அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 76 ரூபாய்க்கும் மேலாக வீழ்ச்சி கண்டுள்ளது.
இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் இது வரலாறு காணாத அளவு வீழ்ச்சியாகும். முந்தைய நாள் முடிவு விலையான 75.19ல் இருந்து 76.14 வரையில் வீழ்ச்சி கண்டுள்ளது
மேலும் இன்றைய வர்த்தக தொடக்கத்தில் 75.69 ரூபாயாக தொடங்கிய நிலையில், இந்த அளவுக்கு வீழ்ச்சி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
டாலரின் வலிமை
சரி என்றும் இல்லாதளவுக்கு இவ்வளவு வீழ்ச்சி கண்டுள்ளதே என்ன காரணம். ஏன் இந்த படு வீழ்ச்சி. வாருங்கள் பார்க்கலாம். இதற்கு முக்கிய காரணமாக கருதப்படுவதே அமெரிக்கா டாலரின் வலிமை தான் என்று கூறப்படுகிறது. மேலும் இந்திய பொருளாதாரத்தினை மேலும் பின்னோக்கி கொண்டு செல்லும் அளவு கொரோனா வைரஸின் தாக்கமும் அதிகரித்து வருகிறது.
கொரோனா பாதிப்பு
கொரோனாவின் தாக்கம் உலகம் முழுக்க மிக வேகமாக பரவி வருகிறது என்றே கூறலாம். இன்னும் குறிப்பாக சொல்லவேண்டுமானால் சர்வதேச அளவில் 3,38,724 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 14,686 பேர் பலியாகியுள்ளனர். அதிலும் இந்தியாவில் குறிப்பாக 390 பேர் தாக்கம் அடைந்துள்ள நிலையில் 7 பேர் பலியாகியுள்ளனர்.
பங்கு சந்தைகள் வீழ்ச்சி
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவின் தாக்கத்தினால் பங்கு சந்தைகளில் முதலீடுகள் குறைந்துள்ள நிலையில், அன்னிய முதலீடுகள் வெளியேறி வருவதால் சந்தைகள் மேலும் வீழ்ச்சி கண்டு வருகிறது. இதனால் மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 2,873 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு (9.61%) 27,042 ஆக வர்த்தகமாகி வருகிறது. இதே தேசிய பங்கு சந்தை நிஃப்டி 822 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு (9.42%) 7922 ஆகவும் வர்த்தகமாகி வருகிறது.
முடங்கிய வர்த்தகம்
சென்செக்ஸ் இது இரண்டாவது முறையாக லோவர் சர்கியூட் ஆகியுள்ள நிலையில், இது முதலீட்டாளர்கள் மத்தியில் இது இன்னும் மோசமான எண்ணங்களையே உருவாக்கி வருகிறது. இது உள்நாட்டு முதலீடுகளையே குறைத்து வரும் நிலையில், சந்தை மேலும் வீழ்ச்சிக்கு மேலும் வழிவகுத்துள்ளது. இந்த நிலையில் இந்திய ரூபாய் 77 என்ற நிலையை தொட வாய்ப்புள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!



Click it and Unblock the Notifications