தொடர்ந்து வீழ்ச்சி காணும் இந்திய ரூபாய்.. கவலையில் மத்திய அரசு..!

கடந்த சில நாட்களாகவே அதிரடியாக வீழ்ச்சி கண்டு வரும் அமெரிக்கா டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது, தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருகிறது.

இதற்கு முக்கிய காரணம் ஈரான் தனது முக்கிய இராணுவத் தளபதி சுலைமானி கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் விதமாக, ஈரான் அமெரிக்காவின் படைகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.

அதுவும் ஒன்று அல்ல இரண்டு இடங்களில் அல்ல, 12 இடங்களில் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.

ரூபாய் வீழ்ச்சி

ரூபாய் வீழ்ச்சி

இதனால் கச்சா எண்ணெய் விலை 4.53 சதவிகிதம் ஏற்றம் கண்டுள்ளது. இதன் எதிரொலியாக இந்திய சந்தையில் கச்சா எண்ணெய் விலை 4,546 ரூபாயாக ஏற்றம் கண்டுள்ளது. இதன் எதிரொலியாக 71.93 ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது. மேலும் இன்று காலை 72.115 ரூபாயாக வீழ்ச்சி கண்டு, தற்போது 71.93 ரூபாயாக உள்ளது.

தாறுமாறான ஏற்றம்

தாறுமாறான ஏற்றம்

ஈரான் அமெரிக்காவை தாக்கியதால் மத்திய கிழக்கு பகுதிகளில் உச்சகட்ட பதற்றம் நிலவி வருகிறது. இதனால் கச்சா எண்ணெய் விலையும் தாறுமாறான ஏற்றம் கண்டு வருகிறது. கச்சா எண்ணெய் விலை உயர்வால், அமெரிக்கா டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பும் தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருகிறது.

பிரெண்ட் ஆயில் விலை

பிரெண்ட் ஆயில் விலை

சர்வதேச சந்தையில் WTI கச்சா எண்ணெய் விலையானது 62.86 டாலராக ஆக வீழ்ச்சி கண்டுள்ளது. எனினும் இது இன்று காலை 65.65 டாலராக வர்த்தகமாகி பின் கீழிறங்கியுள்ளது. இதே பிரண்ட் கச்சா எண்ணெய் விலை 68.50 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. இது இன்று காலை 71.28 டாலர்களாகவும் வர்த்தகமாகியிருந்தது.

இந்திய சந்தை வீழ்ச்சி

இந்திய சந்தை வீழ்ச்சி

இந்திய ரூபாய் வீழ்ச்சி கண்டுள்ள இதே நிலையில், மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 145 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 40,724 ஆகவும் வர்த்தகமாகி வருகிறது. இதே தேசிய பங்கு சந்தை நிஃப்டி 53 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 11,999 ஆகவும் வீழ்ச்சி கண்டு வர்த்தகமாகி வருகிறது. இதே அமெரிக்கா டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு தற்போது 71.93 ஆகவும் வர்த்தகமாகி வருகிறது.

எண்ணெய்க்காக அதிக செலவு

எண்ணெய்க்காக அதிக செலவு

இந்தியாவில் கச்சா எண்ணெய் உற்பத்தியானது மிக மிக குறைவாக உள்ள நிலையில், எரிபொருளுக்காக அதிகளவில் இறக்குமதியையே நம்பி உள்ளது. இதனால் கச்சா எண்ணெய்க்காக அதிக செலவு செலவிட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. மேலும் இந்த விலையேற்றத்தால் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை அதிகரிக்க வழிவகுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ரூபாயின் மதிப்பும் தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருகிறது.

அன்னிய முதலீடுகள் வெளியேற்றம்

அன்னிய முதலீடுகள் வெளியேற்றம்

வீழ்ச்சி கண்டு வரும் ரூபாயின் மதிப்பால், இந்திய சந்தைகளும் தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருகிறது. இதன் எதிரொலியாக 682.23 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை அன்னிய முதலீட்டாளர்கள் விற்று வெளியேறியுள்ளனர். இது ஒரு புறம் எனில் நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி வெறும் 5 சதவிகிதமாக இருக்கும் என்றும் மத்திய புள்ளியியல் அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியாகும்.

முதலீடுகள் குறையலாம்

முதலீடுகள் குறையலாம்

பொருளாதாரம் தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வரும் நிலையில் மத்திய அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை எனில், அதிகளவிலான அன்னிய முதலீடுகள் வெளியேறலாம். மேலும் வரும் காலாண்டுகளில் முதலீடுகளும் குறையலாம் என்றும் அனுமானம் நிலவி வருகிறது. இதனால் ரூபாயின் மதிப்பும் வீழ்ச்சி கண்டு வருகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+