அமெரிக்கா டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று காலை தொடக்கத்திலேயே 11 பைசா குறைந்து, 73.64 ரூபாயாக வர்த்தகமாக தொடங்கியது.
எனினும் தற்போது 73.68 ரூபாயாக வீழ்ச்சி கண்டு காணப்படுகிறது. நேற்றைய முடிவு விலை 73.55 ரூபாய் என்பது கவனிக்கதக்கது.

கடந்த வியாழக்கிழமையன்று ரூபாயின் மதிப்பு அன்னிய முதலீடுகள் வரத்து, காரணமாக ரூபாயின் மதிப்பு 73.54 ரூபாயாக சற்று அதிகரித்து காணப்பட்டது.
இந்த நிலையில் டாலர் இன்டெக்ஸ் குறியீடு 0.11 சதவீதம் அதிகரித்து 93.05 ஆக அதிகரித்து காணப்படுகிறது. சர்வதேச சந்தைகள் வளர்ச்சி பாதையில் இருக்கும் நிலையில், இந்திய ரூபாயின் மதிப்பு சற்று சரிவில் காணப்படுகிறது. இதற்கிடையில் மும்பை பங்கு சந்தையிலன் சென்செக்ஸ் 136 புள்ளிகள் அதிகரித்து, 40,694 ஆக காணப்படுகிறது. இதே தேசிய பங்கு சந்தையின் நிஃப்டி 41 புள்ளிகள் அதிகரித்து 11,937 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகின்றது.
இதற்கிடையில் ஐசிஐசிஐ டேரக்ட் நிறுவனம், 73.53 - 73.78 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
கச்சா எண்ணெய் வர்த்தகம் எதிர்பார்த்ததை விட வியாழக்கிழமையன்று காலையில் காலை நேர வர்த்தகத்தில், கச்சா எண்ணெய் இருப்பானது அதிகரித்ததாக வந்த நிலையில், டாலரின் மதிப்பு சற்று அதிகரித்து காணப்பட்டது. அதிலும் தற்போது கச்சா எண்ணெய் தேவையானது தென் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில், அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் குறையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதோடு அமெரிக்காவில் அடுத்த மாத தொடக்கத்தில் வரவிருக்கும் அதிபர் தேர்தலுக்கு முன்பு, அமெரிக்காவில் ஊக்கத் தொகை பற்றிய அறிவிப்புகள் வரலாம். இதன் காரணமாக பொருளாதார வளர்ச்சிக்கு இது சாதகமாக அமையும். இது பங்கு சந்தைகளில் எதிரொலிக்கலாம். இது சர்வதேச சந்தையில் முதலீடுகளை அதிகரிக்க காரணமாக அமையும். இதனால் இந்திய சந்தைகளில் முதலீடுகள் குறையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும் வரவிருக்கும் தேர்தல் நிகழ்வுகளினால் சந்தையில் ஏற்ற இறக்கம் காணப்படலாம். இதனால் ரூபாயின் மதிப்பு வலுவிலக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் ரூபாயின் மதிப்பு 73 - 73.60 ரூபாய்க்குள் இருக்கலாம் என்றும் எம்கே குளோபல் கணித்துள்ளது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications