வியாழக்கிழமை வர்த்தகத்தில் ஆசிய நாடுகளின் நாணயங்களின் சரிவைத் தொடர்ந்து, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் பெரிய அளவில் சரிந்து புதிய வரலாற்று சரிவை பதிவு செய்துள்ளது.
அமெரிக்காவில் பத்திர முதலீட்டில் அதிகப்படியான லாபம் அளவுகளை எட்டியிருக்கும் காரணத்தால் டாலருக்கான டிமாண்ட் அதிகரித்து பிற நாணயங்கள் அனைத்தும் பெரும் சரிவை எட்டி வருகிறது. ரூபாய் மதிப்பு இன்று 83.21 ரூபாய் வரையில் சரிந்தாலும் ரிசர்வ் வங்கியின் தலையீடுகள் ரூபாய் மதிப்பின் சரிவை பெரிய அளவில் கட்டுப்படுத்துவதாக தெரிவித்துள்ளது.

இந்திய ரூபாய் மதிப்பு இன்று காலை வர்த்தகத்தில் 83.14 இல் துவங்கியது மற்றும் இன்ட்ராடேயில் 83.11 என்ற குறைந்தபட்சத்தைத் தொட்டு, அக்டோபர் 2022 இல் பதிவான 83.29 என்ற மிகக் குறைந்த அளவீட்டை எட்டியது.
இன்றைய வர்த்தக முடிவில் ரூபாய் மதிப்பு 0.09 சதவீதம் குறைந்து ஒரு டாலருக்கு 83.21 ஆக வரலற்று சரிவை பதிவு செய்து முடிந்துள்ளது. இது நேற்றைய வர்த்தக முடிவான 83.14 ரூபாய் அளவிட குறைவானது என்பது குறிப்பிடத்தக்கது.
சந்தை முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றமளிக்கும் ஐரோப்பிய பொருளாதார தரவு டாலருக்கு கூடுதல் வலிமையை சேர்க்கிறது. அமெரிக்க கருவூல வருவாயின் அதிகரிப்பு மற்றும் உலகப் பொருளாதார வளர்ச்சி குறித்த கவலைகளும் இன்று இந்திய ரூபாயை பாதித்துள்ளது.
இன்று அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு 83.21 என்ற வரலாற்று சரிவை தொட்ட நிலையில், பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு 308.17 ரூபாய் என்ற மோசமான நிலையை அடைந்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டுமே 283.58 ரூபாயில் இருந்து 308.17 ரூபாயாக சரிந்துள்ளது. இதுவே ஒரு வருடத்திற்கு முன்பு 223 ரூபாயாக இருந்தது.


Click it and Unblock the Notifications