அமெரிக்காவின் மே மாத பணவீக்கம் 40 வருட சரிவுக்குச் சென்ற பின்னர் ஒட்டுமொத்த முதலீட்டு சந்தையும் தலைகீழாக மாறியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
இந்த நிலையில் அமெரிக்க டாலர் மதிப்பு வலிமை பெற்று, இந்திய சந்தையில் இருந்து வெளியேறும் முதலீடுகள், உலகளவில் அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலை ஆகியவற்றுக்கு மத்தியில் சனிக்கிழமை டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்து உள்ளது.
டாலர் இன்டெக்ஸ்
அமெரிக்கச் சந்தையின் வர்த்தக முடிவில் டாலர் இன்டெக்ஸ் (DXY) இதற்கு முன்பு 102.5 புள்ளிகள் மட்டுமே அதிகப்படியாகச் சரிந்திருந்த நிலையில் வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் 104.19 ஆக உயர்ந்தது. இதன் தாக்கம் பெரிய அளவில் இந்தியாவில் எதிரொலித்துள்ளது.
ரூபாய் மதிப்பு
இதேவேளையில் கச்சா எண்ணெய் விலையும் அதிகளவில் உயர்ந்த நிலையில் இந்திய ரூபாய் மதிப்பு மிகவும் மோசமான நிலைக்குச் சென்றுள்ளது. இதன் வாயிலாகச் சனிக்கிழமை அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு முதல் முறையாக 78.178 ஆகச் சரிந்து அதிர்ச்சி கொடுத்துள்ளது.
ரஷ்யா உக்ரைன் போர்
பிப்ரவரியில் ரஷ்யா உக்ரைன் போர் துவங்கியதில் இருந்து ரூபாய் மதிப்பு அதிகப்படியான பாதிப்பை எதிர்கொள்ளத் தயாரானது. நடப்பு நிதியாண்டில் டாலருக்கு நிகரான இந்திய நாணயத்தின் மதிப்பு 2.71 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.
மும்பை பங்குச்சந்தை
கடந்த சில வாரங்களில் பங்குச்சந்தையில் ஏற்பட்ட விற்பனை ரூபாய் மதிப்பை கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது. வாரத்தின் கடைசி வர்த்தக நாளான நேற்று சென்செக்ஸ் குறியீடு 1016.84 புள்ளிகள் சரிந்து 54,303.44 புள்ளிகளை எட்டியுள்ளது. இதேபோல் நிஃப்டி குறியீடு 276.30 புள்ளிகள் சரிந்து 16,201.80 புள்ளிகளை எட்டியுள்ளது.
வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள்
வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் அக்டோபர், 2021 முதல் இந்திய பங்குச்சந்தையில் இருந்து இதுவரை 2.5 லட்சம் கோடி ரூபாயை திரும்பப் பெற்றுள்ளனர். இது டாலர் மதிப்பை வலிமை அடைய செய்வது மட்டும் அல்லாமல் ரூபாய் மதிப்பில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.


Click it and Unblock the Notifications