உலகில் எந்த நாட்டில் இருந்தாலும், இந்தியர்களுக்கு இருக்கும் ஒரு பழக்கம் சொந்த நாட்டிற்கு பணம் அனுப்பி முதலீடு செய்வது தான். இது காலம் காலமாக இருந்து வரும் வழக்கம் என்பதால் இன்றும் தொடர்கிறது. நம்ம ஊரு மக்கள் துபாயில் கட்டிட பணி செய்தாலும் சரி, சுவிஸ் நாட்டில் வங்கியில் பணியாற்றினாலும் சரி, அமெரிக்காவில் டெக் துறையை புரட்டிப்போட்டாலும் சரி ரெமிட்டன்ஸ் என்பது ரத்தத்தில் ஊறிய ஒரு விஷயம்.
வெகு சிலர் மட்டுமே வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறார், இப்படி இருப்பவர்களில் பெரும்பாலும் சிறிய அளவிலான பணத்தையாவது இந்தியாவுக்கு அனுப்புகிறார்கள். இப்படியிருக்கையில் ரூபாய் மதிப்பு வரலாற்று சரிவில் இருக்கும் போது வெளிநாட்டில் இருக்கும் என்ஆர்ஐ-கள் இந்தியாவுக்கு பணம் அனுப்பினால் கூடுதல் தொகை கிடைக்கும்.

ஆனால் இப்போது இந்தியாவுக்கு பணம் அனுப்பினால் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பது குறித்து ஒரு புரிதல் தேவை, அதேபோல் என்ஆர்ஐ-கள் கையில் இருக்கும் பணத்தை மொத்தமாக இப்போதே அனுப்பிவிடலாமா இல்லை பகுதி பகுதியாக அனுப்பலாமா என்ற கேள்வியும் உள்ளது. இவை அனைத்திற்குமான பதில் இப்போது பார்ப்போம்.
டிசம்பர் 3, 2025 அன்று இந்திய ரூபாய் முதன்முறையாக ஒரு அமெரிக்க டாலருக்கு 90 ரூபாயைத் தாண்டியது. டிசம்பர் 9 அன்று மேலும் 10 காசுகள் சரிந்து 90.15 ஆனது. மே மாதத்தில் 84க்கும் கீழே இருந்த ரூபாய் மதிப்பு வெறும் 6 மாதங்களில் 7 சதவீதத்திற்கு மேல் சரிந்துள்ளது. இந்த சரிவால் வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் டாலரை மாற்றும்போது அதிக ரூபாய் பெறுகின்றனர். இதனால் பலர் இப்போது பணத்தை இந்தியாவுக்கு அனுப்பலாமா, முதலீடு செய்யலாமா என்று யோசிக்கின்றனர்.
இப்போது மாற்றினால் லாபமா, நஷ்டமா?
கையில் இருக்கும் டாலர், திராஹாம் போன்ற நாணயத்தை மொத்தமாக இப்போதே ரூபாயாக மாற்றுவது சரியாக இருக்குமா? என்பதை ஒரு உதாரணத்தோடு பார்க்கலாம்.
Bank of America கணிப்பின்படி ரூபாய் வலுவடைந்து 2026 இறுதியில் 86 ஆக முடியும் என தெரிவித்துள்ளது. இன்று 89.93 ரூபாயாக உள்ளது. இதேபோல் அடுத்த ஆண்டுக்குள் இந்தியா - அமெரிக்கா மத்தியிலான வர்த்தகம் மேம்படவில்லை எனில் ரூபாய் மதிப்பு 95 வரையில் சரியும் எனவும் கணிக்கப்பட்டு உள்ளது.
இப்படி மாறுப்பட்ட சூழ்நிலையில் என்ஆர்ஐ மக்கள் மொத்தமாக பணத்தை மாற்றிவிடாமல் பகுதி பகுதியாக ரூபாய் மதிப்பு சரியும் போது மாற்றி இந்தியாவில் முதலீடு செய்யலாம்.
உதாணமாக 100 டாலர் பணத்தை இப்போது மாற்றினால் உங்களுக்கு 9000 ரூபாய் கிடைக்கும் (எக்ஸ்சேஞ்ச் கமிஷன் இல்லாமல்). இதை வைப்பு நிதியில் 6 சதவீத வட்டியில் ஒரு வருட காலத்திற்கு முதலீடு செய்தால் அடுத்த ஆண்டு உங்கள் கையில் 9540 ரூபாய் இருக்கும்.
இதேபோல் அடுத்த ஆண்டு வரையில் காத்திருந்து 95 ரூபாய் வரையில் சரியும் போது மாற்றினால் 9500 ரூபாய் கிடைக்கும், அப்படி பார்த்தாலும் வைப்பு நிதி மூலம் கிடைக்கும் வருமானத்தை விட 40 ரூபாய் குறைவு தான். இதனால் இப்போது மாற்றிவது பலருக்கும் லாபமாக அமையும்.

