ஹிந்தி தொலைக்காட்சி நடிகை ருஹானிகா தவான் வெறும் 15 வயதில் 4 கோடி ரூபாய் மதிப்பிலான இரண்டு அடுக்குமாடி வீடுகளை வாங்கி ஒட்டுமொத்த பாலிவுட் நடிகர், நடிகைகள் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
நடிகை ருஹானிகா தவான் மும்பையின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள ஆடம்பர குடியிருப்பான லோகந்த்வாலா வளாகத்தில் அருகிலுள்ள இரண்டு அப்பார்மென்ட் வீடுகளை வாங்கியுள்ளார் மற்றும் இரண்டு அடுக்குமாடிக் குடியிருப்புகளும் 10வது மாடியில் உள்ளன.
பெரு நகரங்களில் குறிப்பாக ப்ரீமியம் குடியிருப்புத் திட்டத்தில் உயரத்தில் இருக்கும் வீடுகளுக்கு விலை அதிகம்.
ருஹானிகா தவான்
ஹிந்தி தொலைக்காட்சி நடிகை ருஹானிகா தவான்-க்கு 15 வயது மட்டுமே ஆகும் நிலையில் இவர் மைனர் என்பதாலும் இந்க இரண்டு வீடுகளையும் அவருடைய தாய் டோலி சுமன்குமார் தவான் பெயரில் இந்த இரண்டு வீடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
2 அப்பார்ட்மென்ட்
நடிகை ருஹானிகா தவான் வாங்கிய ஒரு அப்பார்ட்மென்ட் விலை 2,74,50,000 என்றும் மற்றொன்று ரூ 1,25,50,000 என்றும் IndexTap நிறுவனம் வெளியிட்டுள்ள தரவுகள் படி தெரிகிறது. இந்த வீட்டுக்கு நடிகை ருஹானிகா தவான் ஒரு பிளாட்டுக்கு 13,72,500 ரூபாயும், மற்றொரு பிளாட்-க்கு 6,27,500 ரூபாய் அளவிலான முத்திரை கட்டணம் செலுத்தப்பட்டு உள்ளது.
லோகந்த்வாலா வளாகம்
லோகந்த்வாலா வளாகத்தில் அமைந்துள்ள வீடுகளில் ருஹானிகா தவான் வாங்கிய 2.74 கோடி ரூபாய் மதிப்புடைய அப்பார்மென்ட் 1030 சதுர அடியும், மற்றொரு வீடு 470 சதுர அடி எனத் தெரிகிறது. மும்பையில் முக்கியப் பகுதிகளில் அமைந்துள்ள பெரும்பாலான ஆடம்பர வீடுகளின் மதிப்பு தாறுமாறாக உள்ளது.
ஒரு சதுரடி 26,700 ரூபாய்
இதன் மூலம் ருஹானிகா தவான் வாங்கிய அப்பட்மென்ட்-ல் ஒரு சதுரடி 26,700 ரூபாயாகும். இந்த இரண்டு வீடுகளையும் ருஹானிகா தவான்-வின் தயார் பெயரில் 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 28 தேதி பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இன்ஸ்டா, யூடியூப்
சல்மான் கானின் Jai Ho, Ghayal Once Again போன்ற சில திரைப்படங்கள், பல தொலைக்காட்சி நாடகங்களில் நடித்துள்ள ருஹானிகா தவான் இன்ஸ்டாகிராமில் 1.9 மில்லியன் பாலோவர்களைக் கொண்டுள்ளார், மேலும் 80,000 க்கும் மேற்பட்ட சப்ஸ்கிரைபர்-களைத் தனது யூடியூப் சேனலில் வைத்துள்ளார்.
வெறும் 15 வயதில்
இதோடு அவர் தினமும் லைப்ஸ்டைல் வீடியோ, வ்லோக்கள் மற்றும் பிராண்ட் விளம்பரங்களை வெளியிடுவதாலும் கூடுதல் வருமானத்தைச் சம்பாதித்துத் தற்போது வெறும் 15 வயதில் 4 கோடி ரூபாய்க்கு 2 வீட்டை வாங்கியுள்ளார்.


Click it and Unblock the Notifications