உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடுகளில் ஒன்றான ரஷ்யா தனது அண்டை நாடான உக்ரைன் மீது போர் தொடுத்ததில் இருந்து அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பா என ஜி7 நாடுகள் உடன் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு வந்த நிலையில் தற்போது உள்நாட்டிலேயே பிரச்சனைகளை எதிர்கொண்டு உள்ளது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தலைமையிலான அரசு உக்ரைன் மீது போர் தொடுத்த போது அந்நாட்டு மக்களே கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தேசிய உணர்வு, நாட்டின் பாதுகாப்பு என பலவற்றை கூறி புடின் அரசு சமாளித்து, ஆனால் இப்போது பிரச்சனை வேறு.

விளாடிமிர் புடின் ஆதரவில் வளர்ந்த வாக்னர் (wagner) என்ற பாதுகாப்பை படை குழு தற்போது அவரது அரசுக்கு எதிராக நிற்பது மட்டும் அல்லாமல் ரஷ்ய ராணுவத்துடன் போரிட தயாராகியுள்ளது. உலகில் பல நாடுகளின் பொருளாதாரம் மற்றும் அரசு உள்நாட்டு போர், உள்நாட்டு கிளர்ச்சியாளர்கள், உள்நாட்டு அரசியல் பிரச்சனைகளால் மட்டுமே வீழ்ந்துள்ளது.
ரஷ்யாவில் உள்நாட்டு மோதல் துவங்கி உள்ள நிலையில் வாக்னர் குழுவுக்கு எவ்விதமான முக்கிய ஆதாரங்களும் சென்றுவிட கூடாது என பல சொத்துகளை ரஷ்ய ராணுவமே தனது சொந்த நாட்டு சொத்துக்களை குண்டுபோட்டு தகர்கிறது.
இந்த நிலையில் ரஷ்யாவின் உள்நாட்டு போர் இந்திய பொருளாதாரத்தை எப்படி பாதிக்கும்..?
இந்தியா தற்போது அதிகளவிலான கச்சா எண்ணெய்-ஐ ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்தும் வேளையில் உள்நாட்டு ராணுவ மோதல் மூலம் அந்நாட்டின் கச்சா எண்ணெய் உற்பத்தி முதல் கச்சா எண்ணெய் விநியோகம் வரையில் பாதிக்கப்பட்ட அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது.
இந்தியாவுக்கு மாற்று கச்சா எண்ணெய் சப்ளையர்கள் இருந்தாலும் ரஷ்யா கொடுக்கும் பெரிய விலை தள்ளுபடியை பிற நாடுகள் வழங்காது. இந்தியா வாங்கும் கச்சா எண்ணெய் விலை அதிகரித்தால் கட்டாயம் இந்தியாவில் எரிபொருள் விலை உயர்த்தும் நிலை உருவாகும், இதேவேளையில் மத்திய அரசு பல மாதங்களாக பெட்ரோல், டிசல் விலையை உயர்த்தாமல் இருப்பதால் விலை ஈடு செய்யப்பட்டாலும், அரசுக்கான வருமானம் இதிலிருந்து பாதிக்கப்படும்.

இதேபோல் இந்தியா பல வருடங்களாக ரஷ்யாவில் இருந்து ராணு ஆயுதங்களை பெறுவதற்காக காத்திருக்கிரது, இந்த உள்நாட்டு ராணுவ மோதல் காரணமாக இதன் டெலிவரியும் தாமதமாக வாய்ப்புகள் அதிகரிக்கும். இந்தியா சீனா மத்தியிலான எல்லை பிரச்சனை இன்னும் தீராமல் இருக்கும் வேளையில் ரஷ்யாவின் ஆயுதங்கள் இந்தியாவுக்கு மிகவும் முக்கிய தேவையாக உள்ளது.
இந்தியா ஏற்கனவே ரஷ்யா உடனான உள்நாட்டு நாணய பரிமாற்ற பேச்சுவார்த்தை நிறுத்தியுள்ளதால், இதனால் பெரிய பாதிப்பு இருக்காது. ஆனால் ரஷ்யாவின் கச்சா எண்ணெய் சப்ளை, முக்கிய கெமிக்கல் இறக்குமதி, ஆயுத இறக்குமதி ஆகியவற்றின் அடிப்படையில் கணிசமாக தாக்கம் இந்திய பொருளாதாரத்தில் ஏற்பட வாய்ப்புகள் இருந்தாலும், இந்தியாவின் வேகமான வளர்ச்சி பாதையில் இது சமாளிக்க கூடியவையே.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!



Click it and Unblock the Notifications