வீழ்வேன் என்று நினைத்தாயோ? வரலாற்று சரிவிலிருந்து மீண்ட இந்திய ரூபாய்!

சில காலமாக டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வந்தது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் மே 21-ஆம் தேதி அன்று இந்திய ரூபாய், சரிவிலிருந்து மீண்டு 50 பைசா அதிகரித்து, 96.36 என்ற அளவை எட்டியுள்ளது. ரூபாய் மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் கூறப்படுகிறது.

ஏன் இந்த திடீர் மாற்றம்?: போர் பதற்றம் நிலவியதால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை தொடர்ந்து அதிகரித்தது. இதனால் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்ததை பார்த்தோம். ஆனால் தற்போது இந்த அரசியல் பதற்றங்கள் சற்று குறைந்தது போல் தெரிவதால், கச்சா எண்ணெயின் விலையும் குறைந்துள்ளது. இதுவும் ரூபாயின் மதிப்பு அதிகரிக்க காரணமாகியுள்ளது.

பொதுவாக இந்தியாவில், உள்ளூர் உற்பத்தியைத் தாண்டி சில பொருட்கள் வெளியூரில் இருந்து தான் இறக்குமதி செய்யப்படுகிறது. அப்படி இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு நாம் டாலரில் பணம் செலுத்த வேண்டும். கச்சா எண்ணெய்யின் விலை தொடர்ந்து அதிகரித்தால் நாம் அதிக டாலர் கொடுத்து கச்சா எண்ணெய்யை வாங்க வேண்டி வரும். இதனால் ரூபாய்யின் மதிப்பு குறையும். அதாவது எங்கெங்கு டாலரின் தேவை அதிகமாகிறதோ? அப்பொழுதெல்லாம் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியை எட்டும்.

வீழ்வேன் என்று நினைத்தாயோ? வரலாற்று சரிவிலிருந்து மீண்ட இந்திய ரூபாய்!

கடந்த புதன்கிழமை அன்று இந்திய ரூபாய் மிக மிக மோசமான நிலைக்குச் சென்றது. ஒரு டாலரின் மதிப்பு 96.95 என்ற அளவை எட்டியது. அதன் பின்னர் மார்க்கெட் முடியும் நேரத்தில் மீண்டும் 96.86 பைசா என்ற அளவில் முடிவடைந்தது.பிறகு வியாழக்கிழமை வர்த்தக ஆரம்பிக்கும்போதே 96.25 என்ற அளவில் தொடங்கியது. ஒரு கட்டத்தில் 96.05 வரை எகிறியது. இடையில் 96.60 என்ற அளவை எட்டி, இறுதியில் 50 பைசா லாபத்துடன் 96.36-இல் முடிவடைந்தது.

எப்பொழுதெல்லாம் ரூபாயின் மதிப்பு அதள பாதாளத்திற்கு செல்கிறதோ? அப்பொழுதெல்லாம் ஆர்பிஐ தலையிட்டு சில விஷயங்களை செய்யும். அந்த வகையில் வட்டி விகிதங்களை அதிகரிக்கவும் ஆர்பிஐ பரிசீலித்து வருகிறது. இது முதலீடாளர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர் காரணமாக ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு முற்று புள்ளி வைக்கும் வகையில், அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் அமைதி ஒப்பந்தம் இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டதாக கூறியுள்ளார். இது உலகெங்கிலும் பாசிட்டிவான அதிவலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+