உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்து முழுமையாக 2 ஆண்டுகள் முடிந்து, 3வது வருடத்திற்குள் நுழைந்துள்ளது. 2 வருடமாக நடக்கும் உக்ரைன் - ரஷ்யா போர் உலக நாடுகளின் தலையீட்டாலும், ஆதரவாலும் பெரும் பிரச்சனையாக மாறியுள்ளது மட்டும் அல்லாமல் கச்சா எண்ணெய் விநியோகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதன் நீட்சியாக ரஷ்யாவில் உள்நாட்டு நுகர்வோர் மற்றும் விவசாயிகளின் தேவையைச் சமாளிக்கவும், சுத்திகரிப்பு நிலையங்களின் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளவும், ரஷ்யா மார்ச் 1 ஆம் தேதி முதல் அடுத்த ஆறு மாதங்களுக்கு gasoline எனப்படும் பெட்ரோல் வகை எரிபொருள் ஏற்றுமதிக்குத் தடை விதிக்க உள்ளது.

இந்தத் தடையை பற்றி முதலில் RBC பத்திரிக்கை வெளியிட்ட நிலையில், சில மணிநேரத்தில் ரஷ்யாவின் துணைப் பிரதமர் அலெக்சாண்டர் நோவக் அலுவலகச் செய்தித் தொடர்பாளர் அதை உறுதிப்படுத்தினார். இந்தத் தடை மூலம் சர்வதேச சந்தையில் எரிபொருள் தட்டுப்பாடு உருவாகும், இதேவேளையில் ரஷ்யாவின் இந்த முடிவால் கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்கு எவ்விதமான பாதிப்பும் இல்லை.
ரஷ்யாவில் உள்நாட்டு விலை உயர்வு மற்றும் தட்டுப்பாட்டைச் சமாளிக்க, கடந்த ஆண்டுச் செப்டம்பர் முதல் நவம்பர் வரை ரஷ்யா இதேபோன்ற தடையை அறிவித்திருந்தது. அப்போது, முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளான பெலாரஸ், கஜகஸ்தான், அர்மேனியா மற்றும் கிர்கிஸ்தான் ஆகிய நாடுகளைத் தவிர மற்ற நாடுகளுக்கு இந்தத் தடை பொருந்தும் என அறிவித்துள்ளது.
இந்த முறை, யூரேசியன் பொருளாதார ஒன்றிய உறுப்பு நாடுகள், மங்கோலியா, உஸ்பெகிஸ்தான் மற்றும் ஜார்ஜியாவின் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சி பகுதிகளான தெற்கு ஒசெடியா மற்றும் அப்காசியா ஆகியவற்றுக்கு இந்தத் தடை பொருந்தாது எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது,
இந்த நடவடிக்கை குறுகிய காலத்திற்கு உலகளாவிய பெட்ரோல் விலையைப் பாதிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இந்தத் தடை நீண்ட காலத்திற்கு நிலைக்குமா என்பது இன்னும் தெளிவாக இல்லை.
மேலும் ரஷ்யாவில் இருந்து இந்தியா இறக்குமதி செய்வது கச்சா எண்ணெய் தான், இதேபோலக் கடந்த சில மாதங்களாக வெனிசூலா நாட்டில் இருந்து கச்சா எண்ணெய் வருவதால், இந்தியா ரஷ்யாவிடம் இருந்து வாங்கும் கச்சா எண்ணெய் வாங்கும் அளவும் குறைந்துள்ளது. இதேபோல் இந்தியாவில் பொதுத் தேர்தல் நடக்க உள்ள வேளையில் பெட்ரோல் விலை உயரும் வாய்ப்பு மிகவும் குறைவு.
More From GoodReturns

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

அபாயகட்டத்தில் ஈரான் போர்..!! தரைவழி தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா..!!

ஈரான் போருக்கு பிரேக்: டிரம்ப் போடும் புது கணக்கு..!! கச்சா எண்ணெய் பிரச்சினை தீருமா? தீராதா?

Germany: கிளீன் எனர்ஜி எல்லாம் இனி வேலைக்கு ஆகாது.. பழையப்படி நிலக்கரிக்கு போக வேண்டியது தான்..!!

ஈரான் போருக்கு மத்தியில் தங்க சந்தையில் புயலை கிளப்பிய புதின்!! வெளிவந்தது ரஷ்யாவின் தங்க புதையல்!!

Trump முன்னுக்கு பின் முரண்.. வெள்ளை கொடி தூக்கிய பின்பு ஈரானில் தாக்குதல்.. 2 எரிவாயு தளங்கள் துவம்சம்..!!

யாருடைய கட்டுப்பாட்டில் ஹார்முஸ் ஜலசந்தி? அமெரிக்க அதிபர் டிரம்ப் சொல்லும் புது கணக்கு

'எனர்ஜி லாக்டவுன்' உலகம் நாடுகளை அச்சுறுத்தும் புதிய பிரச்சனை.. இந்த 10 விஷயம் நடக்கணும்..!!

பொட்டில் அடித்தது போல் சொன்ன Iran.. டிரம்ப் மீது சுத்தமா நம்பிக்கையில்லை.. JD Vance வர சொல்லுங்க..!!

டிரம்ப் வாயை திறந்தாலே பொய் தானா? - ஈரான் ராணுவம் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!!

ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு அனுமதி, ஆனால்..? ஈரான் போடும் 2 கண்டிஷன்கள்!!



Click it and Unblock the Notifications