வாரத்தின் முதல் வர்த்தக நாளில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து 2வது நாளாகச் சரிவைச் சந்தித்தது மட்டும் அல்லாமல் வரலாற்றுச் சரிவைப் பதிவு செய்துள்ளது.
வெள்ளிக்கிழமை முதல் முறையாக இந்திய ரூபாயின் மதிப்பு 82 ரூபாய் அளவீட்டைத் தொட்ட நிலையில் இன்று மீண்டும் புதிய வரலாற்றுச் சரிவை எட்டி மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் புதிய தலைவலியைக் கொடுத்துள்ளது.
இன்றைய ரூபாயின் மதிப்பு சரிவுக்கு என்ன காரணம், ஏற்கனவே ஆர்பிஐ டாலர் ஆதிக்கத்தைக் குறைக்க அதிகப்படியான டாலரை வெளிச் சந்தையில் விற்பனை செய்யத் துவங்கிய நிலையில் மீண்டும் ரூபாயின் மதிப்புச் சரிவு எதனால் ஏற்பட்டது.
ரூபாய் மதிப்பு
திங்கட்கிழமை காலை வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 82.6725 அளவுடன் துவங்கி 82.69.50 வரையில் சரிந்துள்ளது. வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 82.33 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
10 சதவீத சரிவு
இந்த வருடம் மட்டும் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 10 சதவீதத்திற்கும் அதிகமான சரிவைப் பதிவு செய்துள்ளது, அதிலும் குறிப்பாகக் கடந்த 10 நாட்களில் 2 சதவீதத்திற்கும் அதிகமான சரிவை இந்திய ரூபாயின் மதிப்புப் பதிவு செய்துள்ளது.
என்ன காரணம்
டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பின் சரிவுக்கு மிக முக்கியமான காரணமாக விளங்குவது OPEC+ அறிவிப்புக்குப் பின்பு கச்சா எண்ணெய் விலை உயர்வு, அமெரிக்காவின் வேலைவாய்ப்புத் தரவுகள், பத்திர சந்தையில் அதிகப்படியான முதலீடுகள், கார்ப்பரேட் நிறுவனங்கள் அதிகப்படியான முதலீடுகளை வெளியேற்றியது, டாலருக்கான தேவை இந்தியாவில் மட்டும் அல்லாமல் உலகளவில் அதிகரித்துள்ள காரணத்தால் அனைத்து ரூபாயின் மதிப்பும் பாதிக்கப்பட்டு உள்ளது.
ரஷ்ய - உக்ரைன் போர்
ரஷ்ய - உக்ரைன் போருக்கு பின்பு இந்திய ரிசர்வ் வங்கி சுமார் 100 பில்லியன் டாலர் மதிப்பின் அன்னிய செலாவணிகளைச் செலவு செய்துள்ளது. ஆனாலும் ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாமல் உள்ளது.
விலைவாசி
இந்தத் தொடர் ரூபாய் மதிப்பு சரிவால் இந்தியாவில் இறக்குமதி செய்யும் அனைத்துப் பொருட்கள், உதிரிப்பாகங்கள், உற்பத்தி பொருட்கள், மென்பொருள், சேவைகள் ஆகிய அனைத்தின் விலையும் அதிகரிக்க உள்ளது. ஏன் ஐபோன் விலை கூட அதிகரிக்கலாம்.. !!


Click it and Unblock the Notifications