அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்புப் புதன்கிழமை யாரும் எதிர்பார்க்காத வகையில் 83 ரூபாய்க்கு மேல் சரிந்தது.
சர்வதேச சந்தையில் இருக்கும் டாலர் அமெரிக்கப் பத்திர சந்தையில் தொடர்ந்து குவிந்து வருவதாலும், பிரிட்டன் நாட்டின் பணவீக்கத்தைக் குறைக்க அதன் பென்ச்மார்க் வட்டி விகிதத்தை 1 சதவீதம் வரையில் உயர்த்த திட்டமிட்டு உள்ளது.
இதனால் டாலர் ஆதிக்கம் அதிகரித்து ரூபாய் மதிப்பு வரலாற்று சரிவை பதிவு செய்துள்ளது.
ரூபாய் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு நேற்றைய வர்த்தக முடிவு அளவான 82.36 என்ற நிலையில் இருந்து 0.8 சதவீதம் சரிந்து 66 பைசா சரிந்துள்ளது. இதன் மூலம் டாலர் ஆதிக்கத்தால் ரூபாய் மதிப்பு 83.02 ரூபாய் என்ற வரலாற்று சரிவை பதிவு செய்துள்ளது.
ஆர்பிஐ
ஆர்பிஐ எடுத்த பல்வேறு நடவடிக்கைகள் மூலம் கடந்த சில நாட்களாக அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு தொடர்ந்து 82.40 ரூபாய் அளவிலேயே உள்ளது. ஆனால் சர்வதேச சந்தையில் ஏற்பட்டு வரும் மாற்றமும், தடுமாற்றமும் ரூபாய் மதிப்பை மீண்டும் சரிவு பாதைக்குச் சென்றுள்ளது.
கணிப்பு
இது தொடர்ந்தால் அடுத்தச் சில நாட்களில் டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு 83.20 ரூபாயை இந்த வார இறுதிக்குள் எட்டிவிட வாய்ப்பு அதிகமாக உள்ளது எனச் சந்தை வல்லுனர்கள் கூறி வருகின்றனர். உலக நாடுகள் தொடர்ந்து வட்டியை அதிகரித்து வருவதால் பத்திர முதலீட்டின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
10 வருட அரசு பத்திர லாபம்
இதன் மூலம் பென்ச்மார்க் இந்திய 10 வருட அரசு பத்திரத்தின் லாப அளவு 7.4510 சதவீத லாபத்தை அளித்து வருகிறது. செவ்வாய்க்கிழமை காலை வர்த்தகத்தில் இதன் அளவு 7.3886 சதவீதம் வரையில் சரிந்த நிலையில் வர்த்தக முடிவில் 7.42 சதவீதமாக உயர்ந்தது.
பிரிட்டன் பொருளாதாரம்
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பின் சரிவைக் கட்டுப்படுத்த ஆர்பிஐ மீண்டும் நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. பிரிட்டன் பொருளாதாரம் மிகவும் மோசமாக இருக்கும் வேளையில் எப்போது வேண்டுமானாலும் முக்கியமான மற்றும் அதிரடியான நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளது.
முதலீட்டுச் சந்தை
இது கட்டாயம் முதலீட்டுச் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதில் பாதிக்கப்பட்டால் இந்திய சந்தையில் இருந்து கூடுதலான முதலீடுகளை வெளியேற்ற வாய்ப்பு உள்ளதால், ரூபாய் மதிப்புக் கூடுதலாகச் சரிய வாய்ப்பு உள்ளது.


Click it and Unblock the Notifications