மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட் மற்றும் அமெரிக்க அரசு, கனடா, மெக்சிகோ மற்றும் சீனா ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது விதிக்கப்பட்ட வரி ஆகியவை உலகளாவிய சந்தைகளில் பெரும் அதிர்வலைகள் ஏற்பட்டுள்ளன.
இதன் எதிரொலியாக, இந்திய ரூபாய் மதிப்பு இன்று வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. திங்கள்கிழமை அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பு 0.6% வீழ்ச்சியடைந்து 87.1450 என்ற புதிய வரலாற்று சரிவை எட்டியுள்ளது.

சனிக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் 2025-26, தனிநபர் வருமான வரி சலுகைகள், சுகாதாரத்துறை மேம்பாடு மற்றும் பீகார் மாநிலத்திற்கான சிறப்பு திட்டங்கள் என பல்வேறு அறிவிப்புகளுடன் வெளியானது. இந்த அறிவிப்புகள் காரணமாக பங்குச்சந்தை தொடக்கத்தில் சிறிதளவு உயர்வை கண்டாலும், பின்னர் திங்கட்கிழமை காலையில் கடும் வீழ்ச்சியை சந்தித்தது.
பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்த புதிய வருமான வரி முறையின் கீழ் ரூ.12 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு வருமான வரி இல்லை என்ற அறிவிப்பு முதலீட்டாளர்களிடையே எதிர்பாராததாக இருந்தது. இந்த அறிவிப்பின் மூலம் சுமார் 1 கோடி பேர் வருமான வரி செலுத்த வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் தெரிவித்தார். இந்த அறிவிப்பு, நடுத்தர வர்க்கத்தினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்திய போதிலும், பங்குச் சந்தையிலும், முதலீட்டு சந்தையிலும் எதிர்பார்த்த அளவுக்கு இதற்கு சாதகமாக இல்லை.
அமெரிக்கா மற்றும் அதன் முக்கிய வர்த்தக கூட்டாளி நாடுகள் உடனான வர்த்தகப் போர் தீவிரமடைவதால், உலகளாவிய வர்த்தகப் போரின் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது. அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சீனா உலக வர்த்தக அமைப்பில் (WTO) அமெரிக்க நடவடிக்கைகளை எதிர்த்து நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளது.
இது சர்வதேச முதலீட்டு சந்தையில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது மட்டும் அல்லாமல், இந்திய சந்தையில் இருந்து வெளிநாட்டு முதலீடுகள் வெளியேற துவங்கியுள்ளது. இதன் காரணமாகவே ரூபாய் மதிப்பு இன்று பெரிய அளவிலான பாதிப்பை சந்தித்து 0.6% வீழ்ச்சியடைந்து 87.1450 என்ற புதிய வரலாற்று சரிவை எட்டியுள்ளது.
இன்று ரூபாய் மதிப்பு மட்டும் அல்லாமல் கொரிய வான், மலேசிய ரிங்கிட், இந்தோனேசிய ரூபாய் மற்றும் தாய் பாத் ஆகியவையும் கடுமையான வீழ்ச்சியை சந்தித்த ஆசிய நாணயங்களில் முக்கியமானதாகும். ஆசிய நாணயங்கள் டாலருக்கு எதிராக இன்று 0.9% முதல் 1.2% வரை வீழ்ச்சியடைந்துள்ளன.
ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில், இதை பயன்படுத்திக்கொண்டு வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்கள், இந்தியாவிற்கு அதிகப்படியான பணத்தை கொண்டு வரலாம், இதன் மூலம் வழக்கத்தை காட்டிலும் அதிக பணத்தை முதலீடு செய்ய பயன்படுத்தலாம். இதேபோல் பட்ஜெட்டிலும் என்ஆர்ஐ-களுக்கு சிறப்பு அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: டிரம்ப் நிர்வாகத்திலேயே ஒரு கருப்பு ஆடு? செய்தியாளர்களிடம் உண்மையை போட்டுடைத்த டிரம்ப்

ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானின் Toll Gate- ஆ? வாய்ப்பில்ல ராஜா என்கிறார் டிரம்ப்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?



Click it and Unblock the Notifications