அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது 27 பைசா சரிந்து, 78.40 ரூபாயாக வாரலாறு காணாத அளவு சரிவினைக் கண்டுள்ளது.
இது ஆசிய நாணயங்களுக்கு எதிராகவும் தொடர்ந்து சரிவினைக் கண்டு வருகின்றது.
கடந்த அமர்வில் ரூபாயின் மதிப்பானது 78.13 ரூபாய் என்ற லெவலில் காணப்பட்டது.
சந்தை சரிவு
வளர்ந்து வரும் சந்தைகளில் சமீபத்திய வாரங்களாகவே பங்கு சந்தைகளானது சரிவினைக் கண்டு வருகின்றது. இதற்கிடையில் அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் தலைவர் ஜெரோம் பவலின் முக்கிய அறிக்கைக்கு மத்தியில், இன்றும் பங்கு சந்தையானது சரிவினைக் கண்டு வருகின்றது. மேலும் அமெரிக்க மத்திய வங்கியானது மீண்டும் வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
டாலர் ஏற்றம்
மேலும் அமெரிக்க மத்திய வங்கி தனது உறுதிபாட்டில் உறுதியாக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. இது வளர்ந்து வரும் சந்தை நாணயங்களுக்கு எதிராக டாலர் இருக்க உதவியது. ஆக இதுவும் ரூபாயின் மதிப்பில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.
இதுவும் ஒரு காரணம்
தொடர்ந்து வட்டி விகிதம் அதிகரிக்கலாம் என்ற அச்சத்தின் மத்தியில் அன்னிய முதலீடுகளானது வெளியேறி வருகின்றது. இதனால் சந்தையில் தொடர்ந்து முதலீடுகள் வெளியேறி வருகின்றன. குறிப்பாக அன்னிய முதலீடுகள் அதிகளவில் வெளியேறி வருகின்றன. இதுவும் சந்தையின் சரிவுக்கு முக்கிய காரணியாக அமைந்துள்ளது. இது ரூபாயின் மதிப்பில் சரிவினைக் காண ஒரு காரணமாகவும் அமைந்துள்ளது.
கச்சா எண்ணெய் விலை
தொடர்ந்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையானது மேலாகவே இருந்து வருகின்றது. இது இந்தியா போன்ற இறக்குமதி நாடுகளில் அதிக தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இது பணவீக்கத்தினை தூண்டலாம். வர்த்தக பற்றாக்குறையை அதிகரிக்கலாம். இதுவும் ரூபாயின் மதிப்பு சரிவுக்கு காரணமாக அமைந்துள்ளது.
இன்னும் சரிவினைக் காணலாம்
மொத்தத்தில் இனி வரவிருக்கும் நாட்களிலும் ரூபாயின் மதிப்பானது அதிக ஏற்ற இறக்கத்தினை காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அடுத்ததாக 78.45 ரூபாய் வரையில் சரிவினைக் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே டாலரின் மதிப்பானது 0.32% அதிகரித்து 104.76 என்ற லெவலில் அதிகரித்து காணப்படுகின்றது.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications