திங்கட்கிழமை வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 83 ரூபாய்க்குக் கீழ் சரிந்துள்ளது. அக்டோபர் 2022 க்குப் பிறகு முதல் முறையாக இந்திய ரூபாய் மதிப்பு மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது. இந்த நிலையை சமாளிக்க இந்திய ரிசர்வ் வங்கி கட்டாயம் தலையிட வேண்டிய நிலை உருவாக்கியுள்ளது.
கடந்த வாரம் இந்திய ரிசர்வ் வங்கி நடத்திய இருமாத நாணய கொள்கை கூட்டத்தில் இந்திய பொருளாதாரம் மற்றம் நிதிநிலைமை குறித்து மிகவும் சாதகமான கணிப்புகளை ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் வெளியிட்ட நிலையில், தற்போது ரூபாய் மதிப்பு 83 ரூபாய் வரையில் சரிந்துள்ளது பெரும் அதிர்ச்சி கொடுக்கிறது.

இந்தியா எற்கனவே பல இறக்குமதிக்கு உள்நாட்டு நாணயம் மற்றும் டாலர் அல்லாத பிற நாட்டு நாணயம் ஆகியவற்றை பயன்படுத்தி வரும் வேளையில், அமெரிக்க டாலருக்கான தேவை கணிசமாக குறைக்கப்பட்டு உள்ளது. கிட்டதட்ட இதே போன்ற நடவடிக்கையை பிரிக்ஸ் நாடுகளும், பல தென்கிழக்கு நாடுகளுக்கும் எடுத்துள்ளது.

இத்தகைய சூழ்நிலையிலும் வெள்ளிக்கிழமை காலை 09:32 மணியளவில் டாலருக்கு நிகரான ரூபாய் 82.9650 ஆக இருந்தது, வெள்ளியன்று 82.8450 ஆக இருந்தது. இதை தொடர்ந்து இன்று 83 ரூபாய் என்ற நிலையை அடைந்துள்ளது. இதற்கு முன்பு அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 83.0725 ஆக குறைந்தது குறிப்பிடத்தக்கது.

இன்று இந்திய ரூபாய் மட்டும் அல்லாமல் ஆசிய சந்தையில் இருக்கும் பிற நாடுகளின் நாணயமும் பெரிய அளவிலான சரிவை எட்டியுள்ளது. உதாரணமாக மலேசியா ரிங்கெட் 0.6 சதவீதமும், இந்தோனேஷியா ரூபாயா 0.8 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.
ஆசியாவில் பெரும்பாலான நாடுகளின் நாணயங்கள் வீழ்ச்சி மூலம் மீண்டும் நாணய மதிப்பை சரி செய்ய அனைத்து நாடுகளும் டாலர் பேமெண்ட்-ஐ பெற தயாராகும். தற்போது ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியை சரி செய்ய ஆர்பிஐ தனது டாலர் இருப்பை வெளியிடும், இதன் மூலம் விரைவில் அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு 82.60 ரூபாய்க்கு வரலாம்.


Click it and Unblock the Notifications