அமெரிக்கா டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பான தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருவது அனைவரும் அறிந்த ஒரு விஷயம் தான்.
ஆனால் அதற்கு காரணம் என்ன தெரியுமா? இதே அதை பற்றித் தான் படிக்கப்போகிறோம் வாருங்கள்.
நேற்று சந்தை முடிவில் ரூபாயின் மதிப்பானது 74.25 ரூபாயாக முடியவடைந்திருந்தாலும், இன்று காலையில் தொடக்கத்திலேயே முதலீட்டாளர்களுக்கு நல்லதொரு விஷயத்தினை சொல்லும் விதமாக 73.99 ரூபாயாக தொடங்கியது.

இதற்கு முக்கிய காரணம் அமெரிக்காவின் எண்ணெய் விலையானது 2003ம் ஆண்டிலிருந்தனை விட சரிந்தது தான். ஏனெனில் தொடர்ந்து கச்சா எண்ணெய் சப்ளை தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருகிறது. அதே வேளையில் தொடர்ந்து தேவையும் வீழ்ச்சி கண்டு வருவது என்பது தான்.
இதையடுத்து சரிந்து வரும் இந்திய ரூபாயினை கட்டுப்படுத்த, அன்னிய செலவாணியை கட்டுப்படுத்தவும், 2 பில்லியன் டாலர் ஆதரிப்புக்காக வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் 10 வருட பத்திர லாபம் சற்று அதிகரித்து 6.28% ஆக இருந்தது அதிகரித்துள்ளது.
இதனால் காட்டுமிராண்டி தனமான வீழ்ச்சியில் இருந்து விலகி, இந்திய பங்கு சந்தைகள் இன்று காலை தொடக்கத்தில் சற்று நிதனாமாக வர்த்தகமாகியது. ஆனால் பின்னர் மீண்டும் கொரோனா தாக்கம் எண்ணிக்கை கூடிக் கொண்டே போகவே மீண்டும் வீழ்ச்சி காண ஆரம்பித்தது.
இது மும்பை பங்கு சந்தையான சென்செக்ஸ் 3 வருடத்தில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி கண்டு 1709.58 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 28,869 ஆக முடிவடைந்தது. இதே தேசிய பங்கு சந்தை நிஃப்டி 498 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 8,468 ஆக முடிவடைந்தது. இதற்கு மத்தியில் ரூபாயின் மதிப்பு வழக்கம் போல் 74.26 ஆக வீழ்ச்சி கண்டு முடிவடைந்துள்ளது.
மேலும் சில தினங்களுக்கு முன்பு பத்திரிக்கையாளார் சந்திப்பில் பேசிய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்த தாஸ், பொருளாதாரம் வீழ்ச்சி கண்டு வரும் நிலையில், நிலைமை கைமீறி போகும் நிலையில், தேவையான நடவடிக்கையை கட்டாயம் ஆர்பிஐ எடுக்கும் என்றும் கூறியிருந்தார்.
இதையடுத்து முக்கியமாக நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தாக்கம் நிச்சயம் மேலும் அதிகரிக்கலாம் என்ற நிலை தான் நிலவி வருகிறது. ஏனெனில் என்ன தான் அரசு தகுந்த நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், சில நிபுணர்கள் கொரோனாவின் தாக்கம் இனி அதிகமாக அதிகரிக்கும் என்றும் கூறி வருகின்றனர். இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளே முடங்கும் நிலைக்கு கொண்டு வரலாம். இதனால் நிச்சயம் நுகர்வு மேலும் குறையலாம். சப்ளை செயின் ளும் பாதிக்கப்படலாம். ஆக இது நிச்சயம் பொருளாதார வீழ்ச்சிக்கு வழி வகுக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications