மும்பை: அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது 20 பைசா குறைந்து, 75.01 ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது. இது கடைசியாக ஜூலை 17 அன்றும் காணப்பட்டது. ஆக இவ்வாறு இரண்டு வாரத்தில் இல்லாத அளவுக்கு மீண்டும் ரூபாயின் மதிப்பானது வீழ்ச்சி கண்டுள்ளது.
முந்தைய நாள் வர்த்தகத்தில் 74.82 ரூபாயாக முடிவடைந்துள்ள நிலையில், இன்று ரூபாயின் மதிப்பானது 74.90 ரூபாயாக தொடங்கியது. அதிகபட்சமாக 74.88 ரூபாயாக அதிகரித்தும், குறைவாக 75.03 ரூபாயாக சரிந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு முதல் இன்று வரை ரூபாயின் மதிப்பானது 4.84% வீழ்ச்சி கண்டுள்ளது.

ஆறு நாணயங்களுக்கு எதிரான கணக்கிடும் டாலரின் மதிப்பானது 0.15% அதிகரித்து, 93.49 ஆக அதிகரித்துள்ளது.
இந்திய ரூபாயின் சரிவுக்கு மத்தியில் மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 1.77% வீழ்ச்சி கண்டுள்ளது. இது 667.29 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 36,939.60 ஆகவும், இதே நிஃப்டி 173.60 புள்ளிகள் குறைந்து, 10,899.85 ஆகவும் சரிந்து காணப்படுகிறது. இது டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி காண வழி வகுத்துள்ளது.
வெளி நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் 2020ம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து முறையே 1.17 பில்லியன் டாலர் மற்றும் 14.61 பில்லியன் டாலர் பங்கு மற்றும் கடன் சந்தைகளில் விற்றுள்ளனர். அதே நேரத்தில் உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் 78,901.24 கோடி ரூபாயினை பங்கு சந்தைகளில் முதலீடு செய்துள்ளனர் என்று பங்கு சந்தை பரிவர்த்தனை தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரெண்ட் கச்சா எண்ணெய் எதிர்காலமானதுக் பேரலுக்கு 0.69% குறைந்து 43.22 டாலராக குறைந்துள்ளது. அதிகளவு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். மேலும் உலகளாவிய விலை வீழ்ச்சி இறக்குமதிக்கான தொகையை கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவுகிறது.
நாட்டில் கொரோவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இதனால் பொருளாதாரம் என்னவாகுமோ என்ற பய உணர்வும் இருந்து வருகிறது. இதன் காரணமாக முதலீட்டாளார்கள் தங்களது முதலீடுகளை வெளியே எடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் இன்னும் எவ்வளவு தான் ரூபாயின் மதிப்பு சரியுமோ தெரியவில்லை. எனினும் ரூபாயின் மதிப்பானது நீண்டகாலமாக இதே இடத்தில் இருந்து வருகிறது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications