டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு இன்று வரலாற்று குறைந்தபட்ச அளவான 88.4850 நிலையைத் தொட்டுள்ளது. இது முந்தைய குறைந்தபட்சமான 88.4550-ஐ விட குறைந்து புதிய சரிவை பதிவு செய்து இந்திய மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.
இந்த வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக இருப்பது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அரசின் H-1B விசா மீதான கட்டணமாக 1 லட்சம் டாலரை அறிவித்தது தான். இந்த ஹெச்1பி விசா-வை இந்திய தொழில்நுட்பத் துறையை அதிகம் சார்ந்துள்ளது, இதனால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையில் மெல்ல மெல்ல தங்களுடைய முதலீட்டை குறைத்து ஹெட்ஜிங் செயல்பாடுகள் அதிகரித்து வருகின்றனர்.

இந்த சரிவு ரிசர்வ் வங்கியால் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. RBI தலையீடு இல்லாமல் இருந்திருந்தால் வீழ்ச்சி இன்னும் கடுமையாக இருந்திருக்கும் என்று வர்த்தகர்கள் கூறுகின்றனர். இந்த சம்பவம் இந்திய பொருளாதாரத்தை பாதிக்கும் அளவுக்கு உருவெடுத்துள்ளது, இந்திய பொருளாதாரத்திலும், வேலைவாய்ப்பு சந்தையிலும் ஐடி துறை முக்கிய பங்கீடு வகிக்கும் நிலையில் டிரம்ப்-ன் அறிவிப்பு இந்திய பங்குச்சந்தை மற்றும் ரூபாய் மதிப்பை பாதித்துள்ளது.
H-1B விசா கட்டண உயர்வின் பின்னணி
அமெரிக்காவின் H-1B விசா திட்டம் என்பது, உலகம் முழுவதும் இருக்கும் திறமையான வெளிநாட்டு தொழிலாளர்களை ஈர்க்கும் முக்கியமான கருவியாகும். இந்த விசா தான் அமெரிக்க டெக் துறையின் வளர்ச்சிக்கு மிக முக்கியமான காரணமாக இருந்தது.
இப்படியிருக்கையில் கடந்த ஆண்டு யார் அதிகம் ஹெச்1பி விசாக்களை பெற்றுள்ளனர் என்று பார்த்தால் இந்தியர்களின் பங்கு சுமார் 71 சதவீதமாக உள்ளது, இந்தியாவை தொடர்ந்து சீனா 11 சதவீத பங்கீட்டை வகிக்கிறது. இதனால் அமெரிக்கர்கள் வேலைவாய்ப்புகளை இழப்பதாக டிரம்ப் அரசு தீவிரமாக நம்புகிறது, இதன் எதிரொலியாகவே ஹெச்1பி விசா மீது 1 லட்சம் டாலர் கட்டணம் விதிக்கப்பட்டு உள்ளது.
செப்டம்பர் 21, 2025 அன்று அமலுக்கு வந்த டிரம்பின் உத்தரவு, புதிய விண்ணப்பங்களுக்கு 1 லட்சம் டாலர் (தோராயமாக ரூ.88 லட்சம்) கட்டணம் விதித்துள்ளது, இது தற்போதைய கட்டணங்களை விட 60 மடங்கு அதிகம். இந்திய வெளியுறவு அமைச்சகம் இதை கடுமையாத விமர்சித்துள்ளது.
வெளிநாட்டு முதலீடுகள் வெளியேற்றம்
ரூபாயின் இந்த வீழ்ச்சிக்கு வெளிநாட்டு பங்கு முதலீடுகளின் வெளியேற்றமும் முக்கியமான காரணம். செப்டம்பர் 2025 முதல், H-1B உத்தரவு அறிவிக்கப்பட்டதும், அமெரிக்க முதலீட்டாளர்கள் இந்திய சந்தையில் முதலீட்டை குறைத்துள்ளனர், ஏனெனில் இந்திய ஐடி துறையின் வளர்ச்சி பாதிக்கப்படலாம் என்பதால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இத்தகைய முடிவை எடுத்துள்ளனர்.
இந்திய ஐடி துறை
இந்தியாவின் 283 பில்லியன் டாலர் மதிப்புடைய ஐடி சேவை துறை, அமெரிக்காவில் தற்போது 13,396 H-1B விசாக்களை சார்ந்துள்ளது. இதனால் இந்த கட்டண உயர்வு ஐடி நிறுவனங்களின் வளர்ச்சியை கட்டாயம் பாதிக்கும் நிலை தான் தற்போது உள்ளது.
More From GoodReturns

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

Gold loan: ஆர்பிஐ கொண்டு வந்துள்ள ”7 நாட்கள்” விதி!! தங்க நகை கடன் வாங்குவோருக்கு மேஜர் அப்டேட்!!

வீட்டு கடன், வாகன கடன் வட்டி குறையுமா? மும்பையில் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தீவிர ஆலோசனை..!!

போர் பதற்றத்திலும் தங்கம் வீழ்வது ஏன்? டாலரின் ஆதிக்கம் மீண்டும் தொடங்குமா? உங்கள் முதலீடு எங்கே?

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!



Click it and Unblock the Notifications