ரஷ்யா: இந்திய விமான சேவை நிறுவனங்கள் தங்கள் நாட்டுக்குள் உள்ளூர் விமான சேவைகளை இயங்க வேண்டும் என ரஷ்யா தரப்பில் கேட்டுக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரஷ்யா உக்ரைன் இடையினான சண்டை காரணமாக மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவை சேர்ந்த குறிப்பிட்ட நிறுவனங்கள் மீதும் ரஷ்யர்கள் மீதும் கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இதன் காரணமாக பொருளாதார சிக்கல்களை சந்தித்து ரஷ்ய அரசு தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளும் என அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் கருதின.

ஆனால் ரஷ்யா உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்தவில்லை. இருந்தாலும் தங்களுடைய பொருளாதாரத்தை நிலையாக வைத்திருப்பதற்கு மாற்று வழிகளை கையாண்டு வருகிறது.
அந்த வகையில் ரஷ்ய அரசு இந்தியாவை சேர்ந்த விமான சேவை நிறுவனங்களை தங்கள் நாட்டிற்குள் உள்நாட்டு விமான சேவைகளை வழங்குமாறு அழைப்பு விடுத்துள்ளது. எக்னாமிக் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தி அடிப்படையில் ரஷ்யா இது தொடர்பாக சீனா , இந்தியா உள்ளிட்ட நாடுகளின் உதவியை நாடியது தெரியவந்துள்ளது.
இதன்படி இந்தியா, சீனாவை சேர்ந்த விமான சேவை வழங்கக்கூடிய நிறுவனங்கள் ரஷ்ய வான் வெளியில் சுதந்திரமாக செயல்படலாம் அதேபோல நீர் வழி மற்றும் பிற போக்குவரத்து முறைகளிலும் சுதந்திரமாக செயல்பட முடியும் என சொல்லப்படுகிறது.
ஆனால் இந்தியாவை சேர்ந்த விமான சேவை நிறுவனங்கள் இந்த சலுகையை ஏற்க முன்வரவில்லை என தெரிகிறது . மேற்கத்திய நாடுகளின் பொருளாதார தடை அமலில் இருப்பதால் தாங்கள் விமானத்தை குத்தகைக்கு எடுத்துள்ள நிறுவனங்கள் மற்றும் தங்களுக்கு விமான காப்பீடு வழங்கக்கூடிய நிறுவனங்கள் இதனை ஏற்காது என இந்தியாவை சேர்ந்த விமான சேவை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. மேலும் இந்தியாவிற்குள்ளேயே விமான சேவை வழங்குவதற்கு தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனவாம்.
உக்ரைன்சண்டைக்கு முன்பாக ரஷ்யாவில் போயிங் மற்றும் ஏர்வேஸ் விமான நிறுவனங்களின் விமானங்கள் பெருமளவில் சேவையாற்றின. ஆனால் பொருளாதார தடைகளை தொடர்ந்து போயிங் மற்றும் ஏர்பஸ் நிறுவனங்கள் ரஷ்ய நிறுவனங்களுக்கு விமானங்களை டெலிவரி செய்யாமல் தவிர்த்து விட்டன.
அவற்றை பிற நாடுகளுக்கு விற்பனை செய்து விட்டன. அதேபோல மேற்கத்திய நாடுகளில் இருந்து வர வேண்டிய விமான பாகங்கள் மற்றும் விமானத்தை இயக்குவதற்கான மென்பொருள் ஆகியவற்றிற்கும் பெரிய அளவில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
விமான சேவையை பொறுத்தவரை நிறுவனங்கள் அவ்வப்போது விமான பாகங்களை மாற்ற வேண்டும், தங்களுடைய மென்பொருள்களை அப்டேட் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட நடைமுறைகள் இருக்கின்றன. ஆனால் பொருளாதார தடையால் ரஷ்யாவில் தற்போது சேவை வழங்கும் நிறுவனங்கள் சிக்கலுக்கு ஆளாகியுள்ளன.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications