இந்திய ரூபாய் அமெரிக்க டாலருக்கு எதிராக வெள்ளிக்கிழமை வரலாற்று சரிவை சந்தித்தது 92 என்ற அளவை தொட்டது, இதன் பின்பு சிறிய அளவில் மீண்டு 91.90 என்ற அளவில் நிலைபெற்றது. வெளிநாட்டு நிதி நிறுவனங்கள் தொடர்ந்து தனது முதலீடுகளை விற்பனை செய்யும் காரணத்தாலும், சர்வதேச சந்தைகளில் ஆபத்துகளை தவிர்க்கும் காரணத்தாலும் இந்திய சந்தையில் இருந்து முதலீடுகள் வெளியேறுகிறது.
இந்த வேகத்தில் ரூபாய் மதிப்பு சரிந்தால் 100 என்ற அளவை விரைவில் எட்டலாம் என்று கணிக்கப்படுகிறது. இது சாதாரண மக்களின் சேமிப்பு, முதலீடு மற்றும் வாழ்க்கை செலவுகளை பாதிக்கும் சூழலில், சாமானிய மக்கள் என்ன செய்ய வேண்டும்..?

ரூபாய் மதிப்பின் இந்த சரிவு உலக அளவிலான பொருளாதார அழுத்தங்களால் ஏற்பட்டது. இது தொடர்ந்தால், பணவீக்கம் அதிகரித்து சேமிப்புகளின் மதிப்பு குறையலாம். பல நாடுகளில் இதுபோன்ற சூழல்கள் ஏற்பட்ட போது, மக்கள் தங்கள் நிதியை பாதுகாக்க புதிய உத்திகளை பயன்படுத்தினர். எனவே, இப்போதே மக்கள் நிதி திட்டமிடலை மாற்றி அமைக்க வேண்டியது அவசியமாகியுள்ளது.
டாலரில் வருமானம் ஈட்டுவது எப்படி
டாலரில் வருமானம் ஈட்டுவது ரூபாய் சரிவுக்கு எதிரான சிறந்த பாதுகாப்பை தரும். வெளிநாட்டில் வேலை வாங்குவது என்பது உடனடியாக நடந்துவிடாது, ஆனால் இந்தியாவில் இருந்து வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வேலை செய்யும் வாய்ப்பு அதிகமாகவே உள்ளது. இது அனைத்து தரப்பு மக்களுக்கும் எளிய வழி.
டிஜிட்டல் உதவியாளராக பகுதி நேர வேலை செய்வது நல்ல வழி, குறிப்பாக இதை வார இறுதி நாட்களிலும் செய்யலாம், மேலும் இத்தகைய பணிக்கு ஒரு மணிநேரம் அடிப்படையில் ஊதியம் கிடைக்கும், டாலரில் கிடைக்கும். பலர் இதை பயன்படுத்தி கூடுதல் வருமானம் பெறுகின்றனர். குறிப்பாக இந்தியர்கள் மற்றும் பிலிப்பைன்ஸ் மக்கள் பலரும் இதை செய்கின்றனர்.
டாலரில் முதலீடு
உங்கள் வருமானத்தில் 50 சதவீதத்திற்கு மேல் டாலரில் முதலீடு அல்லது டாலர் அடிப்படையிலான சொத்துக்களில் செய்யுங்கள். இந்திய மக்கள் LRS என்படும் ஆர்பிஐ விதிகளின் மூலம் இதை எளிதாக செய்யலாம். இயலாதவர்கள் குறைந்தது 20 சதவீதத்தையாவது ரூபாய் மதிப்பின் மூலம் ஏற்படும் பாதிப்பை தவிர்க்க முதலீடு செய்யலாம்.
முக்கிய சொத்துக்களில் முதலீடு செய்யுங்கள்
உங்கள் நிகர மதிப்பு 50 லட்சத்திற்கு மேல் இருந்தால், hard assets-ல் முதலீடு செய்யுங்கள். அதாவது வீடு, நிலம், தங்கம் அல்லது பிட்காயின் போன்றவில் முதலீடு செய்யலாம். அதிக பணவீக்கம் ஏற்படும் போது இவை விலை உயரும். தங்கம் வாங்காவிட்டாலும், பிட்காயின் அல்லது ரியல் எஸ்டேட் போன்றவை பாதுகாப்பு அளிக்கும். இது உங்கள் போர்ட்ஃபோலியோவை வலுப்படுத்தும்.
கமிஷன்களை குறைக்குங்கள்
நீங்கள் முதலீடு செய்யும் சொத்துக்களுக்கு 1 சதவீத கமிஷன் செலுத்தினால் 40 ஆண்டுகளில் உங்கள் போர்ட்ஃபோலியோ மதிப்பு 33 சதவீதம் குறைக்கும். பலர் வெளிநாட்டு முதலீடுகளில் இரட்டை கமிஷன் செலுத்துகின்றனர். இதை பூஜ்ஜியமாக்க முடியாவிட்டாலும், குறைந்தபட்சமாக வைத்திருங்கள்.
முதலீட்டு உலகை புரிந்துக்கொண்டு, எளிய முறையில் முதலீடு செய்யுங்கள். 8 முதல் 10 மணி நேரம் பணம் சம்பாதிப்பதில் செலவிடுகிறீர்கள் என்றால், 30 நிமிடங்கள் அதை வளர்க்க கற்றுக்கொள்ளுங்கள். இது உங்கள் செல்வத்தை பெருக்கும்.
More From GoodReturns

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை



Click it and Unblock the Notifications