ரூபாய் ஏன் இப்படி சரிகிறது?
இந்த ஆண்டு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் (FPI) பங்குச்சந்தையில் இருந்து சுமார் 17 பில்லியன் டாலர் ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.1.4 லட்சம் கோடி அளவிலான முதலீட்டை வெளியேற்றியுள்ளனர். இதனால் டாலர் இருப்பு இந்தியாவில் தொடர்ந்து குறைந்து வருகிறது.
டிரம்ப்-ன் வரி விதிப்பால் அமெரிக்காவுக்கு செல்லும் இந்திய ஏற்றுமதி குறைந்து, இந்தியாவில் இறக்குமதி அதிகரித்து வர்த்தகப் பற்றாக்குறை விரிவடைந்துள்ளது. ஏற்றுமதி உயராமல் இறக்குமதி அதிகரித்தால் டாலர் தேவை அதிகரிக்கும். இதனால் அதிக தொகை கொடுத்து டாலரை வாங்க வேண்டிய கட்டாயம் உருவாகும்.
அமெரிக்கா-இந்தியா மத்தியிலான வர்த்தக ஒப்பந்தத்தில் தொடர்ந்து நிச்சயமற்ற தன்மையும் நிலவும் காரணத்தால் டாலர் தேவை தொடர்ந்து உயர்வும் ரூபாயை மதிப்பை பாதித்து வருகின்றது. இவை எல்லாம் சேர்ந்து தான் ரூபாய் மதிப்பை மோசமாக்கியுள்ளது.
என்ஆர்ஐகள் இப்போது பணம் அனுப்பினால் அதிக ரூபாய் கிடைக்கும் என்பது உறுதி. ஆனால் எல்லா பணத்தையும் ஒரே நேரத்தில் மாற்றுவதற்குப் பதிலாக, படிப்படியாக ரூபாய் மதிப்பு சரியும் போது மாற்றி வைப்பு நிதி, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை போன்றவற்றில் முதலீடு செய்வது கூடுதல் லாபத்தை அளிக்கும், அதேபோல் பாதுகாப்பையும் வழங்கும்.
ஆனால் இந்தியாவை பொறுத்தவரையில் என்ஆர்ஐ-களின் முக்கிய முதலீடாக இருப்பது ரியல் எஸ்டேட் தான், ரூபாய் மதிப்பு சரிவால் இந்தியாவில் அதிக மதிப்புடைய சொத்துக்கள் அதிகம் விற்கப்படலாம்.
More From GoodReturns

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

மதுரை மக்களே தங்க நகை வாங்க இன்று தான் சிறந்த நாள்!! 5ஆவது நாளாக குறைந்த விலை!!

EPF முதல் SSY வரை: உங்கள் பணத்திற்கு அதிக லாபம் தரும் சிறந்த முதலீடு எது?

பெண்களே உங்களோட மியூச்சுவல் ஃபண்டு முதலீடு எப்படி இருக்க வேண்டும்? நிபுணர்கள் வழங்கும் டிப்ஸ்

தங்கம் விலையில் நடந்த மேஜிக்!! 2026இல் இதுவே முதல்முறை!! இனி எதிர்பாராததை எதிர்பாருங்கள்!!

தங்கம் விலையில் திடீர் மாற்றம்.. மத்திய கிழக்கு போர் பதற்றம் செய்யும் அட்டகாசம்..!!

இதுக்கு பேர் தான் Old is Gold-ஆ.. காலம் மாறினாலும், ஃபார்மூலா மாறாது..!!

உங்கள் எதிர்காலம் உங்கள் கையில்! பெண்களுக்கான சிறந்த முதலீட்டு திட்டங்கள் இதோ!

10 ஆண்டுகளில் செல்வத்தை உயர்த்துவது எது? PPF-ன் நிலையான வட்டியா அல்லது SIP-ன் சந்தை லாபமா?

EPF, NPS அல்லது PPF: நிம்மதியான ஓய்வுக் காலத்துக்கு நம்பர் 1 சாய்ஸ் எது?

3 நாட்கள் சரிவில் இருந்து மீண்டு வந்த இந்திய பங்குச்சந்தை; சென்செக்ஸில் புதிய இண்டெக்ஸ் அறிமுகம்!!



Click it and Unblock the Notifications