இந்திய ரூபாயின் மதிப்பு சரியவில்லை.. டாலரின் மதிப்பு தான் ஏற்றம்.. நிர்மலா சீதாராமன் பரபர கருத்து!

சர்வதேச சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பானது வீழ்ச்சி காணவில்லை. அமெரிக்க டாலரின் மதிப்பு தான் உயர்ந்துள்ளது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க பயணம் மேற்கொண்டுள்ள மத்திய நிதியமைச்சரிடம், ரூபாய் சரிவு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, அமெரிக்க டாலர் மதிப்பானது சர்வதேச சந்தையில் வலுவான நிலையில் உள்ளது. இதனால் மற்ற அனைத்து நாடுகளின் நாணயங்களும் அதற்கு எதிராகவே செயல்படுகின்றன.

எனினும் வளரும் நாடுகளில் ரூபாயின் மதிப்பானது வலுவாகவே காணப்படுகின்றது.

வரலாறு காணாத சரிவு

வரலாறு காணாத சரிவு

ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையும் ஏற்றத்தினை நோக்கியதாகவே உள்ளது என கூறியுள்ளார்.

மத்திய நிதியமைச்சர் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் இந்த கருத்தானது, ரூபாயின் மதிப்பானது 82.68 ரூபாயாக வரலாறு காணாத அளவு கடந்த வாரம் சரிவினைக் கண்ட நிலையில் வந்துள்ளது. இது கடந்த வியாழக்கிழமையன்று 82.32 ரூபாயாக இருந்தது. இது இறுதியாக 82.24 ரூபாயாக முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.

 

வலுவான அடித்தளம்

வலுவான அடித்தளம்

இந்தியா பொருளாதாரத்தின் அடித்தளம் வலுவாக காணப்படுகின்றது. அன்னிய செலாவணி கையிருப்பும் சீராக உள்ளது. இதற்கிடையில் பணவீக்கம் என்பதும் மற்ற நாடுகளை காட்டிலும் சீராகவே உள்ளது. இதற்கிடையில் ரிசர்வ் வங்கியும் போதிய நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இது மேற்கோண்டு ரூபாய்க்கு சாதகமாக அமைந்துள்ளது.

முக்கிய காரணிகள்

முக்கிய காரணிகள்

எனினும் தொடர்ந்து ரஷ்யா - உக்ரைன் இடையேயான பிரச்சனை, வரலாறு காணாத அளவுக்கு ஏற்றம் கண்டு வரும் பணவீக்கம், பணவீக்கத்தினை கட்டுப்படுத்த மத்திய வங்கிகளின் வட்டி அதிகரிப்பு நடவடிக்கை என பல காரணிகளுக்கு மத்தியில், அன்னிய முதலீடானது தொடர்ந்து வெளியேறி வருகின்றது. இதற்கிடையில் ரூபாயின் மதிப்பானது சரிவினைக் கண்டு வருகின்றது.

பொருளாதார வளர்ச்சியில் தாக்கம்

பொருளாதார வளர்ச்சியில் தாக்கம்

தொடர்ந்து வெளிநாட்டு நிபுணர்கள் தொடங்கி, இந்திய நிபுணர்கள் வரையில் இந்திய பொருளாதார வளர்ச்சி குறித்தான கணிப்பினை செய்து வருகின்றன. எனினும் வளர்ச்சியிலேயே வைத்துள்ளது. இந்த வளர்ச்சி கணிப்புகளும் மற்ற நாட்டு வளர்ச்சி விகிதங்களை காட்டிலும் சீராகவே உள்ளது. இதுவும் சர்வதேச அளவில் நிலவி வரும் பதற்றங்களுக்கு மத்தியில், சப்ளை சங்கிலியில் தாக்கம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் சீனாவிலும் லாக்டவுன் நடவடிக்கையானது இருந்து வருகின்றது. இதுவும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+