இந்திய ரூபாய் அமெரிக்க டாலருக்கு எதிராக வரலாறு காணாத சரிவு வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று பதிவாகியுள்ளது. ஏற்கனவே ரூபாய் மதிப்பு தடுமாறி வரும் வேளையில், 84.11 ரூபாய் என்ற அளவில் குறைந்து புதிய வரலாற்றுச் சரிவு பதிவு செய்து பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் மதிப்பு சரியும் காரணத்தால் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்கள் அனைத்தும் விலை அதிகரிக்கும் இது நாட்டு மக்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கும். நாளை அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடக்க இருக்கும் வேளையில், இன்று ரூபாய் மதிப்பில் பெரும் சரிவு ஏற்பட்டு உள்ளது.

ரூபாய் மதிப்பு சரிவால் என்ன பெருசா நடந்துவிட போகுது?: ரூபாய் மதிப்பு சரிவால் இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களின் விலையும் உயரும். இந்தியா ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ரஷ்யா போன்ற நாடுகள் உடன் சொந்த நாணயத்தில் வர்த்ததம் செய்ய ஒப்பந்தம் செய்திருந்தாலும், பெரும்பாலான நாடுகள் டாலரில் தான் தனது பொருட்களையும், சேவைகளையும் அளிக்கிறது.
இதனால் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் ஸ்மார்ட்போன், தங்கம், சோலார் பேனல், வெள்ளி, எலக்ட்ரிக் வாகனங்களுக்கான பேட்டரி என பல பொருட்கள் விலை உயர போகிறது. உதாரணமாக இது திருமண சீசன் என்பதால் தங்கம் வாங்குவோருக்கு ரூபாய் மதிப்பு சரிவு பெரும் தலைவலியாக மாறக்கூடும்.
ரூபாய் மதிப்பு சரிவுக்கு இந்திய பங்குச் சந்தையில் இருந்து தொடர்ச்சியான வெளிநாட்டு போர்ட்போலியோ முதலீட்டாளர்களின் (FPI) வெளியேறுவதே இதற்கு முதன்மையான காரணமாக உள்ளது. ரூபாய் பலவீனமடைந்ததற்கு 3 முக்கிய காரணங்கள் உள்ளன:
FPI வெளியேற்றம்: இந்திய பங்குச் சந்தையில் வெளிநாட்டு போர்ட்போலியோ முதலீட்டாளர்கள் அதிகளவில் தங்களது பங்கு இருப்புகளை விற்பனை செய்து முதலீட்டை வெளியேற்றுவதால் ரூபாய் மதிப்பு குறைந்து வருகிறது.
2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மட்டும், வெளிநாட்டு போர்ட்போலியோ முதலீட்டாளர்கள் சுமார் ரூ.94,000 கோடி (சுமார் 11.2 பில்லியன் அமெரிக்க டாலர்) மதிப்பிலான முதலீடுகளை வெளியேற்றியுள்ளனர். இது மிகப்பெரிய மாதாந்திர முதலீட்டு வெளியேற்றமாக உள்ளது.
வலுவான டாலர் மதிப்பு: அமெரிக்க தேர்தலில் ஆட்சி மாற்றம், போர் பதற்றங்கள் என உலகளாவிய பொருளாதார காரணிகளால் அமெரிக்க டாலர், ரூபாய் உள்ளிட்ட முக்கிய நாணயங்களுக்கு எதிராக வலுவடைந்துள்ளது.
இந்திய பங்குச் சந்தையும் திங்களன்று கடுமையான வீழ்ச்சியைக் கண்டது. சென்செக்ஸ் 1,109 புள்ளிகள் மற்றும் நிஃப்டி 366 புள்ளிகள் வீழ்ச்சியடைந்தது. உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மை மற்றும் ரூபாய் பலவீனம் ஆகியவற்றின் காரணமாக இந்த வீழ்ச்சி ஏற்பட்டது. மும்பை பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் சுமார் 8 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளை இன்று இழந்துள்ளனர்.
ரூபாய் மதிப்பின் சரிவை தணிக்க, இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வெளிநாட்டு நாணய சந்தையில் அதிகளவிலான டாலர்களை விற்பனை செய்து ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியைத் தடுக்க உள்ளது. இருப்பினும், ரிசர்வ் வங்கி எந்த வகையில் செயல்படும் என்பதில் பெரும் கேள்வி உள்ளது.
More From GoodReturns

ரூபாய் மதிப்பு வரலாற்று சரிவு.. 100-ஐ தாண்டுமா.. இந்திய பொருளாதாரத்திற்கு பெரும் சவால்..!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!



Click it and Unblock the Notifications