இந்தியாவில் UPI சேவை அறிமுகத்திற்கு பின்பு டிஜிட்டல் பண பரிமாற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் வேளையில், மத்திய அரசின் ரூபே கார்டுகளை தற்போது பெரிய அளவில் ஊக்குவித்து வருகிறது. இதில் முக்கியமாக சமீபத்தில் யூபிஐ செயலிகளில் ருபே கிரெடிட் கார்டுகளை பயன்படுத்து பேமெண்ட் செய்யும் முறையை அறிமுகம் செய்தது பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் விசா, மாஸ்டர்கார்டு நிறுவனங்கள் பறந்து விரிந்து இருக்கும் வேளையில் ரூபே கார்டுகள் அறிமுகம் செய்யப்பட்டு, தற்போது இதை பெரிய அளவில் ஊக்கப்படுத்தப்பட்டு வருவது ஏன்.

ரூபே அட்டைகள் உருவாக்கம்: 2012 ஆம் ஆண்டில் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தேசிய பேமெண்ட் நிர்வாகக் கழகம் (NPCI) உடன் இணைந்து ரூபே கட்டமைப்பை உருவாக்கியது. இது வெளிநாட்டு சார்பு இல்லாத, இந்தியாவிற்குள் செயல்படும் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு நிதி பரிமாற்ற முறையாகும்.
வெளிநாட்டு விசா மற்றும் மாஸ்டர்கார்டு போன்ற சர்வதேச நிறுவனங்களைச் சார்ந்திருக்காமல், இந்தியாவிற்குள்ளேயே பாதுகாப்பான டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதே ரூபேவின் முக்கிய நோக்கமாகும்.
ரூபே தரவு மேலாண்மை: இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் தேசிய பேமெண்ட் நிர்வாகக் கழகம் ஆகியவை ரூபே தரவை பாதுகாப்பாகவும், மேம்பட்ட தொழில்நுட்ப உதவியுடனும் பாதுகாப்பாகவும் நிர்வகிக்கின்றன. தரவு மையங்கள் இந்தியாவிற்குள்ளேயே அமைக்கப்பட்டுள்ளன, இதனால் இந்திய மக்களின் நிதி சார்ந்த தரவுகள் வெளிநாடுகளுக்கு செல்ல வாய்ப்பு மொத்தமாக தடைபெற்றுள்ளது. தரவு பாதுகாப்பை உறுதி செய்ய உயர்ந்த பாதுகாப்பு நெறிமுறைகள் கடைபிடிக்கப்படுகின்றன.
மத்திய அரசு: ரூபேவின் நிர்வாகம் மற்றும் தரவு பாதுகாப்பில் இந்திய அரசு முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் மூலம் வெளிநாட்டு தலையீடு இல்லாமல், இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்தை வலுப்படுத்த அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது.
வெளிநாட்டு செலாவணி சேமிப்பு: இந்தியாவில் இருக்கும் வெளிநாட்டு விசா மற்றும் மாஸ்டர்கார்டு பரிவர்த்தனைகளுக்கு, அதிக அளவிலான கட்டணங்கள் டாலர் மதிப்பில் செலுத்த வேண்டியிருந்தது. ஆனால், ருபே அட்டைகள் உள்நாட்டு சேவை என்பதால், இத்தகைய கட்டணங்கள் இல்லாமல், இந்தியாவிற்குள்ளேயே பணம் புழங்குகிறது. இதனால், வெளிநாட்டு டாலர்கள் பயன்பாட்டை குறைத்து, இந்திய ரூபாயின் மதிப்பு உயர கணிசமாக உதவியது.
சுய தரவு பொருளாதாரம்: ருபே அட்டைகள் இந்திய நிறுவனங்களால் உருவாக்கப்பட்டு மேம்படுத்தப்படுகின்றன. இதனால், இந்தியாவிற்குள் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கின்றன. வெளிநாட்டு நிறுவனங்கள் மீதான சார்பு குறைந்து, சுய தரவு பொருளாதாரத்தை நோக்கி நாம் பயணிக்க உதவுகின்றன.
டேட்டா சென்டர் வர்த்தகம்: ரூபே கார்டு தரவுகள் இந்தியாவுக்குள் சேமிக்கப்படுவது போல் விசா, மாஸ்ட்ர்கார்டு போன்ற நிறுவனங்களும், இந்தியர்களின் தரவுகளை இந்தியாவில் மட்டுமே சேமிக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டையும் மத்திய அரசு கொண்டு வந்தது. இது பின்னாளில் அனைத்து நிறுவனங்களுக்கும் கட்டாயமாகியது, இதன் வாயிலாக இந்தியாவில் தற்போது டேட்டா சென்டர் வர்த்தகம் அதிகரித்துள்ளது.
மின்னணு பரிவர்த்தனை ஊக்குவிப்பு: பணமில்லா பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் இந்திய அரசின் முயற்சிக்கு ருபே அட்டைகள் உறுதுணையாக விளங்குகின்றன. கிராமப்புறங்கள் கூட டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மாறுவதற்கு, எளிதான மற்றும் பாதுகாப்பான வழியாக ரூபே அட்டைகள் வழிவகுக்கின்றன. இதனால், கள்ளநோட்டு பிரச்சனை குறைந்து, வெளிப்படைத்தன்மையும் அதிகரிக்கிறது.
கிராமப்புற சேர்க்கை: கிராமப்புற மக்கள் பலரும் வங்கிக் கணக்குகள் வைத்திருப்பதில் பிரச்சனை இருந்தாலும், ருபே க்ஷீட்ரகார்டு (RuPay Kshetra Card) போன்ற திட்டங்கள் அவர்களையும் டிஜிட்டல் பொருளாதாரத்தில் இணைக்கின்றன.
பாதுகாப்பான பரிவர்த்தனை: உச்சபட்ச பாதுகாப்பு அம்சங்களை ருபே அட்டைகள் கொண்டிருக்கின்றன. உள்நாட்டு சேவை என்பதால், தரவு வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை. இதனால், தரவு திருட்டு போன்ற சைபர் குற்றங்கள் குறைவதற்கு வாய்ப்புள்ளது.
More From GoodReturns

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!



Click it and Unblock the Notifications