும் வாய்ப்பு கொடுத்தது. இது ருச்சியேதா பாட்டியாவின் சமையல் பயணத்திற்கு பெரும் ஊக்கமாக அமைந்தது.
அங்கு அவர் இனிப்பு வகை உணவுகளை நிறைய கற்றுக் கொண்டார். மேலும் ஒரு தசாப்த கால விருந்தோம்பல் துறையில் அனுபவம் கொண்டவரும், மேரியட்டின் திறமையான பேஸ்டரி செஃப் அமித் ஷர்மாவுடன் நல்ல அறிமுகம் கிடைத்தது.
இதனையடுத்து அவர்கள் இருவரும் மும்பையின் பாந்த்ராவில் ரூ.85 லட்சம் முதலீட்டில் 300 சதுர அடியில் லவ் அண்ட் சீஸ்கேக் என்ற கேக் கடையை தொடங்கினர். முதல் நாள் முதலே இது லாபகரமான முயற்சியாக அமைந்தது.
ருச்சியேதா மற்றும் அமித்தும் ப்ரிசர்வேட்டிவ்கள் அல்லது emulsifiers எதுவும் இல்லாமல் வழங்குகிறார்கள். இதனால் ஒவ்வொரு பேக்கரியும் சாதாரண கேக்குகளை விற்கும் நேரத்தில் லவ் அண்ட் சீஸ்கேக் மக்களுக்கு தனித்துவமாக தெரிந்தது.
மக்கள் அதிகளவில் வந்து இனிப்புகளை வாங்கி சென்றனர். தற்போது 37 வயதாகும் ருச்சியேதா கூறுகையில், லவ் அண்ட் சீஸ்கேக்கை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வதில் மிகவும் சவாலான பகுதி என்றால், மக்களுக்கு தேவையான பொருட்கள் மற்றும் கேக்குகளை தயாரிப்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதாக இருந்தது.
ஏனெனில் அவர்கள் ஒரு முறை ருசித்து பார்த்தார்கள் என்றால் திரும்பி செல்ல முடியாது என்று தெரிவித்தார். இருவராக தொடங்கி நிறுவனம் இன்று 450 ஆர்வமுள்ள ஊழியர்கள் கொண்ட நிறுவனமாக விரிவடைந்துள்ளது.
மும்பை, டெல்லி, என்.சி.ஆர். மற்றும் புனே முழுவதும் தினமும் 10,000 சீஸ்கேக் துண்டுகள் விற்பனையாகிறது. இன்று தாய் நிறுவனமான ப்ரூவொர்க்ஸின் கீழ், பிராண்டுக்கு 25 முதல் 30 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. லைஃப் டைம் வருவாயாக ரூ.80 கோடி ஈட்டியுள்ளது.


Click it and Unblock the Notifications