ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் 25 பேர் உட்பட 26 பேர் கொல்லப்பட்ட சம்பவம் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் மீது கடுமையான நடவடிக்கைகளை இந்தியா எடுத்திருக்கிறது.
இந்த சூழலில் பல்வேறு நாடுகளும் இந்தியாவிற்கு ஆதரவு கரம் நீட்டி இருக்கின்றன . சீனா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளைத் தவிர பல்வேறு நாடுகளும் இந்தியாவுக்கு துணை நிற்பதாக அறிவித்துள்ளன. இந்த விவகாரத்தில் ரஷ்யா யார் பக்கம் நிற்கிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. ரஷ்ய அரசு இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளுடனும் நட்புறவு கொண்டிருக்கிறது.

தாக்குதல் தொடர்பாக ரஷ்யாவுக்கான இந்திய தூதர் வினய் குமார் ரஷ்யாவின் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் ஆண்ட்ரி ருடென்கோவை சந்தித்து பேசி இருக்கிறார். அப்போது ரஷ்யா தரப்பில் சர்வதேச அளவில் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாராக இருக்கிறோம் என தெரிவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது. முன்னதாக ரஷ்யாவுக்கான இந்திய தூதரான வினய் குமார் ரஷ்ய வெளியுறவுத்துறை துணை அமைச்சரை சந்தித்து பஹல்காம் தாக்குதல் குறித்தும் இது தொடர்பாக இந்தியா எடுக்க எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் விளக்கம் தந்துள்ளார்.
இதனிடையே ரஷ்யா இந்தியாவுடன் கைகோர்ப்பதை உணர்ந்து கொண்ட பாகிஸ்தான் அரசு உடனடியாக தங்கள் நாட்டு பிரதிநிதியை அனுப்பி ரஷ்யாவின் வெளியேறுத்துறை துணை அமைச்சரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறது. ரஷ்ய அரசு தங்களுடைய வெளியுறவுத்துறை துணை அமைச்சர் பாகிஸ்தான் நாட்டு தூதர் முகமது காலி ஜமாலியை சந்தித்து பேசியதாக அறிக்கை வெளியிட்டிருக்கிறது. இந்த ஆலோசனையின் போது ரஷ்யா மற்றும் பாகிஸ்தான இடையிலான இருநாட்டு உறவுகள் குறித்தும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள பதற்றங்களை தணிப்பது தொடர்பான நடவடிக்கைகள் குறித்தும் பேசப்பட்டதாக தெரிகிறது.
இதனிடையே இரு தரப்பிடமும் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கும் ரஷ்ய வெளியுறவுத் துறையின் துணை அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இரு தரப்பினரும் கட்டுப்பாட்டை கடைபிடிக்குமாறு வலியுறுத்தியுள்ளார். அமைதியான முறையில் இந்தியாவும் பாகிஸ்தானும் இந்த பிரச்சனையை பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டிருக்கிறார். ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தையாக இது அமைய வேண்டும் என்றும் புதின் நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.
ரஷ்யாவின் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் மற்றும் இந்திய தூதருக்கு இடையிலான சந்திப்புக்கு பிறகு இந்த அறிக்கையை ரஷ்ய அரசு வெளியிட்டு இருக்கிறது. பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக இணைந்து செயல்பட தயார் என ரஷ்யா உறுதி தந்து இருப்பதாக மத்திய அரசின் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.முன்னதாக பாகிஸ்தான் அரசு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான பதற்றத்தை தணிப்பதற்கு ரஷ்யா, சீனா மற்றும் மேற்கத்திய நாடுகள் முக்கிய பங்காற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications